//தேவன் இயேசுவை வெட்டினார் என வேதத்தில் உள்ளது.. தங்களுக்கு தெரியுமா??? அறிந்து கொள்ளுங்கள்..
சகரியா 13:7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.
மத்தேயு 26:31 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
மாற்கு 14:27 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
உண்மையில் இயேசு வெட்டப்பட்டதாக வேதபுத்தகதிலும், எந்த வரலாற்று புத்தகத்திலும் இல்லை!! அப்படியானால் என் இந்த வசனம்?? இதன் பொருள் தங்களுக்கு தெரியுமா?? அறிந்திருந்தீர்கலானால் தெரிவியுங்கள்..//
தேவன் இயேசு கிருஸ்துவை வெட்டினார் என்பதும், அவர் எப்படி வெட்டினார் என்பதும் வேத புத்தகத்தில் உள்ளது. அதை பற்றி பார்க்கும் முன், தெளிவாக உணர்ந்து கொள்ளும் முன் "ஆவி, ஆத்துமா, சரீரம்" என்பது பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது. (No short answers for this topic)
ஆவி, ஆத்துமா, சரீரம் :
கிருஸ்துவ வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு ஆவி, ஆத்துமா, சரீரம் என்பதை பற்றியதான அறிவு மிகவும் முக்கியமானதாய் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
மனிதன் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்று பகுதிகள் கொண்ட விசித்திர வினோதமாக உருவாக்கப்பட்டவன்.இதை பற்றி வேதத்தில்,
ஆதியாகமம்.2.7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
மேற்கண்ட வசனம் மூன்று பகுதிகளை காட்டுகிறது.
1) சரீரம் :
மண்ணினாலே உருவாக்கப்பட்டது. பல்வேறு காரணிகளால் (நிலம், நீர்,.காற்று, ஆகாயம், நெருப்பு) பாதிக்கப்பட கூடியது. இது நித்தியமாக எப்போதும் இருக்க கூடியது அல்ல. தற்காலிக இருப்பையே கொண்டது. எது, எது எங்கிருந்து வந்ததோ அது, அது அங்கேயே சென்று சேரும். அதன்படி மண்ணினாலே உருவாக்கப்பட்ட சரீரம் மண்ணுக்கே சென்று சேரும். (இங்கு மண் என்பது சில தனிமங்களை குறிக்கும்.)
ஆதாமின் மனித சரீரமானது முதலில் ஏதேன் தோட்டத்திலும், பிறகு உலகத்திலும் இருந்தது. அதனால் இந்த இரண்டு இடத்திலும் சரீரம் என்ன, என்ன விதமாக இருந்தது என்பதை பார்ப்போம்.
ஏதேன் தோட்டத்தில் சரீரம் :
மனிதனின் சரீரத்தை பாதிக்க கூடிய காரணிகள் எதுவும் இல்லாமல், அவை கட்டுப்படுத்தப்பட்ட, ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாக ஏதேன் தோட்டம் இருந்தது. சரீரத்தை பாதிக்கும் காரணிகள் தேவ ஞானத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு, மனிதன் பாதுகாப்பாக வைக்கப்பட்டான். மனிதன் தன் சரீரத்தை காத்து கொள்ள எந்த விசேஷித்த அக்கறையும் எடுத்து கொள்ள தேவையில்லை. அதனால் அதற்கான மனித அறிவும் இல்லை. அவன் அங்குள்ள கனிகளை சாப்பிட்டாலே போதும்.
உலகத்தில் சரீரம் :
உலகத்தில் சரீரத்தை பாதிக்கும் காரணிகள் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் முதலியன) சரீரத்தை பாதிக்கின்றன. மனிதன் தன் அறிவால் இந்த காரணிகளிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும். அவ்வாறு தன்னை காத்து கொண்டாலும் உடலுக்கு என்று இருக்கும் சில விதிகளால் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே இந்த உடல் செயல்பட கூடியது. அதற்கு பிறகு இந்த சரீரம் அழுகி போய் விடும். சூழ்னிலையால் பாதிப்பு, நோய், வயதாகுதல், மரணம் என்ற தீமைகள் சரீரத்துக்கு உலகத்தில் இருக்கும் போது ஏற்படுகிறது.
இதிலிருந்து நாம் அறிவது - தற்காலிக இருப்பையே கொண்ட சரீரம், ஏதேன் தோட்டத்தில் இருக்கும் வரையில் அதற்கு பாதிப்பில்லை. சரீரம் உலகத்தில் வந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு வேலை செய்யாது. இந்த சரீரம் வெகு நாள் பயன் தர, தேவையான வகைகளை மனிதர்கள் தங்கள் அறிவினால் அறிகின்றனர் / அறிய முயன்று கொண்டிருக்கிறார்கள்.
2) மனிதனுடைய ஆவி :
மனிதனின் ஆவி என்பது தேவனுடைய ஜீவ சுவாசம். இதை மனிதனின் நாசியில் ஊதினதன் மூலம் சரீரத்துக்குள் தேவன் தன்னையே வைத்தார். அதனால் மனிதனின் உள்ளே இருக்கும் இவர், உள்ளே கிடப்பவர் என்ற பொருள் தரும் வகையில் "கிட உள்" என்றும் கடவுள் என்றும் தமிழில் அழைக்கப்படுகிறார்.
மனிதனின் அமைப்பில் - அவனது ஆவியும், அவனது சுவாசமும் தேவனிடமிருந்து அவனுக்கு நேரடியாக வந்ததாகும். இதை பற்றி,
ஏசாயா 42:5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.
யோபு 27:2 என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
யோபு 32:8 ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
யோபு 34:14 அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
(வேதத்தில் ஆவி என்னும் பதம் ஏறக்குறைய இருபது வேறு, வேறு அர்த்தம் கொள்ளும்படியாக வந்துள்ளது. அதனால் வேதத்தில் உள்ள ஆவிகளில் "மனிதனின் ஆவி" என்னும் பதம் எங்கு, எங்கு உள்ளது என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.)
கிருஸ்துவர்களால் "மனிதனின் ஆவி" என அழைக்கப்படும் இந்த பகுதி இந்து போன்ற மற்ற மதத்தவர்களால் "ஆத்மா" (இது கிருஸ்துவர்களின் "ஆத்துமா" அல்ல) என அழைப்படுகிறது. இது "தெய்வீக ஒளி" என பொருள்படும் "டிவைன் ஸ்பார்க்" எனவும் அறியப்படுகிறது.
நீதிமொழிகள் 20:27 மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
மனுஷ ஆவி, சரீரத்தை போன்று தனிமங்களால் உருவாகமல், ஒளியால் ஆனதாகவும், காற்றை போன்றதாகவும் இருக்கிறது. மண்ணிலிருந்து வந்தது (சரீரம்) முடிவில் மண்ணுக்கும், தேவனிடத்தில் இருந்து வந்தது முடிவில் தேவனிடமும் போய் சேரும்.
பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
உயிரோடு இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் ஆவியும், சுவாசமும் இருக்கும். சரீரத்தின் மேல் தேவன் தன் ஆவியை ஊதுவதால் மனிதன் உயிரடைவதாக சொல்லப்படுகிறது. மனிதன் இறக்கும் போது ஆவியும், சுவாசமும் அவனை விட்டு (சரீரத்தை விட்டு) தேவனிடத்தில் சென்று விடும்.
உயிர் உள்ள எல்லா மனிதரிடமும் ஆவி என்னும் பகுதி இருந்தாலும், இந்த பகுதியை அனேகர் உணர (REALISE) முடிவதில்லை.
ஆதாமின் விழுகைக்கு முன், இந்த பகுதியை எப்போதும் உணர்ந்து அனுபவித்து கொண்டிருந்தவனாக ஆதாம் இருந்தான். அதனால் அவன் ஜீவன் நிறைந்தவனாய் இருந்தான். அது மட்டுமல்லாது தேவனும் அவனுடன் தொடர்பு கொள்ள இந்த பகுதி அவனுக்கு உதவியது.
மனுஷனின் ஆவி பற்றி பார்க்க வேண்டியது அனேகமாய் இருக்கிறது. அதற்கு முன்பாக ஆத்துமாவை பற்றின ஒரு அறிமுகம் தேவையாய் இருக்கிறது.
(HUMAN SPIRIT - BY WITNESS LEE - ALSO POSTED IN ESSAYS PLACE)
3) ஆத்துமா :
ஆதியாகமம்.2.7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆவியும், சுவாசமும், சரீரமும் ஒன்றாக சேரும் போது அங்கு ஆத்துமா என்னும் மூன்றாவது பகுதி தானகவே உருவாகிறது. இந்த ஆத்துமாவே அனைத்தையும் உணர்ந்து அனுபவிப்பவனான மனிதன் ஆவான். அதாவது ஆத்துமாதான் மனிதன். மனிதன்தான் ஆத்துமா.
அதாவது
மனிதன் இறந்தால் அவன் சரீரம் மக்கி (எரிந்து) விடும். சரீரத்தில் அவன் இருக்க மாட்டான். ஆவி தேவனிடத்தில் போய் விடும். ஆவியிலும் அவன் இருக்க மாட்டான். அவன் எங்கே இருப்பான் என கேட்டால், அவன் ஆத்துமாவாக இருப்பான்.
அதனால் ஆத்துமா என்னும் பதம், உயிரோடு இருக்கும் மனிதனையும், உயிர் இல்லாத மனிதனையும் குறிக்கும். ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டால், இறந்த பிறகும் அவன் இரட்சிக்கப்பட்டவனே. இந்த இரண்டு நிலையிலும் தொடர்ந்து இருப்பது அவனது ஆத்துமா மட்டுமே. அதனால் ஒருவன் இயேசு கிருஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது அவன் ஆத்துமா ஆதாயம அடைந்ததாக சொல்லப்படுகிறது. இது சரீர ஆதாயம் என்றோ, ஆவி ஆதாயம் என்றோ சொல்லப்படுவதில்லை.
