ஒரு வடஇந்திய கிராமத்தில், ஒரு உள்ளூர் ஊழியருடன் ஒரு பிரசித்த பெற்ற ஊழியர் வீடு வீடாக சென்று இயேசுவை குறித்து போதித்தாராம். அருகில் இருந்த விசுவாசியின் குடிசை வீட்டிற்கு சென்ற போது நாற்காலிகள் இல்லை.ஆனாலும் அவர்கள் அருமையாய் உபசரித்தார்கள். ஜெபவேளையின் போது ஜெபித்த உள்ளூர் ஊழியர் அங்க காரியங்களை குறித்து ஜெபித்த பின்,நாற்காலிகளை தேவன் அந்த வீட்டிற்கு தறுமாறும் வேண்டினார்.
ஜெபம் முடிந்தவுடன் தாமதிக்காமல்,அந்த பிரசித்தி பெற்ற ஊழியர் தம் உதவியாளரை நாற்காலிகளை வாங்க அனுப்பி , இரு நாற்காலிகளை அவ்வீட்ற்க்கு அளித்தார். இது குறய்ட்து அந்த உள்ளூர் ஊழியர் அந்த பிரசித்தி பெற்ற ஊழியரை வினவீனபோது அவர் தாம் தேவனின் செய்கையாய் இருப்பதாக கூறினார்!! பின் வரும் வசனங்களை முன் நிறுத்தி சபையினரை குறித்த தேவனுடைய முன்குறிப்பை தெரியப்படுத்தினார்!
எபேசியர் 2:10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடையசெய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
ஆம்., சிறு சிறு விஷயங்களை நாம் செய்துகொள்ளும் படி தேவன் அருள் செய்திருக்கும் போது, அவைகளையும் ஜெபத்தில் கொண்டுவந்து கிரியை செய்யாமல் இருப்பது சபையில் உள்ளவர்களுக்கு தகுதியானதல்ல..
பின் வரும் வசனமும் அவ்வாறே கூறுகிறது!!
நீதிமொழிகள் 3:27 நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
இயேசு கூறின நல்ல சமாரியன் கதையும் திராணிக்குத்தக்கதாய் தக்கநேரத்தில் உதவிய ஒரு மனிதனை பற்றியதே!!! அவன் செய்ய முடிந்த உதவிக்கு ஜெபம் செய்து கொண்டிருக்கவில்லை என்பது கவனிக்க தக்கது...
சபைக்கு உட்பட்டவர்கள் இயேசுவின் சாயலுக்கு முன் குறிக்கப்பட்டவர்களானதால் அவரை போலவே நாமும் நன்மை செய்வோம். அவ்வாறு இருந்து அவர் முன்குறித்தவாறே தேவனின் செய்கையாய் இருப்போம்.