நாங்கள் அறிந்த திருமணமாகாத ஒரு சகோதரி ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு ரட்ச்க்கபட்ட பின்னர் துன்மார்க்கமான ஒரு வாழ்க்கைக்குள்
கடந்து போனார்கள். உலகத்தில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை எல்லாம் அனுபவித்தார்கள்.
இப்பொழுது அவர்களுக்கு என்னவென்று தீர்மானிக்க முடியாது ஒரு நோய் வந்து உடம்பில் ஒவ்வொரு பாகமாக கடுமையான வேதனையில் வாடுகிறார்கள்.
மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் அவர்கள் உடம்பில் எந்த ஒரு நோயும் இருப்பதுபோல் தெரியவில்லையாம் ஆனால் ஒருநாள் காலில் வேதனை ஒருநாள் உடம்பின் பக்கம் முழுவதும் வேதனை இன்னொருநாள் இன்னொருபக்கம் வேதனை என்று தாங்கமுடியாத வேதனையில் வாடுகிறார்கள்.
தன பாவத்தை உணர்ந்து ஆண்டவராகிய இயேசுவிடம் வெகுவாக அழுது மன்னிப்பு கேட்டு மனம் திரும்பியிருக்கும் அவர்கள் கடந்த சில மாதமாக படும்
வேதனையை சொல்லி மாளாது, மரித்தால் கூட நலம் என்று என்னும் அளவுக்கு அவர்களுக்கு வேதனை இருக்கிறது.
அவர்களுக்காக நாங்கள் கடந்த ஓரிரு மாதமாக ஜெபித்து வருகிறோம். தள சகோதர சகோதரிகளும் அந்த சகோதரி பூரண குணமடைய ஜெபித்துகொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)