ஆதாமின் விழுகைக்கு முன், தன் ஆவியை எப்போதும் உணர்ந்து அனுபவித்து கொண்டிருந்தவனாக ஆதாம் இருந்தான். அதனால் அவன் ஜீவன் நிறைந்தவனாய் இருந்தான். அவன் ஜீவாத்துமா எனப்பட்டான்.
மனிதன் ஜீவாத்துமாவாக இருக்கும் போது அவனிடம் பரமாத்மாவான தேவன் தொடர்பு கொண்டிருந்தார். அதனால் அவன் சந்தோஷம் நிறைந்தவனாக, அவரது அன்பை அனுபவிப்பவனாக இருந்தான்.
ஆதாமின் விழுகையினால், அவனுள் மனம் என்னும் பகுதி செயல்பட ஆரம்பித்தது. அதனால் தன்னுடைய ஆவியோடு அவன் கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவன் ஜீவாத்துமாவாக இல்லாமல் வெறும் ஆத்துமாவாக ஆனான். தேவனும் முன் போல் அவனிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஏதேன் தோட்டத்தில், விலக்கின கனியை புசிக்காமல் இருந்த போது, ஆதாமில் இருந்த ஆவி என்னும் பகுதி முழுவதுமாக செயல்பட்ட நிலையில் இருந்தது. இந்த பகுதியின் மூலமே மனிதன் தேவனை நெருக்கி சேர முடியும். அதனால் அவன் தேவனோடு தொடர்பு நிலையில் இருந்தான். ஆவி என்னும் இந்த பகுதியே மனிதனில் இருக்கும், தேவன் வந்து இறங்க கூடிய மகா பரிசுத்த ஸ்தலம் ஆகும். ஆவியை ஒரு மனிதன் உணரும் போது அங்கு காலம் இருப்பதில்லை. அவன் நித்தியத்தை அனுபவித்தவனாய் இருக்கிறான்.
தேவ கட்டளைக்கு கீழ்படியாமல் கனியை புசித்த போது அவனுக்குள் மனம் என்னும் பகுதி உண்டானது. அதன் பிறகு ஆதாம் வெட்கம், பயம் போன்ற இதுவரை அனுபவித்திராத உணர்வுகளுக்கு ஆட்பட்டான். உலகத்திற்குள் சென்ற பிறகு அவனது சரீரம் பல காரணிகளால் பாதிக்கப்பட்டது. அதனால் அவன் பல இன்னல்களுக்கு உள்ளானான். தேவனால் போதிக்கப்பட்டு வந்த அவன், உலகத்திற்க்குள் வாழ தன் அறிவை நம்ப வேண்டி இருந்தது. அதனால் அவனில் அறிவு வளர்ந்தது.
ஆதாம் உலகம், மாமிசம், பிசாசு முதலியவற்றுக்கு அடிமைப்பட்டவனாய் ஆனான். ஆதாமினுள், சிந்தனை, உணர்ச்சிகள் (EMOTIONS), ஆசைகள் முதலியன உருவாயின. இவைகளுக்கு ஆட்பட்ட அவன் இவைகளின் மூலமாக தன்னை உணர்ந்து கொண்டான். அதனால் அவனில் சுயம் தோன்றியது.
மனுஷனுடைய ஆவியை எதுவும் எழுதாத சுத்தமான வெள்ளை துணிக்கு ஒப்பாக கொள்ளலாம். இந்த சுத்தமான துணியின் மேல் மனிதனின் சிந்தனைகள், உணர்வுகள், ஆசைகள், சரீர பிரகாரமான துன்பங்கள், குற்ற மனசாட்சி முதலியன படிந்து விடுவதால் அவன் தன் ஆவியை உணர முடியாமல் போகின்றது. ஆவி மறைக்கப்பட்ட அவன் காலத்திற்க்கு அடிமையானான்.
முன்பு எந்த கறையுமில்லாமல் சுத்தமாக இருந்த ஆத்துமாவானது, இப்போது, சிந்தனைகள், உணர்வுகள், ஆசைகள் போன்றவை கொண்டதாக மாறி விட்டது. இதனால் மனிதனுடைய சுயமும் ஆத்துமா என்ற பெயரிலேயே வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிந்தனை, உணர்வு, ஆசை முதலியவனவும் ஆத்துமா என்ற பெயரிலேயே சில சமயம் அறியப்படுகின்றனது.
அதனால் ஆத்துமா என்று வரும் இடங்களில் எல்லாம் அந்த ஆத்துமா எந்த பொருளில் வந்துள்ளது என்பதை பிரித்து அறிந்து கொள்ள தெரிய வேண்டும். இல்லாவிட்டால் குழப்பமே மின்சும்.
தன் பரிசுத்தத்தை இழந்த மனிதனிடம் மூன்று பகுதிகள் இருக்கின்றன. - அவை பரிசுத்தமான மனுஷனின் ஆவி, மூன்று பகுதிகள் (ஆசை, சிந்தனை, உணர்வுகள்) கொண்ட ஆத்துமா, மற்றும் சரீரம் முதலியன. இவை மூன்றையும் அனுபவிப்பவனை மனிதன் என நான்காவதாக கொள்வோம்.
ஆவி என்னும் பகுதியானது ஆத்துமா என்னும் பகுதியால் மறைக்கப்பட்டபடியால், மனிதன் பல இன்னல்களை அனுபவிக்கிறான். அதனால் அவன் தன்னுடைய ஆவி என்னும் பகுதியை உணர வேண்டியது அவசியமாகிறது.
இதையே இயேசு கிருஸ்துவும் "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பரலோக ராஜ்ஜியத்தில் அப்போதே இருக்கிறார்கள" என்று சொனனார். இதன் பொருள் கறைபட்ட ஆத்துமா இல்லாத மனிதன் என்பதாகும். ஆவியை மறைக்கும் ஆத்துமா அகலும் போது அந்த மனிதன் பரலோக ராஜ்ஜியத்தை அனுபவிக்கிறான்.
"மனம் திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது" என்று ஆவிக்கு திரும்புவதை குறித்தே இயேசு கிருஸ்து சொன்னார்.
மனிதர்களை அவர்கள் வாழும் வாழ்க்கையை அடிப்படையாய் கொண்டு "ஆவிக்குரிய மனிதன்" என்றும் "கறைபட்ட ஆத்துமாவுக்குரிய மனிதன்" என்று இரு பிரிவாக பிரிக்கலாம்.
ரொம்ப நாட்களாக உங்களை காணவில்லை. இப்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சில கேள்விக்கு சுருக்கமான பதிலை தர முடியும். அந்த பதில் சரியாக இருந்தாலும் கூட, அந்த பதிலை யொட்டி இன்னமும் அனேக கேள்விகள் தோன்ற வாய்ப்பு உண்டு. அது மட்டுமல்லாது, சுருக்கமான அந்த பதில் சில எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும்.
அதனால் கூடுமான வரைக்கும் எவ்வளவு விளக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு விளக்கமாக சொல்ல விரும்புகிறேன். ஆனால் நேரமின்மை காரணமாக சில நேரங்களில் அதை முடிப்பதற்க்கு அதிக நாட்களாகி விடுகிறது. நான் என்னுடைய தளத்தில் அனேக பதில்களுக்கு மனிதனை குறித்த, தேவனின் சித்தம் என்ன? என்ற மிகவும் பேஸிக்கான, பதிலில் இருந்து ஆரம்பித்து, எழுதுகிறேன்.
அந்த வகையில் இந்த கேள்விக்கான பதிலும் நீளமாகி விடும் என்பதால், முதலில் இந்த கேள்விக்கான சுருக்கமான பதிலை சொல்லி விட்டு பிறகு, விரிவான கட்டுரையை எழுத விரும்புகிறேன்.
அந்த பதில்,
பிதாவாகிய தேவன் இயேசு கிருஸ்துவின் ஆத்துமாவை (இந்த இடத்தில் ஆத்துமா என்பது சுயத்தை குறிக்கும்) வெட்டினார்.
ஆரம்பத்தில் ஏதேன் தோட்டத்தில் ஆதாமில் சுயம் உருவாகியது.
சுயம் உருவாகிய உடன் அவன் ஏதேன் தோட்டத்தில் இருந்து தள்ளப்பட்டான்.
ஏதேன் தோட்ட வாசலில் சுடரொளி பட்டயம் வைக்கப்பட்டது.
அந்த பட்டயம், என்ன பட்டயம் எனில், மனிதனில் இருக்கும் சுயத்தை அழிக்கிற பட்டயம்.
இதன் பொருள் சுயம் அழிந்த மனிதன் மட்டுமே, மறுபடி ஏதேனுக்குள் பிரவேசிக்க முடியும்.
இயேசு கிருஸ்துவின் மேல் இந்த பட்டயம் விழுந்து அவரது சுயத்தை அதாவதுஆத்துமாவை அழித்தது.
அவர் தன் ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார்.
மரணமடைந்த அவரது ஆத்துமா (சுயம்) மறுபடி உயிர்பிக்கவேயில்லை. மேலும் அது உயிர்பிக்கவும் வாய்ப்பில்லை.
அவர் தன் ஆத்துமாவை குற்ற நிவாரண பலியாக ஒப்புக் கொடுத்தார்.
அதன் பிறகு இயேசு கிருஸ்துவின் புண்ணியத்தால் மனுகுலம் முழுவதும் ஏதேனுக்குள் பிரவேசிக்கும் நிலை வந்தது.
கர்ப்பவதியான மரியாளுக்கு, உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவி போகும் என்ற தீர்க்கதரிசன வசனம் சொல்லப்பட்டது.
இவ்வாறாக தேவன் மேய்ப்பனை வெட்டினார்.
(இதில் யாருக்காவது கேள்விகள் இருந்தால் அதை விளக்கி விட்டு விரிவான கட்டுரையை தொடருகிறேன்)
-- Edited by SANDOSH on Thursday 5th of December 2013 01:06:33 AM
மேற்படிப்பின் தேர்வுகளும்,வேலைபளுவும் ஒருங்கே அமைந்து விட்டதால் சிலநாட்களாக பதிய இயலவில்லை.
