இன்று பல அதிமேதாவிகளான பல விசுவாசிகளின் நிலையை ஆராய்ந்தால் அவர்கள் வேத வசனத்தின் மூலம் தேவனை ஆராயும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அது நிச்சயம் சாத்தியம் அல்ல!
நாம் ஏன் வேத வசனங்களை ஆராய வேண்டும் என்று வேதம் சொல்கிறது!
இயேசுவை குறித்த சாட்சி வேத வாக்கியங்களில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாம் வேதத்தை ஆராய வேண்டும். ஆனால் நாம் இயேசுவை அறிந்து அவரால் நித்திய ஜீவன் உண்டு என்பதை ஏற்கெனவே ஏற்றும் கொண்டுவிட்டோம்.
அடுத்து முக்கியமாக நாம் எதற்க்காக வேத வசனங்களை ஆராய வேண்டும்?
ஆம்! நாம் வேதத்தை ஆராய்ந்து பார்த்து அதிலுள்ள வார்த்தைகளை கைகொண்டு நடப்பதன் மூலம் நற்குணசாலிகலாக மாறமுடியும்.
அதற்காகவே முக்கியமாக நாம் வேதத்தை ஆராய வேண்டும்!
ஆனால் தேவனையும் அவர் மகத்துவத்தையும் அவர் செயல்பாடுகளையும் நாம் ஒருபோதும் ஆராய்ந்து அறிந்துவிட முடியாது
சங்கீதம் 145:3கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.
யோபு 36:26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
ஏசாயா 40:28பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.
ஆம் தேவனை ஒருபோதும் ஆராய்ந்து அறிந்துவிட முடியாது!
நான் தேவனால் அபிஷேகிக்கபட்டபோது அவர் எனக்கு சொன்ன வார்த்தை "அநேகர் வேத வசனத்தை எடுத்துகொண்டு என்னை ஆராய்ந்து அறியவும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவும் முற்ப்படுகிறார்கள், ஆனால் என்னை ஒருபோதும் ஆராய்ந்து கண்டுபிடித்துவிட முடியாது" என்பதே!
தேவன் தன்னை வேதாகம வார்த்தைகள் மூலமும் தன் குமாரன் மூலமும் உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது உண்மையே
2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்;
ஆனாலும் அவர் வெளிப்பாடுகளை நாம் மனித மூளையின் ஆராய்ச்சி மூலமாக முழுமையாக அறிந்துவிட முடியாது!
காரணம் தேவன் ஞானிகளைவிட குழந்தை போன்ற இன்னொசென்ட் களுக்கு தன்னை வெளிப்படுத்த சித்தமுள்ளவராக இருக்கிறார்.
லூக்கா 10:21அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
அவர் ஞானிகளை பயித்தியமாக பாவிக்கிறார்!
ஒருவர் தன் ஞானத்தை வைத்து வேதத்தை ஆராய்ந்து நான் தேவனை கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்வாராகில் அவர் சரியானதை கண்டுகொள்ளவில்லை என்பது திண்ணம். எனினும் பலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக அனேக வசங்களை சுட்டிகாட்டி தாங்கள் தேவனை அறிந்துவிட்டதாக கூறிவருகின்றனர். அதில் நிச்சயம் உண்மை இருக்காது என்பது என்னுடைய கருத்து. ஆகினும் அவர்கள் தாங்கள் அறிந்ததற்குமேல் ஒன்றுமில்லை என்ற வீண் பிடிவாதத்தின் மூலம் அதற்க்குமேல் எதையும் ஏற்க்க மறுக்கிறார்கள்.
அதுபோல் பலரை நான் என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன் "இது இப்படி இருக்கவே முடியாது" "இது இப்படித்தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும்" "எனக்கு தெரியாமல் அப்படியொன்று இருக்க/ நடக்க சாத்தியமே இல்லை" என்று சொன்னவர்கள் எல்லாம் உண்மையை அறிந்தபோது எதுவும் பேசாமல் மௌனமாகி போனதுண்டு. ஏன் நானும் கூட "கடவுள் என்று ஒருவர் இருக்க சாத்தியமே இல்லை" என்பதுபோல் கூறியவந்தான் ஆனால் அவரின் மேன்மையில் ஒரு சிறு பகுதியை அறிந்தபிறகு, அன்று அவ்வாறு கூறியதற்காக வெட்கப்படுகிறேன்.
இப்படி ஆராயமுடியாத மகத்துவமுள்ள தேவன் "என்னை தேடுபவர்களுக்கு நான் தென்படுவேன்" என்று சொல்லும் பல வசனங்களை நாம் பார்க்க முடியும்!
எரேமியா 29:13உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
II நாளாகமம் 15:2சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்;
I நாளாகமம் 28:9கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்
இங்கு தேவன் தெளிவாக சொல்கிறார் அவரை முழு இருதயத்தோடு தேடினால் மட்டுமே கண்டடைய முடியுமேயன்றி வசனத்தை ஆராய்ந்து அவரை கண்டுகொள்ள முடியாது. எனவே நாலு வசனங்களை சுட்டிகாட்டி இவர்தான் அவர் அவர்தான் இவர் என்ற அனுமானம் எல்லாம் தேவையற்றது. அவர் தன்னை ஒருவருக்கு வெளிப்படுத்தவில்லை என்றால் அவர் யாரென்று யாராலும் அறிய முடியாது.