தங்கள் விளக்கங்கள் அருமை.. அதில் அனேக காரியங்கள் விளக்கப்பட்டுள்ளன.
நாம் சிந்திக்க வேண்டிய காரியங்களாக இன்னும் நான் காண்பவை,
1) வேதம் கூறும்படியான ' மரியளின்ஆத்துமாவை ஒரு பட்டயம் ஊடுருவியது' என்கிற செய்தி கவனிக்கப்படத்தக்கது.
2) ஆனால் அந்த பட்டயம் எந்த சமயத்தில் ஊடுருவியது. அதற்கும் இயேசுவின் மரணத்திற்கும் என்ன தொடர்பு என்பதை வேத வெளிச்சத்தில் ஆரய்வது சிறந்ததாய் இருக்கும்.
இதை தொடர்பு படுத்தி பார்க்கவேண்டுமானால், சிமியோன் மரியாளிடம் சொன்ன செய்தியை முழுமையாய் அறிதல் அவசியம்!!
லூக்கா
2 அதிகாரம்
34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
இயேசுவானவர் , அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும் நியமிக்கப்பட்டிருக்கிறார் என வேதம் சொல்லுகிறது. இதன் தொடர்ச்சியாக மரியாளின் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் ஊடுருவதாக சொல்லப்பட்டுள்ளது.
இயேசுவின் இந்த நியமனம் மரியாளின் ஆத்துமாவை ஒரு பட்டயம் ஊடுருவி போக செய்யும். இந்த நியமனம் செயலுரு பெறும்போது மரியாளின் இருதயத்தை பட்டயம் ஊடுறுவும்.
பிறக்கும்போதே எசுவானவர் இந்த நியமனத்தை பெற்றிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. ஆனாலும்,அவர் ஊழியத்தின் நாட்களில் மாத்திரமே இருதயத்தின் சிந்தனைகள் வெளிபடுதபட்டது!!! (மண்ணில் எழுதுகிற காரியத்தை சேர்த்தும் தான்!!!). 'அடையாளமாவதற்கும்' என்கிற பதம் அவர் மரணத்தையும் அதன் பின் வருங்காலத்தில் நிகலபோகும் காரியங்களையும் குறிக்கிறது!!!
இயேசு மறித்து உயிர்த்த பின்னும் உயரோடு இருந்த மரியாளின் இருதயத்தை அவர் 'அடையாள'மான பின்பு ஒரு பட்டயம் ஊடுருவி சென்றது!!! ஆக, இயேசுவை வெட்டின பட்டயமும் (மரிக்கும்),மரியாளின் ஆத்துமாவை ஊடறுவின பட்டயமும் ஒன்றல்ல.. ஏனென்றால் இயேசுவானவர் சிமியோன் கூறினபடி அடையாளமாகவேண்டுமெனில் அவர் மரிக்க வேண்டும். கர்த்தரின் பட்டயம் அவரை வெட்ட வேண்டும். பின்பு தான் அவர் மரிப்பார். பின்பு சகரிய கூறினபடி ,அவரது ஆடுகள் சிதறி போகும் (மரியாளையும் சேர்த்து தான்!!!). ஏனென்றால் சிதறிபோகாமல்,சிதறிப்போன சீஷர்களுடனே மரியாள் ஒரு வீட்டில் இருந்திருக்க இயலாதல்லவா!!! அவர் அடையாளமான பின் அவரது நியமனத்தின் படி நடக்கவேண்டிய இறுதிநிகழ்வுகளின் பொது மரியாளின் ஆத்துமாவை ஒரு பட்டயம் ஊடுருவும்!!மேற்படி விளக்கங்களை தேவைப்படின் காணலாம் (அதிகம் திசை மாறி போகாமல் இருக்கதக்கதாய் !!!)
ஆத்துமாவை ஊடுறுவும் பட்டயம் என்கிற தனி தலைப்பில் இவற்றை விவாதிக்கலாம்..
சகோ.சந்தோஷ் ////அவர் தன் ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார்.
மரணமடைந்த அவரது ஆத்துமா (சுயம்) மறுபடி உயிர்பிக்கவேயில்லை. மேலும் அது உயிர்பிக்கவும் வாய்ப்பில்லை.///
பின்வரும் வசனங்களில் 'நான் தான்' என்கிற மாறாத வார்த்தைகளை கவனியுங்கள். இயேசு கூறிய வார்த்தைகள் அவைகள். மரிபதற்கு முன்னும்,மரிபதற்கு பின்னும் அவர் ;நான் தான்' என தன்னை ஒரே விதமாய் கூறுகிறார் !!!
மத்தேயு 14:27 உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
யோவான் 18:5 அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்.
யோவான் 18:6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
லூக்கா 24:39 நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
அவர் பூமியிலும்,பரலோகத்திலும் ஏறி இறங்குகிற மனுஷ குமாரன். அவர் அதிசயமானவர் தான்.
இயேசு என்கிற மனுஷகுமாரன், உயிர்த்தபின்னும் மனுஷகுமாரன் தான்.. அதை பற்றி தான் தாவீது பின்வருமாறு கூறுகிறார்..
சங்கீதம் 73:25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
பரலோகத்தில் நமக்கேன இருக்கிற மனிதன் இயேசு மாத்திரமே என்கிறதை தாங்கள் அறிந்துகொள்ளவேண்டும். அவரை மனுஷகுமாரனாகவே பரலோகத்திலும் தரிசிப்போம் எனவும் அறிந்துகொள்ளுங்கள்.(விளக்கம் வேண்டுமெனில் தருகிறேன்)
ஆகவே தாங்கள் சுயத்தை தொடர்புபடுத்தி , பட்டயத்தை முன் நிறுத்தி விவாதிக்கும் காரியம் தவறானது.
பட்டயத்தை அனுப்பவண்டவர் ஏன் பட்டயத்தால் வெட்டபட்டார் என்பதை இன்னும் அதிக ஆழமாய் விவாதிப்போம் விபரமாக!!!
மத்தேயு 10:34 பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
சகோ.சந்தோஷ் ////அவர் தன் ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார். மரணமடைந்த அவரது ஆத்துமா (சுயம்) மறுபடி உயிர்பிக்கவேயில்லை. மேலும் அது உயிர்பிக்கவும் வாய்ப்பில்லை.///
பின்வரும் வசனங்களில் 'நான் தான்' என்கிற மாறாத வார்த்தைகளை கவனியுங்கள். இயேசு கூறிய வார்த்தைகள் அவைகள். மரிபதற்கு முன்னும்,மரிபதற்கு பின்னும் அவர் ;நான் தான்' என தன்னை ஒரே விதமாய் கூறுகிறார் !!!
மத்தேயு 14:27 உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். யோவான் 18:5 அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான். யோவான் 18:6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். லூக்கா 24:39 நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, அவர் பூமியிலும்,பரலோகத்திலும் ஏறி இறங்குகிற மனுஷ குமாரன். அவர் அதிசயமானவர் தான். இயேசு என்கிற மனுஷகுமாரன், உயிர்த்தபின்னும் மனுஷகுமாரன் தான்.. அதை பற்றி தான் தாவீது பின்வருமாறு கூறுகிறார்.. சங்கீதம் 73:25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. பரலோகத்தில் நமக்கேன இருக்கிற மனிதன் இயேசு மாத்திரமே என்கிறதை தாங்கள் அறிந்துகொள்ளவேண்டும். அவரை மனுஷகுமாரனாகவே பரலோகத்திலும் தரிசிப்போம் எனவும் அறிந்துகொள்ளுங்கள்.(விளக்கம் வேண்டுமெனில் தருகிறேன்)
ஆகவே தாங்கள் சுயத்தை தொடர்புபடுத்தி , பட்டயத்தை முன் நிறுத்தி விவாதிக்கும் காரியம் தவறானது.//
நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். அதனால்தான் சில கேள்விகளுக்கு சுருக்கமான பதில் சரியாய் இருக்காது என்று சொன்னேன். இதை விட ஆத்துமாவை எப்படி பட்டயம் வெட்டும்? என்று கேள்வி கேட்டிருக்கலாம். இயேசு கிருஸ்து பரலோகத்தில் இருக்கிற மனுஷ குமாரன் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நான் என்னுடைய பல பதிவுகளில் அதை சொல்லியிருக்கிறேன். என் கூற்று அவரது உயிர்தெழுதலை பொய்யாக்கவுமில்லை.
இதை தெளிவாக புரிந்து கொள்ள முடியாது என்பதினால்தான், ஆவி, ஆத்துமா, சரீரம் என்று ஆரம்பித்து எழுதியிருக்கிறேன்.
எல்லா மனிதரை போலவும் இயேசு கிருஸ்துவும், ஆவி, ஆத்துமா, சரீரம் என மூன்று கூறுகளை உடையவராய் இருந்தார். அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தார், ஆவியில் உயிர்த்தெழுந்தார். ஆனால் அவர் ஆத்துமா மரித்தது. ஆத்துமா என்றால் அதற்கு பல அர்த்தங்கள் உண்டு. இந்த இடத்தில் அவரது சுயம், ஆத்துமா என அழைக்கப்படுகிறது.
சிலுவையில் அவரது சுயம் மரித்தது. அதுவே ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் என்று சொல்லப்படுகிறது. சுயம் மரித்தால் அது மரித்ததுதான். இதை புரிந்து கொள்ள ஆத்துமாவை எப்படி பட்டயம் ஊடுறுவும் என்பதை ஒரு உதாரணத்தோடு பார்க்கலாம்.
ஒரு ஊரில் ஒரு மனிதன் தனியாளாக இருந்தான். அவன் மிகுந்த வலிமையுள்ள மனிதனாக இருந்தான். அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாததால் அவன் தன் இஸ்டப்படி ஊரை சுற்றி கொண்டு திரிந்தான். இவ்வாறு எந்த கவலையுமில்லாமல் இருந்த அவன் ஒரு நாள் ஒரு பெண்ணை சந்தித்தான். அதன் பிறகு அவன் சிந்தனைகளில் எல்லாம் அந்த பெண்ணே வர ஆரம்பித்தாள். அவன் அவளை விரும்ப ஆரம்பித்தான். அவளை பற்றி நினைக்கும் போதெல்லாம், அவனுக்குள் சந்தோஷம் பொங்கி வந்தது. அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான்.
ஆச்சரியப்படும் விதமாக அந்த பெண்ணும் அவனை விரும்பினாள். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த அவன் பொறுப்புள்ளவன் ஆனான். வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்தான். ஒரு வீடு வாங்கினான். அவனுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அவனது சந்தோஷம் பன்மடங்கு அதிகமாகியது. தன் மனைவி, குழந்தையோடு எப்போதும் மகிழ்ந்திருந்தான். அவன் ஆசைகள், சிந்தனைகள் எல்லாம் அவன் மனைவி, மக்களே ஆக்கிரமித்திருந்தனர்.
மேலே கண்ட உதாரணத்தில் இருந்து சுயம் என்றால் என்ன என்று பார்க்கலாம். ஆரம்பத்தில் அந்த வாலிபன் சுயம் இல்லாது இருந்தான் என எடுத்து கொள்ளலாம். ஆனால் இப்போதோ அவன் சிந்தனை, உணர்வுகள் (emotions), ஆசைகள் முதலியன அவன் மனைவியையும், பிள்ளையையும் சார்ந்ததாக ஆனது. இதன் மூலம் அவன் தான் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டான். இந்த புதிய "நான்" என்ற எண்ணம்தான் அவனது சுயமாகும். இப்போது கதையை தொடர்ந்து பார்ப்போம்.
சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் ஒரு பேரிடி வந்தது. ஒரு நாள் அவனது மனைவி, குழந்தை இருவரும் ஒரு விபத்தில் மரித்து போனார்கள். அவன் யாரை வைத்து "நான்" என்ற அடையாளமாக கருதி கொண்டு வந்தானோ, அவர்கள் இப்போது இல்லை. அவனது ஆசை, சிந்தனை, உணர்வுகளால் ஆன அவனது சுயம் அல்லது ஆத்துமா தகர்க்கப்பட்டது. அவனது துன்பத்திற்க்கு அளவே இல்லாமல் போனது. அவனை ஆறுதல்படுத்த யாராலும் முடியாமல் போனது. ஒரு நாள் அவன் அழுது கொண்டிருப்பதை பார்த்த ஒருவர், "ஏன்யா? யாரோ உன்னை வெட்டி விட்டா மாதிரி எதுக்கு அழுது கொண்டிருக்கிறாய்? எந்த பிரச்சனையுமில்லாமல் உன் சரீரம் நல்ல வலிமையுடன் தானே இருக்கிறது என்று கேட்டார்."
இந்த கேள்வியை கேட்டவருக்கு தெரியாது, அவன் அவனுக்குள்ளே அனுபவித்த / அனுபவிக்கும் வேதனைகள். அவர் பட்டயம் சரீரத்தை மட்டும்தான் வெட்டும் என்று நினைத்து கொண்டிருப்பவர். ஆனால் வெட்டுப்பட்டது அவன் சரீரம் அல்ல, அவனது சிந்தனை, ஆசைகள், உணர்வுகளால் ஆன அவனது சுயம் அல்லது ஆத்துமா ஆகும். இந்த வேதனை சரீர வெட்டினால் உண்டாகும் துன்பத்திற்க்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. இன்னும் சொல்ல போனால் சரீர வெட்டை விட, ஆத்துமா வெட்டு பயங்கர வேதனையை தருவதாக அனேக நேரங்களில் இருக்கும். இப்போது கதையை தொடர்ந்து பார்ப்போம்.
இவ்வாறு பல நாட்கள் அழுது சமாதானமாகாத அவனுக்கு ஒரு நாள் ஞானம் வந்தது. எவ்வளவுதான் அழுதாலும் மரித்தவர் மீண்டு வர மாட்டார். அதனால் அதற்காக கவலைப்படுவது தவறு என புரிந்து கொண்டான். இதன் மூலம் அவன் தன் ஆத்துமாவை அதாவது மனைவி, குழந்தைகளால் உருவான தன் சுயத்தை மரணத்தில் ஊற்றினான். அவனது சுயம் மரணமடைந்தது.
சகோதரர் ஜான் அவர்களே, இப்போது ஆத்தும பட்டயம் பற்றியும், ஆத்தும மரணம் பற்றியும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
பிதா தன் குமாரனை சிலுவையில் இமைப் பொழுது கைவிட்டார். இதுதான் இயேசு கிருஸ்துவின் ஆத்துமாவை வெட்டின பட்டயம்.அதை தாங்க மாட்டாத அவர், பிறகு பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்பு கொடுத்தார். இதன் மூலம் அவர் ஆத்துமா மரணத்தை கண்டது.
இயேசு கிருஸ்து சித்ரவதை படும் போதும், மரணமடைந்த போதும், அம்மா என தாய் பாசத்தோடு அழைக்காமல் ஸ்திரீயே என அழைத்த போதும் மரியாளின் ஆத்துமாவை பட்டயம் ஊடுறுவியது. சகோதரர் ஜான் அவர்களே, ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.
சகோ சந்தோஷ் எழுதியது //நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.//
இயேசுவின் ஆவி,ஆத்துமா,சரீரம் அழியவில்லை என்பதை வேதத்தில் இருந்து நேரடியாக தங்களுக்கு விளக்கம் அளித்தும், நான் வேதத்தைக் கொண்டு சொல்லுகிறதை தவறேன்று சொல்லுகிறீர்கள். அவற்றை நீங்கள் வேதத்தைக் கொண்டு என்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் இந்து சித்தர்கள்,புராணங்கள் கூறும் படியான சுயத்துக்கு உரிய விளக்கங்களோடு எப்படி வேதத்தில் உள்ளவைகளை விளக்க முனைகிறீர்கள்.
பரலோகத்தில் பிதாவின் மடியில் அமர்ந்திருக்கும் இயேசுவானவர்க்கு 'ஆத்துமம், உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
38. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
இவ்வசனங்களில் வருகிறவர் என குறிபிடப்படும் இயேசுவானவரின் ஆத்துமாவைப் பற்றி குறிபிடப்பட்டுள்ளது. அதை 'அழிந்தது' என்று எவ்வாறு உங்களால் கூறி விட முடியும்.மேலும்
அப்போஸ்தலர் 2
25. அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
26. அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்;
27. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
இயேசுவின் ஆத்துமா அழிவதில்லை என்கிற உண்மையை அறியாமல் நீங்கள் வேத அடிப்படை இல்லாமல் பேசுகிறீர்கள்.
இந்துத்துவ 'சுயத்தை' பற்றிய விளக்கங்களுக்கும், நம் வேதம் கூறும் உண்மைகளுக்கும் தொடர்பிருப்பது போல தோன்றுவது சாத்தான் ஏற்படுத்தின மாயை.
மனமும் ஆத்துமாவும் ஒன்று என்ற நிலையை சில இந்து மதவாதிகள் ஒப்புகொள்வதில்லை. ஆயினும் நீங்கள் கூறுவது போல ஆத்துமா அற்ற நிலை சுயத்தை இழந்த நிலை என்றால், சுயத்தை இழப்பது மட்டுமே பாவம் செய்பவனுக்கு கர்த்தரால் வரும் நியாய தீர்ப்பாக காணப்படும். இது வேத விரோதம்..
ஆத்துமா அழிவை குறித்து தங்கள் கருத்துக்கள் வேதம் கூறுவதோடு ஒத்து போக வில்லை. கவனியுங்கள்..
மரணம் ஆத்துமாவை அழிப்பதில்லை. ஆத்துமம் பிரிவது அல்லது எடுதுகொள்ளபடுவதே சரீர மரணம்.(விளக்கங்கள் தேவைப்படின் தருகிறேன் ) பின்வரும் பாருங்கள் ..
I இராஜாக்கள் 17:22 கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.
I இராஜாக்கள் 19:4 அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,
தேவன் ஆத்துமாவை அழிக்கும் இடம் நரகம் பின்பு நித்திய அழிவு அக்கினி கடலில். மரித்த பின் இயேசு நரகத்தில் பிரவேசிக்கவில்லை.(அவர் காவலில் உள்ள ஆத்துமாகளுக்கு பிரசங்கித்த இடம் வேறு!!).
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
ஆக, இயேசு சுயத்தை இழந்தார் என்பது தவறு.. நாம் அனைவரும் அவரது சாயலை பெற்றுகொள்ளும்படி அழைக்கப்பட்டவர்கள். அவ்வாறிருக்க அளித்தவருக்கு சாயலே இல்லை என்பது மிக தவறு!!!
சகோ.சந்தோஷ் ///பிதா தன் குமாரனை சிலுவையில் இமைப் பொழுது கைவிட்டார். இதுதான் இயேசு கிருஸ்துவின் ஆத்துமாவை வெட்டின பட்டயம். அதை தாங்க மாட்டாத அவர், பிறகு பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்பு கொடுத்தார். இதன் மூலம் அவர் ஆத்துமா மரணத்தை கண்டது.///
சகோதரரே, நீங்கள் அனேக காரியத்தை உட்புகுத்தி பார்க்கவே விரும்புகிறீர்கள்.. இப்படி இருக்குமோ,அப்படி இருக்குமோ என்று.வேத ஆய்வில் trail and error என்பது சரியற்றதல்லவா?