எனவே வேத வசனங்களை ஆராய்ந்து அதன்படி நடந்து நற்குணசாலிகளாக மாறுவோம்! தேவனை அறியும் அறிவை பெற அவரை முழு இருதயத்தோடும் முழு மனதோடும் தேடுவோம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வேதாகமம் முழுவதையும் ஆராய்ந்து பார்த்தார் "பவுல்/தானியேல் போன்ற படித்தவனுக்கும் ஞானிக்கும் தன்னை வெளிப்படுத்தியதை விட பரதேசிக்கும் ஆடு மாடு மேய்ப்பவருக்கும் மீன்பிடிப்பவருக்கும் ஒன்றும் தெரியாதவனுக்கும் தான் தேவன் தன்னை அதிகமாக வெளிப்படுத்திஇருக்கிறார்
வேதாகமத்தில் முதல் ஐந்து புத்தகத்தை எழுதிய மோசே ஆடுமாடு மேய்த்தவன், திக்குவாயன். தேவனுக்குபிரியமானவன் என்று பெயர் பற்ற தாவீது ஆடுமாடு மேய்த்தவன் வீட்டிலேயே கடைசி பிள்ளை "இஸ்ரவேலின் தேவனுக்கு முன்னாள் நிற்கும் நான்" என்று திடமாக சொன்ன எலியா ஒரு பரதேசி / இரட்டிப்பான வரங்களை பெற்ற எலிசா ஒரு வேலைக்காரன் / இஸ்ரவேலின் ராஜாக்களை உருவாக்கிய சாமுவேல் ஒரு குழந்தை /தீர்க்கதரிசியான எரேமியாவை தேவன் அழைக்கும்போது அவன் ஒரு குழந்தை/ தீர்க்கதரிசியான ஆமோஸ் காட்டத்தி பழம் பொறுக்குபவன் ஆண்டராகிய இயேவோடு கூட இருந்து பழகிய சீஷர்கள் பலர் மீன் பிடிப்பவர்கள்/ மத்தேயு ஒரு ஆயக்காரன் இப்படி அடுக்கிகொண்டே போகலாம்
இன்றும்கூட சில ஒன்றும் அறியாதவர்களுக்கு தேவன் கொடுக்கும் வெளிப்பாட்டை நான் கேட்க நேர்ந்தபோது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது. சரியாக வேதத்தை படிக்ககூட தெரியாத ஒரு சகோதரிக்கு தேவன் ஒரு வெளிப்பாடை கொடுப்பதோடு அதை வேத ஆதாரத்தோடு விளக்கியும் காண்பிக்கிறார்.
தேவனின் மகிமையும் இரக்கமும் என்னவென்று சொல்வது?
பட்சிக்கும் அக்கினி என்று பெயர் கொண்டுள்ள பயங்கரமான தேவன் சிலரிடம் ஒரு குழந்தைபோல நடந்துகொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும்.
உதாரணமாக யோனா தீர்க்கதரிசியை எடுத்துகொள்ளுங்கள். அவனுக்கும் கர்த்தருக்கும் நடந்த சம்பாஷனையை படிக்க படிக்க கண்களில் நீர்த்துளிகள் வருவதோடு தேவனை நான் அறிந்தது ஒரு சிறு பகுதிதான் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
நினிவே நகரம் அழிவதை பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவோடு தரித்திருந்த யோனாவை பார்த்து தேவன் கேட்கிறார்.
9. அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.
ஆம்! தேவனிடமே யோனா துணிந்து சொல்கிறார் "நான் மரணபரியந்தம் எரிச்சலாக இருப்பது நல்லதுதான்" என்று! ஆனால் தேவன் அவனிடம் எந்த கோபமும் கொள்ளவில்லை! காரணம் அவன் சொல்வதில் நியாயம் இருந்தது. வரமாட்டேன் என்று சொன்ன அவனை விடாப்பிடியாக "நகரம் கவிழ்க்கப்படும்" என்று சொல்ல கர்த்தர் அழைத்து வந்தார். அனால் இப்பொழுதோ அழிக்கவில்லை! இதன் மூலம் யோனா கள்ள தீர்க்கதரிசிபோல் பாவிக்கப்பட நேர்ந்தது. அது அவனுக்கு மிகப்பெரிய கஷ்டம்தானே? எனவே கர்த்தர் அவன்மீது கோபம் எதுவும் கொள்ளாமல் தன்னுடைய நிலையை எடுத்து
சொல்லி யோனாவை சமாதானம் செய்கிறார்
10. அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
11. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
இந்த வசனங்களை படித்தால், தேவன் தன உழியக்காரரின் எரிச்சலையும்கூட சகித்துக்கொண்டு, அவருக்கும் பெரிய பாதிப்பில்லாமல் நகரத்துக்கும் பாதிப்பை ஏற்ப்படுத்தாமல் எப்படி எல்லோரையும் நடத்துகிறார் என்பதை அறிய முடிகிறது.
எனவே யார் எந்தவிதமான கருத்தை கொண்டிருந்தாலும் பரவாயில்லை அடுத்தவரை நியாயம் தீர்ப்பதை விட்டுவிட்டு
நம் தேவனுக்கு முன்பாக உண்மையும் உத்தமமுமாக நடந்து கபடு இல்லாமல் தேவனுக்கு பிரியமானவர்களாக வாழ்ந்து எல்லோர் மேலும் இரக்கமாக நடந்து கொண்டால் தேவன் நிச்சயம் நம்மோடு இருப்பார்.
மீகா 6:8மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
(எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்துவிட்டேன் மன்னிக்கவும்)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)