இரண்டாம் வருகையில் நம்மை நியாயந்தீர்க்கபோகிறவர் இயேசு. முதற்பலனான அவர் நமக்காக நியாந்தீர்க்கபட்டார். வேடத்தில் எப்போதெல்லாம் தேவ தீர்ப்பு வெளிபடுகிறதோ அப்போதெல்லாம் தேவனும்,பரிசுத்தவான்களும், தேவ தூதர்களும் பட்டயம் ஏந்துகிறார்கள். அவர் நம் பாவத்திற்காக பிணையான போது, தேவ பட்டயம் அவரை வெட்டியது. இயேசு தேவ வார்த்தையாக இருந்தும்,தேவ குமாரனாய் இருந்து, ஏற்றுகொண்ட பாவங்களின் நிமித்தம் பிதாவால் நியாந்தீர்க்கபட்டார்.
அபிரகாம் தன குமாரனை பலியிட வாத சம்பவத்தை நினைத்துகொள்ளுங்கள். அவன் ஈசாக்கை பலியாடாமல் தேவ கட்டளையின்படி தேவன் தந்த ஆட்டை பலியிட்டான். ஆட்டை தேவன் தருவார் என்ற ஆபிரகாமின் விசுவாசம் தேவ கட்டளையை பிறப்பித்தது. தேவன் அன்று தந்த ஆடு இயேசுவிற்கு அடையாளமாம்.
ஆனால் வெட்டப்பட்டது ஈசாக்கின் பிதாவாகிய ஆபிரகாமின் பட்டயத்தால் அல்ல. வெட்டப்பட்டது தேவனின் பட்டயத்தில்!! கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!!
மேலும் நான் அறிந்து கொண்ட மற்றொரு கருத்தையும் சொல்லுகிறேன்..
மேலும் இஸ்ரவேலர் கைபிசகாய் ஒருவன் தன அயலானை கொன்றதினால் ஓடி ஓய்ந்து பிழைக்கும் படி அடைக்கல பட்டணத்தை காட்டினார்கள் என்பதை வேதத்தில் இருந்து அறிகிறோமே.. இப்படி கொலை செய்தவர்கள் அக்கால பிரதான ஆசாரியன் மரிக்கும் மட்டும் அடைகல பட்டணத்தில் இருக்கவேண்டும்..
எண்ணாகமம்
35 அதிகாரம்
4. அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து,
25. கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.
26. ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,
27. பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.
28. கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.
இப்படியே இயேசு என்னும் மஹா பிரதான ஆசாரியர் நமக்காக மரித்ததன் நிமித்தம் கிருபையின் நிமித்தம் அடைக்கலபட்டணத்தில் அடைக்கபட்டிருக்கும் பாவிகள் ஒவ்வொருவரும் அடைக்கலப்பட்டணத்திலிருந்து விடுபட்டு பரலோக காணியாட்சிக்கு திருப்பட்டிருகிறோம்!!!
சகோ.சந்தோஷ் //இயேசு கிருஸ்து சித்ரவதை படும் போதும், மரணமடைந்த போதும், அம்மா என தாய் பாசத்தோடு அழைக்காமல் ஸ்திரீயே என அழைத்த போதும் மரியாளின் ஆத்துமாவை பட்டயம் ஊடுறுவியது. ///
பின்வரும் வசனத்தை பாருங்கள்.
யோவான் 2:4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
அவர் 'ஸ்திரியே, எனக்கும் உனக்கும் என்ன?'என கானாவூர் திருமணத்திலேயே சொல்லிவிட்டார்.. ஆக, அவர் இன்னவிதமாய் அலைததர்க்கும் மரியாளின் இருதயத்தை ஊட்ருவிய பட்டயத்தின் காரியத்திற்கும் தொடர்பில்லை...
மரியாள் ஒருகாரியத்தை தேசாதிபதியிடத்தில் கூறி இருந்தால் இயேசு மறித்திருக்க மாட்டார்.. இயேசு மரியாள் கன்னி தன்மையில் இருந்து பிறந்தவர் என்பதை ஆதாரத்துடன் கூற இயலாதவராய் மரியாள் இருந்த ஒரு சொல்லோன துயர நிலை. யோசேப்பு மரித்த பின் நிகழத அந்த கொடுமையான நிகழ்வு,எந்த ஸ்திரிக்கும் நிகழ்ந்ததில்லை. இயேசு நியாந்தீர்க்கப்படும்போது சாட்சியாய் நேர்பட முடியாத அன்றைய தினத்தில் மரியாளின் ஆத்துமாவை ஒரு பட்டயம் ஊடுருவியது என்பதை அறியக்கடவர்!
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!!
-- Edited by JOHN12 on Friday 6th of December 2013 03:02:50 PM
"ஆத்துமா" என்பது "சுயத்தை" குறிக்கும் என்ற கருத்து சரியானது அல்ல என்றே நானும் கருதுகிறேன்.
ஆண்டவராகிய இயேசுவுக்கு சுயம் என்று சொல்லிக்கொள்ள என்ன இருந்தது?
சகோ. சந்தோஷ் குறிப்பிட்ட உதாரணம்போல் இயேசுவுக்கு எதுவும் இல்லை. மேலும் தன தாயை கூட அவர் ஒரு அந்நிய ஸ்திரிபோல் பாவித்திருக்கிறாரே!
இயேசு எல்லா இடங்களிலும் பிதாவின் சித்தப்படி செய்து அதை முடிப்பதே அவர் நோக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு சுயமான செய்கைகள் எதுவும் இருந்ததுபோல் தெரியவில்லை.
யோவான் 5:30நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
இவ்வாறு இயேசு தன் சுயமாய் ஒன்றும் செய்யாத பட்சத்தில் தேவன் அவருடைய சுயத்தை வெட்டினார் என்று சொல்லும் கருத்து பொருத்தமானதுதானா? அவருக்கு சுயம் என்று ஓன்று இருந்ததா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
முதலில்; உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் கேட்டது சரியே. இயேசு கிருஸ்து எப்போதும் பிதாவின் சித்தத்தையே செய்து வந்தார் என்பது உண்மைதான். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் பிதாவின் சித்தத்தை செய்ய விரும்பவில்லை. அதுதான் அவரது சுயமாகும். அதை பார்க்கும் முன், அதை சரியாக புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
ஒரு வீட்டில் ஒரு தந்தையும், மகனும் இருந்து வந்தனர். இவர்கள் ஒருவரிலொருவர் மிகவும் அன்பாக இருந்து வந்தனர். இப்படி இருக்கும் போது, அந்த மகன் உயர்படிப்பு படிக்க வேண்டி வந்தது. அதன் மூலம் அந்த மகன் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் மற்றும் பிற மக்களுக்கு நன்மை செய்ய முடியும். மகனுக்கும் மற்ற மனிதர்களுக்கு தான் உதவி செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
ஆனால், உயர் படிப்பு படிக்க வேண்டுமானல், அதை படிப்பதற்குரிய காலேஜ் அந்த ஊரில் இல்லை. அதற்கு வேறு ஒரு ஊருக்கு சென்று அங்கேயே தங்கி ஹாஸ்டலில் படிக்க வேண்டும். அதற்காக தந்தை, மகன் இருவரும் வேறு ஊருக்கு சென்றனர். தன் மகனை ஹாஸ்டலில் சேர்த்த அவர், அங்கிருந்து கிளம்ப தொடங்கினார்.
தந்தை மேல் மிகுந்த அன்பு கொண்ட மகனுக்கு அவரை பிரிய மனமில்லை. இதுவரை அந்த மகன் தன் தந்தையை பிரிந்ததுமில்லை. தந்தையின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்ததுமில்லை. ஆனால் இப்போதோ, தந்தை மகனை விட்டு பிரிய வேண்டிய அவசியம் வந்து விட்டது.
நான் உன்னை விட்டு பிரிந்தால்தான், நீ உயர்னிலை அடைய முடியும். மற்றும் மற்ற மனிதர்களுக்கு உதவி செய்ய முடியும் அதனால் உன்னை விட்டு போகிறேன் என அந்த தந்தை சொன்னார். இப்போது தந்தையின் விருப்பம் மகனை பிரிவதாக இருக்கிறது. அந்த மகனோ பிறந்ததிலிருந்து ஒரு பொழுதும் தன் தந்தையின் விருப்பத்தை மீறியதில்லை. அவரின் விருப்பத்துக்கு மாறானதை செய்ய ஒரு போதும் விரும்பினதில்லை
இப்போது அந்த மகனுக்கு முன்பாக இரு தெரிந்தெடுத்தல் இருப்பதை காண முடியும். ஒன்று தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது. மற்றொன்று அவரை விட்டு பிரியாமல் இருப்பது. அதாவது தன் பிதாவின் சித்தம் ஒருபக்கம், தான் பிதாவின் மேல் கொண்ட அன்பு ஒரு பக்கம்.
இவை இரண்டுக்கும் மத்தியில் சிக்கி தவித்த அந்த மகன் தேர்ந்தெடுத்தது, தான் பிதாவின் மேல் கொண்ட அன்பையே, எந்த காரணத்தை முன்னிட்டும் தன் பிதாவை பிரிய விரும்பாத அந்த மகன், என்னை விட்டு போகாதீர்கள் என்று தன்னால் முடிந்த அளவு போராடுகிறார். (பிறந்ததில் இருந்து இதுவரை தந்தையின் விருப்பத்துக்கு மாறாக போராடினதில்லை, அதாவது எந்த சுயமுமில்லை என்பது குறிப்பிடதக்கது.)
தன்னால் முடிந்த அளவு போராடின அந்த மகன், அதன் பிறகே வேறு வழியில்லாமல் தன் தந்தையின் விருப்பத்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறார்.
தந்தை மேல் கொண்ட பிரியத்தினால், தந்தையின் சித்தத்தையே எப்போதும் செய்து வந்த சுயம் சிறிதளவும் இல்லாத அந்த மகனுக்கு, தன் தந்தையை பிரிய வேண்டும் என்பதே, தந்தையின் சித்தமாக இருந்த போது, தந்தையை பிரிய விருப்பமில்லாமல், தந்தையின் சித்தத்துக்கு, மாறாக தன்னால் முடிந்த அளவு சுயத்தோடு போராடுகிறார்.
அதன் பிறகே, வேறு வழியில்லாமல் தன் தந்தையின் விருப்பத்துக்கு விட்டு விடுகிறார்.
இது சாதாரண கதை போல் தெரிந்தாலும், இந்த கதைக்கும் இயேசு கிருஸ்து கெத்சமனே தோட்டத்தில் போராடி ஜெபித்ததற்க்கும் சம்பந்தம் உண்டு.
பிதாவின் சித்தத்தை செய்வதற்கும், அவரை விட்டு பிரியாமல் இருப்பதற்குமான இவை இரண்டிற்குமான போராட்டத்தின் விளைவாகவே அவரது ரத்தம், துளிகளாக பூமியில் விழுந்தது. சுயம் இல்லாதவர் போராட வேண்டிய அவசியம் இல்லை. அதனால் சுயத்தின் விளைவாகவே போராட்டம் வந்தது.
சிலுவையில் அவர் சரீரம் துன்பத்திற்க்கு உள்ளான போது, அதை பார்த்து அவரது சீடர்கள் துன்பப்பட்டனர். ஆனால் கெத்சமனே தோட்டத்தில் அவர் அடைந்த துயரம் அதை விட மேலானது. அவருடைய சீடர்களோ அவருடைய வேதனை ஏன் என்றும், எவ்வளவு என்றும் அப்போது அறியவில்லை. இப்போதும் அனேகர் அவருடைய அந்த வேதனையை அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.
-- Edited by SANDOSH on Saturday 7th of December 2013 12:37:26 AM
//இயேசுவின் ஆவி,ஆத்துமா,சரீரம் அழியவில்லை என்பதை வேதத்தில் இருந்து நேரடியாக தங்களுக்கு விளக்கம் அளித்தும், நான் வேதத்தைக் கொண்டு சொல்லுகிறதை தவறேன்று சொல்லுகிறீர்கள். அவற்றை நீங்கள் வேதத்தைக் கொண்டு என்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.//
நீங்கள் முன்பு குறிப்பிட்டுள்ள வேத வசனங்கள் எதிலும், ஆத்துமா என்ற பதம் வரவில்லை. அதனால் அந்த வசனங்களை விளக்கமாக ஏற்க முடியவில்லை. வேறு வசனங்களை நீங்கள் கூற வந்தால் அவற்றில் ஆத்துமா எதை குறிக்கிறது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்.
//நீங்கள் இந்து சித்தர்கள்,புராணங்கள் கூறும் படியான சுயத்துக்கு உரிய விளக்கங்களோடு எப்படி வேதத்தில் உள்ளவைகளை விளக்க முனைகிறீர்கள்.//
உலகில் உள்ள எல்லா மதங்களுமே சுயம் அழிதலை ஆதரமாக கொண்டே வந்துள்ளன. சுயம் என்பது நன்மை-தீமை கனியின் விளைவாகும். சுயம் அழிவதற்கு என்ன வழி? யார் வழி? என்பதுதான் எல்லா மதங்களும் சொல்வது. (இதை என்னால் நிரூபிக்க முடியும்)
//பரலோகத்தில் பிதாவின் மடியில் அமர்ந்திருக்கும் இயேசுவானவர்க்கு 'ஆத்துமம், உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்.//
நீங்கள் சொன்னது சரியே. இயேசு கிருஸ்துவுக்கு மட்டும் அல்ல. பிதாவுக்கும் ஆத்துமா உண்டு.நான் முன் குறிப்பிட்ட உதாரணத்திலும், மனைவி, குழந்தை இறந்த அந்த மனிதனுக்கு ஆத்துமா இல்லாமல் போகவில்லை என்பதை கவனிக்கவும். ஆனாலும் அவனுக்குள் உள்ள ஒன்று இறந்தது. அது சுயம் என்றும் ஆத்துமா என்றும் கூட அழைக்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் போல ஆத்துமாவை ஹார்ட்வேர், ஸாப்ட்வேர் என இரு பிரிவாக பிரிக்கலாம். சுயம் அழிதல் என்பது ஸாப்ட்வேர் சம்பந்தப்பட்டது. முன் கூறின உதாரணத்தில் அந்த மனிதன் தனக்குள் ஒரு புரோக்ராமை வைத்திருந்தான். அந்த புரோக்ராம் அவனுக்கு அவனை அடையாளம் காட்டினது.
மனைவி, குழந்தை மரணத்தால், "நான்" என்று அவன் அடையாளம் செய்து வைத்திருந்த புரோக்ராம் பாதிப்புக்கு உள்ளானது. அதனாலேயே அவன் துன்பமடைந்தான். ஏனெனில் அவன் சரீரத்தில் எந்த துன்பமும் அவனுக்கு இல்லை. துன்பத்திற்க்கு காரணம் அவனுள் இருந்த சாப்ட்வேர்.
இதனால் அவன் ஹார்ட்வேர் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. (Facility - to think, to feel, to desire, to crave not affected) அவன் வேண்டுமானால் இன்னொரு புதிய சுயத்தை உருவாக்கி கொள்ளலாம் அல்லது சுயத்தை மாயை என்று உணரலாம் அது அவனுடைய விருப்பம்.
கம்ப்யூட்டர் வேலை செய்யாவிட்டால், அதற்கு ஹார்ட்வேர் அல்லது ஸாப்ட்வேர் இவை இரண்டில் எதாவது காரணமாக இருக்கலாம். ஆனால் எது பிரச்சனையாய் இருந்தாலும் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை என பொதுவில் சொல்வது போலதான் ஆத்துமா மரணமடைந்தது என கூறுவது. இந்த இடத்தில் அது அவனுடைய சாப்ட்வேரை குறிக்கிறது.
கர்த்தர் புது இருதயத்தை தருகிறார் என்றால் அது ஸாப்ட்வேர் சம்பந்தமானது என்பதை ஆன்மிக வாதிகள் அறிந்து கொள்வார்கள். அது போலத்தான் இதுவும். இயேசுவுடன் கூட நாம் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்தோம் என்றால் நாம் உண்மையாக இறந்து விட்டோமா? அடக்கம் பண்ண பட்டோமா? பிறகு உயிரோடு எழும்பினோமா? இதற்கு பெயர்தான் ஆன்மிக பார்வை.
ஆன்மிகத்தை பொறுத்த வரை மனிதனை சரீரம் சம்பந்தப்பட்டவனாக கருதுவதை காட்டிலும் (உலகம் அவ்வாறு கருதும்), ஆவி, ஆத்துமா சம்பந்தபட்டவனாகவே கருதும். ஏனெனில் ஆன்மிகத்துக்கு மனிதனுக்குள் ஏற்படும் உள்ளான வளர்ச்சி முக்கியமானது.
//இயேசுவின் ஆத்துமா அழிவதில்லை என்கிற உண்மையை அறியாமல்//
நீங்கள் சொன்னது சரியே. நான் முன் குறிப்பிட்ட உதாரணத்திலும், மனைவி, குழந்தை இறந்த அந்த மனிதனுக்கு ஆத்துமா இல்லாமல் போகவில்லை என்பதை கவனிக்கவும்.
//இயேசுவின் ஆத்துமா அழிவதில்லை என்கிற உண்மையை அறியாமல் நீங்கள் வேத அடிப்படை இல்லாமல் பேசுகிறீர்கள்.// இதோ வேத அடிப்படை :
மத்தேயு 26:38 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி; மாற்கு 34. அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
ஏசாயா 53.10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். 12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
//இந்துத்துவ 'சுயத்தை' பற்றிய விளக்கங்களுக்கும், நம் வேதம் கூறும் உண்மைகளுக்கும் தொடர்பிருப்பது போல தோன்றுவது சாத்தான் ஏற்படுத்தின மாயை.//
சுயம் அழிதலை பற்றி பைபிளில் இல்லாதது போல தோற்றமளிக்க செய்ததே சாத்தானின் மாயை சுயம் அழிந்த பவுல் கிருஸ்துவை போல மாறினதை பற்றி, (இதுவே கிருஸ்துவம் அடைய சொல்லும் உச்சகட்ட நிலை)
இதோ வேத ஆதாரம்,
காலத்தியர்.2.20. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்;
//மனமும் ஆத்துமாவும் ஒன்று என்ற நிலையை சில இந்து மதவாதிகள் ஒப்புகொள்வதில்லை. ஆயினும் நீங்கள் கூறுவது போல ஆத்துமா அற்ற நிலை சுயத்தை இழந்த நிலை என்றால், சுயத்தை இழப்பது மட்டுமே பாவம் செய்பவனுக்கு கர்த்தரால் வரும் நியாய தீர்ப்பாக காணப்படும். இது வேத விரோதம்.. //
ஆத்துமா ஹார்ட்வேர், ஸாப்ட்வேர் என இரண்டையும் குறிக்கும்.
//ஆத்துமா அழிவை குறித்து தங்கள் கருத்துக்கள் வேதம் கூறுவதோடு ஒத்து போக வில்லை. கவனியுங்கள். மரணம் ஆத்துமாவை அழிப்பதில்லை. ஆத்துமம் பிரிவது அல்லது எடுதுகொள்ளபடுவதே சரீர மரணம்.(விளக்கங்கள் தேவைப்படின் தருகிறேன் ) பின்வரும் பாருங்கள.//
இறந்த பிறகு, ஒரு மனிதனின் புரோக்ராம் அவனுடன் கூடவே இருக்கிறது. அதாவது அவனது ஆத்துமா சரீரத்தை விட்டு பிரிந்து, அவனோடு கூடவே இருக்கிறது. இந்த புரோக்ராமை வைத்துதான் அவன் நியாயம் தீர்க்கப்படுவான். அதனால் வாழும் போதே புரோக்ராமை சரியாக மாற்றி கொள்வது அவசியம். நீங்கள் கூறியது சரியே. அதை நான் மறுக்கவில்லை.
//தேவன் ஆத்துமாவை அழிக்கும் இடம் நரகம் பின்பு நித்திய அழிவு அக்கினி கடலில். மரித்த பின் இயேசு நரகத்தில் பிரவேசிக்கவில்லை.(அவர் காவலில் உள்ள ஆத்துமாகளுக்கு பிரசங்கித்த இடம் வேறு!!).// நீங்கள் சொன்னது சரியே. நரகத்தில் ஆத்துமா அழிவு என்பது வேறு ஒன்றை குறிக்கிறது. அதை புரிந்து கொள்வது இன்னும் கடினம். இயேசு கிருஸ்து இந்த ஆத்தும மரணத்தை அடையவில்லை.
சகோ.சந்தோஷ் ///பிதா தன் குமாரனை சிலுவையில் இமைப் பொழுது கைவிட்டார். இதுதான் இயேசு கிருஸ்துவின் ஆத்துமாவை வெட்டின பட்டயம். அதை தாங்க மாட்டாத அவர், பிறகு பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்பு கொடுத்தார். இதன் மூலம் அவர் ஆத்துமா மரணத்தை கண்டது.///
சகோதரரே, நீங்கள் அனேக காரியத்தை உட்புகுத்தி பார்க்கவே விரும்புகிறீர்கள்.. இப்படி இருக்குமோ,அப்படி இருக்குமோ என்று.வேத ஆய்வில் trail and error என்பது சரியற்றதல்லவா?
இதோ ஆதார வேத வசனங்கள் :
சங்கீதம்.22.18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள். 19. ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும். 20. என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும். 21. என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். 22. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
சிலுவையில் இயேசு கிருஸ்து, இரண்டு காரியத்தை பிதாவிடம் வேண்டுகிறார்.
20. என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும்,
ஒன்று ஆத்துமாவை பட்டயத்திற்க்கு தப்புவிக்க - இதன் மூலம் பிதாவாகிய தேவன் தன்னை சிலுவையில் கைவிடாதிருக்கும்படி வேண்டுகிறார்.
இரண்டாவது அவருக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்க்கு தப்புவிக்க - இங்கு அருமையானது என அழைக்கப்டுகிறவர்கள் இயேசு கிருஸ்துவின் சீடர்கள். தன்னை சிலுவையில் அறைந்தவர்களால், தன்னுடைய சீடர்களுக்கு எந்த துன்பமும் வரக் கூடாது எனவும் வேண்டுகிறார்.
இயேசு கிருஸ்து வேண்டின இரண்டில், முதலாவது அவருக்கு அருளப்படவில்லை. இன்னொன்று அவருக்கு அருளப்பட்டது. அவரது வேண்டுதலுக்கு பிதாவின் பதில் இங்கே.
சகரியா.13.7. பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்,
மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.
இதை இயேசு கிருஸ்து தன்னுடைய சீடர்களுக்கு மேற்கோள் காட்டுகிறார்.
மாற்கு 14.27. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள
சீடர்களுக்காக வேண்டி கொண்டது பற்றி :
லூக்கா.22.31. பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். 32. நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
யோவான்.18.7. அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். 8. இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். 9. நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
தன்னுடைய சீடர்களுக்காக இயேசு கிருஸ்து வேண்டி கொண்டது பற்றி, யோவான் 17.5 லிருந்து 26
14. நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. 15. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
அவரது வேண்டுதலை பிதா அங்கீகரித்தார். இவ்வாறு தனக்கு அருமையானதை இயேசு கிருஸ்து நாய்களிடமிருந்து காப்பாற்றி கொண்டார்.
சிலுவையில் பிதாவால் இயேசு கிருஸ்து கைவிடப்படுவார், என்றும் அதனால் அவர் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிப்பார் என்பது பற்றியும் அவர் கர்ப்பத்தில் இருக்கும் போதே தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது.
லுக்கா 2.34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
சிலுவையில் பிதா தன் குமாரனை கைவிட்டார்.
மத்தேயு.27.46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு 15.34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
பிதாவின் பிரசன்னம் தன்னை விட்டு போனதை உணர்ந்த அவர், அதற்கு மேல் வாழ விரும்பாமல் தன் ஜீவனை பிதாவுக்கு ஒப்புக் கொடுத்து விட்டு இறந்தார். பிதா தன்னை விட்டு பிரிய மாட்டார் என்ற நம்பிக்கை, பிதாவோடு சேர்ந்து இருந்ததால் அடைந்த ஆனந்தம், பிதாவோடு எப்போதும் இருப்போம் என்ற ஆசை முதலியன சிலுவையில் வெட்டுப்பட்டது. இவ்வாறு அவர் ஆத்தும வருத்தத்தையும், ஆத்தும மரணத்தையும் சந்தித்தார்.
பிதாவின் பிரசன்னத்தை அவர் தன் உயிரினும் மேலாக நேசித்தார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. வேதத்தில் பல இடங்களில், மரணம் என்பது சரீர மரணத்தை குறிக்காமல், தேவ பிரசன்னத்தை விட்டு விலகுதலாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி கனியை தின்ற ஆதாமின், ஆவி என்னும் பகுதி தேவ பிரசன்னத்தை இழந்து, மரணமடைந்தது. மேலும் பாவம் செய்கிற மனிதனின் ஆத்துமா சாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பாவம் செய்த ஆத்துமா, தேவனின் பிரசன்னத்தை இழந்து போகுதலே.
ஆகவே, மரணம் என்பதற்கு தேவ பிரசன்னத்தை இழந்து போதல் என்பது முக்கிய அர்த்தமாகும்.
இதன்படி பிதாவின் பிரசன்னம் தன்னை விட்டு விலகின போது, இயேசு மரணத்தை சந்தித்தார். உள்ளான மரணத்தை அடைந்த அவர், சரீர பிரகாரமாக அதற்கு மேல் வாழ விரும்பாமல் தன் ஜீவனை ஒப்புக் கொடுத்து இறந்தார்.
//சங்கீதம்.22.18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள். 19. ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும். 20. என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும். 21. என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். 22. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
சிலுவையில் இயேசு கிருஸ்து, இரண்டு காரியத்தை பிதாவிடம் வேண்டுகிறார்.
20. என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும்,
ஒன்று ஆத்துமாவை பட்டயத்திற்க்கு தப்புவிக்க - இதன் மூலம் பிதாவாகிய தேவன் தன்னை சிலுவையில் கைவிடாதிருக்கும்படி வேண்டுகிறார்.
இரண்டாவது அவருக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்க்கு தப்புவிக்க - இங்கு அருமையானது என அழைக்கப்டுகிறவர்கள் இயேசு கிருஸ்துவின் சீடர்கள். தன்னை சிலுவையில் அறைந்தவர்களால், தன்னுடைய சீடர்களுக்கு எந்த துன்பமும் வரக் கூடாது எனவும் வேண்டுகிறார்.
இயேசு கிருஸ்து வேண்டின இரண்டில், முதலாவது அவருக்கு அருளப்படவில்லை. இன்னொன்று அவருக்கு அருளப்பட்டது. அவரது வேண்டுதலுக்கு பிதாவின் பதில் இங்கே.
சகரியா.13.7. பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்,
மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.
இதை இயேசு கிருஸ்து தன்னுடைய சீடர்களுக்கு மேற்கோள் காட்டுகிறார்.
மாற்கு 14.27. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள
சீடர்களுக்காக வேண்டி கொண்டது பற்றி :
லூக்கா.22.31. பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். 32. நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
யோவான்.18.7. அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். 8. இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். 9. நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
தன்னுடைய சீடர்களுக்காக இயேசு கிருஸ்து வேண்டி கொண்டது பற்றி, யோவான் 17.5 லிருந்து 26
14. நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. 15. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
அவரது வேண்டுதலை பிதா அங்கீகரித்தார். இவ்வாறு தனக்கு அருமையானதை இயேசு கிருஸ்து நாய்களிடமிருந்து காப்பாற்றி கொண்டார்.
சிலுவையில் பிதாவால் இயேசு கிருஸ்து கைவிடப்படுவார், என்றும் அதனால் அவர் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிப்பார் என்பது பற்றியும் அவர் கர்ப்பத்தில் இருக்கும் போதே தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது.
லுக்கா 2.34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
சிலுவையில் பிதா தன் குமாரனை கைவிட்டார்.
மத்தேயு.27.46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு 15.34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
பிதாவின் பிரசன்னம் தன்னை விட்டு போனதை உணர்ந்த அவர், அதற்கு மேல் வாழ விரும்பாமல் தன் ஜீவனை பிதாவுக்கு ஒப்புக் கொடுத்து விட்டு இறந்தார். பிதா தன்னை விட்டு பிரிய மாட்டார் என்ற நம்பிக்கை, பிதாவோடு சேர்ந்து இருந்ததால் அடைந்த ஆனந்தம், பிதாவோடு எப்போதும் இருப்போம் என்ற ஆசை முதலியன சிலுவையில் வெட்டுப்பட்டது. இவ்வாறு அவர் ஆத்தும வருத்தத்தையும், ஆத்தும மரணத்தையும் சந்தித்தார்.
பிதாவின் பிரசன்னத்தை அவர் தன் உயிரினும் மேலாக நேசித்தார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. வேதத்தில் பல இடங்களில், மரணம் என்பது சரீர மரணத்தை குறிக்காமல், தேவ பிரசன்னத்தை விட்டு விலகுதலாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி கனியை தின்ற ஆதாமின், ஆவி என்னும் பகுதி தேவ பிரசன்னத்தை இழந்து, மரணமடைந்தது. மேலும் பாவம் செய்கிற மனிதனின் ஆத்துமா சாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பாவம் செய்த ஆத்துமா, தேவனின் பிரசன்னத்தை இழந்து போகுதலே.
ஆகவே, மரணம் என்பதற்கு தேவ பிரசன்னத்தை இழந்து போதல் என்பது முக்கிய அர்த்தமாகும்.////
சகோதரரே.. அருமையான பதிவு!! நீங்கள் இந்த பதிவில் சொல்லி இருக்கும் அனைத்து காரியமும் சத்தியம்.. எனக்கு எந்த வேறுபாடும் இல்லை.. கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!
ஆனால் தேவனது பட்டயம் என்ன என்பதை இந்த பதிவு விளக்கவில்லை.. எது இயேசுவிற்கு பிதாவின் சமூகத்தை விலக்கினது என்பதற்கு தங்கள் பதிவில் விளக்கம் எதுவும் இல்லை.
நீண்ட ஆயுசுள்ளவரால் இயேசு நியாந்தீர்க்கப்பட்டார். நியாயதீர்ப்பின் நிமித்தமே தேவனால் நம் பாவங்களை அவர் ஏற்றுகொண்டதின் நிமித்தம் வெட்டப்பட்டார். இதன் காரணமாகவே பிதாவானவர் நியாயதீர்ப்பு செய்யும் முழு அதிகாரத்தையும் குமாரனுக்கு கனமுண்டாக அளித்திருகிறார் என்பதை நாம் அனைவரும் வேண்டியது!!!
யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
ஆத்துமாவை பற்றிய தங்கள் உருவகத்திற்கும்,தங்களின் கேள்விகளுக்கும் விரைவில் பதில் தருகிறேன்..
(ஆத்துமாவை பற்றி நாம் விவாதிக்கும் பொது இன்னொரு கவனிக்க வேண்டிய காரியத்தையும் தங்களிடத்தில் விவாதிக்க எண்ணினேன்.. அது ஹிப்னாடிசம் பற்றியது. சபைகளில் பேசப்படும் பரவச பேச்சு பற்றியது!! மனித முயற்சியால் பரிசுத்த ஆவியானவரை நம்மிடம் பெருகவிடாமல் செய்கிற புத்தியீன போதர்கர்களை பற்றியது!!!
நான் கூறுவது தங்களுக்கு புரிந்திருந்தால், இதை குறித்து தாங்கள் ஏதேனும் உணர்வு பெற்றிருந்தால் தனி திரி அமைத்து பதியுங்கள். அநேகருக்கு பிரியோஜனமாகும்.)
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!
-- Edited by JOHN12 on Monday 9th of December 2013 07:32:35 PM
//ஆனால் தேவனது பட்டயம் என்ன என்பதை இந்த பதிவு விளக்கவில்லை.. எது இயேசுவிற்கு பிதாவின் சமூகத்தை விலக்கினது என்பதற்கு தங்கள் பதிவில் விளக்கம் எதுவும் இல்லை.
நீண்ட ஆயுசுள்ளவரால் இயேசு நியாந்தீர்க்கப்பட்டார். நியாயதீர்ப்பின் நிமித்தமே தேவனால் நம் பாவங்களை அவர் ஏற்றுகொண்டதின் நிமித்தம் வெட்டப்பட்டார்.//
சிலுவையில் இயேசு கிருஸ்து இரண்டு விதமான நியாயத்தீர்ப்புகளை சந்தித்தார். ஒன்று அவரது சரீரம் மற்ற மனிதர்களால் துன்புறுத்தப்பட்டது மற்றும் அவமானபடுத்தப்பட்டது.
இவ்வாறு, மற்ற மனிதர்கள் அவரது சரீரத்தை துன்புறுத்த, அவரை அவமானப்படுத்த பிதாவாகிய தேவன் அவரை மனிதர்கள் கையில் ஒப்புக் கொடுத்தார். ஆனால் இந்த துன்புறுத்தலில், அவமானத்தில் பிதாவுக்கு நேரடியான தொடர்பு இல்லை.
இரண்டாவதாக, சிலுவையில், பிதாவாகிய தேவன் தன் பிரசன்னத்தை இயேசு கிருஸ்துவிடமிருந்து விலக்கி கொண்டார். இந்த நியாயத்தீர்ப்பில் மனிதர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை அல்லது மனிதர்கள் செய்த பாவம் மறைமுக பங்கு மட்டுமே வகிக்கிறது. அதாவது பிதாவின் பிரசன்னத்தை இயேசு கிருஸ்துவிடமிருந்து விலக்கி வைக்க மனிதர்களால் முடியாது. இந்த நியாயத்தீர்ப்பில் பிதாவாகிய தேவன் தானே நேரடியாக சம்பந்தப்படுகிறார்.
மேற கண்ட இரண்டு நியாயத்தீர்ப்புகளில், முதலாவதாக சொல்லப்பட்ட அவமானமும், துன்பமும் இயேசு கிருஸ்துவை பாதிக்கவில்லை. அவர் அதனால் எந்த கஸ்டமும் அடையவில்லை.
பிதாவின் நேரடி நியாயதீர்ப்பான அவரது பிரசன்னத்தின் மறைவு மட்டுமே இயேசு கிருஸ்துவை பாதித்து அவரை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது. இதுவே பிதாவின் பட்டயம் ஆகும். தன்னை தன் குமாரனுக்கு மறைத்து கொண்டதால், குமாரனின் ஆத்துமாவை பிதா பட்டயத்தால் வெட்டினார். இது மட்டுமே இயேசு கிருஸ்துவை துன்பத்திற்கு உள்ளாக்கியது.
//சிலுவையில் இயேசு கிருஸ்து இரண்டு விதமான நியாயத்தீர்ப்புகளை சந்தித்தார். ஒன்று அவரது சரீரம் மற்ற மனிதர்களால் துன்புறுத்தப்பட்டது மற்றும் அவமானபடுத்தப்பட்டது.
இரண்டாவதாக, சிலுவையில், பிதாவாகிய தேவன் தன் பிரசன்னத்தை இயேசு கிருஸ்துவிடமிருந்து விலக்கி கொண்டார். இந்த நியாயத்தீர்ப்பில் மனிதர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை அல்லது மனிதர்கள் செய்த பாவம் மறைமுக பங்கு மட்டுமே வகிக்கிறது. அதாவது பிதாவின் பிரசன்னத்தை இயேசு கிருஸ்துவிடமிருந்து விலக்கி வைக்க மனிதர்களால் முடியாது. இந்த நியாயத்தீர்ப்பில் பிதாவாகிய தேவன் தானே நேரடியாக சம்பந்தப்படுகிறார்.
பிதாவின் நேரடி நியாயதீர்ப்பான அவரது பிரசன்னத்தின் மறைவு மட்டுமே இயேசு கிருஸ்துவை பாதித்து அவரை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது. இதுவே பிதாவின் பட்டயம் ஆகும். தன்னை தன் குமாரனுக்கு மறைத்து கொண்டதால், குமாரனின் ஆத்துமாவை பிதா பட்டயத்தால் வெட்டினார். இது மட்டுமே இயேசு கிருஸ்துவை துன்பத்திற்கு உள்ளாக்கியது. //
பிதாவின் பிரசன்னம் அவர் மனிதர்களிடம் கையளிக்கப்பட்டபோதே விளக்கிகொள்ளபட்டது என்பதை சகோதரர் அறிவாராக. இன்னும் ஆழமாய் இவைகளை விளக்கவேண்டியுள்ளது,.
சகோதரரே, பின்வரும் வசனத்தை பாருங்கள்
இயேசுவின் மீது தேசாதிபதியானவனுக்கு அதிகாரம் பரத்திலிருந்து அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
யோவான் 19:11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
இந்த அதிகாரம் இயேசுவின் மேல் சேவகர்கள் கைபோட்டதிலிருந்து (அவர் நேரம் வந்த போது) கிரியை செய்தது என காண்கிறோம். ஆக இயேசு கைவிடப்பட்டது இயேசுவானவரின் மேல் சேவகர்கள் கைபோட்டதிலிருந்து அவர் சிலுவை சாவு வரை என்பதை நாம் அறிய வேண்டியது.
இந்த கால அளவு, நாம் விவாதிக்கும் இரண்டு நியாயதீர்ப்புகளும் நிறைவேறும் கால அளவிற்கு சரியானது. பின்வரும் வசனங்களில் காணப்படும் 'ஒப்புக்கொடுக்கபடுதல்' என்பதில் இருந்து இயேசு கைவிடபடுவது நிகழ்கிறது.
மத்தேயு 26:2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.
மத்தேயு 26:45 பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது.
மாற்கு 10:33 இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும்ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,
மத்தேயு 20:19 அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
மத்தேயு 27:2 அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
மேலும் இந்த நியாய தீர்பிர்க்கு ஆதாரமாய் பின்வரும் வசனம் உள்ளது,.
யோவான்
18 அதிகாரம்
11. அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.
மேலும் இந்த 'கைவிடபடுத்தல்' இயேசுவிற்காக பிதா நியமித்த 'பானமாய்' இருக்கிறது. இந்த 'பானம்' என்கிற பதம் நியாய தீர்ப்பை குறிக்கிறது (வெளிபடுதித்னா விஷேச்திலும் ,சில தீர்க்க தரிசன புத்தகங்களிலும்).
இந்த பானம் அருந்துதல் பின்வரும் வசனத்தின் படி நியாய தீர்ப்பின் இருபடிநிலைகளை கொண்டதாக நிறைவேறுகிறது. கவனியுங்கள்..
சகரியா 13:7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.
1) பட்டயத்தின் ஆயத்த நிலை (பட்டயம் எழும்புதல் )
2) இயேசுவை வெட்டுதல்.
ஆக, இந்த பானத்தை இயேசு எப்போது பருகினாரோ, அப்போது பட்டயம் எழும்பினது, பின் பட்டயம் வெட்டியபோது இயேசு மரித்தார்.
பட்டயம் வெட்டும்போது நிகழ்ந்த நிகழ்வே 'திரை சீலை' கிழிந்தது.
லூக்கா 23:45 சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
மேற்கண்ட வாசனங்கள் இயேசு ஜீவனை விடும்போது திரைசீலையும் கிழிந்ததையும் அறியலாம். இந்து தேவ பட்டயத்தால் இயேசு வெட்டபட்டதற்கு அடையாளம் என்பதை சகோதரர்கள் அறிவார்களாக!!!
இந்த திரைசீலை கிழிப்பு அனேக சாத்தியங்களை உள்ளடக்கியாக உள்ளது!! சமயம் வைத்தால் பின்பு விவாதிப்போம்..