இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவி ஆத்துமா சரீரம் Vs. திரித்துவம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
ஆவி ஆத்துமா சரீரம் Vs. திரித்துவம்!
Permalink  
 


பொதுவாக பார்க்கபோனால் ஆவி/ஆத்துமா/சரீரம் மற்றும் தேவனின் திரித்துவம் இவை  இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான். ஆனால்  நம் சகோதரர்கள் தேவன் திரித்துவரக இருப்பதால்தான் மனுஷனை "ஆவி/ஆத்துமா/ சரீரம்" என்னும் நிலையில் படைத்தார் என்று சொல்லி  திரித்துவத்தையும் "ஆவி/ஆத்துமா சரீரத்தையும் ஒப்பிட நினைப்பதால், அதில் உள்ள உண்மை என்னவென்பதை அறியவேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளது. 
 
எனவே இந்த திரியில் தேவன் திரித்துவ நிலையில் இருப்பதால்தான்  மனுஷனை ஆதாவது ஆவி/ஆத்துமா/சரீரம் என்னும் மூன்று நிலையில் படைத்தாரா?  என்பது குறித்து நாம் ஆராயலாம்.
  
ஆதி 1 : 26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;................................... என்றார்.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
 
1:26  And God said, Let us make man in our image, like us:

1:27  And God made man in his image, in the image of God he made him: male and female he made them.

(meaning - image)  1.make a representation of the external form of.
 
adjective (like - meaning) 1. (of a person or thing) having similar qualities or characteristics to another person or thing.
 
இந்த கருத்தை சுருக்கமாக சொன்னால் "தேவன் மனுஷனை வெளிப்புற தோற்றத்திலும், பண்புகளிலும் தேவனைபோலவே சிருஷ்டித்தார்" என்று அறிய முடிகிறது.
 
ஒரு மனுஷனின் "வெளிப்புற தோன்றம்" image" என்பது நம் கண்களால் காணக்கூடிய ஓன்று. எனவே தேவனும் மனுஷனை போலவே தோன்றம் உள்ளவராக இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.  
    
அடுத்து, qualities or characteristics எனப்படும் பண்புநலன் அல்லது குணநலன் என்பதை குறிக்கும்  "like" என்ற வார்த்தை மனுஷனின் குணநலன்கள்/ பண்புநலன்கள் மற்றும் அவனின் ஆவி ஆத்துமா சரீரம் என்ற நிலை இரண்டையுமே குறிக்கிறது. 
 
தேவன் மனுஷனை ஏறக்குறைய எல்லாவிதத்திலும் தன்னைப்போலவே சிருஷ்ட்டிதார் என்றே நாம் அறிய முடிகிறது.
 
மனுஷன் பாவத்தில் விழும் முன்னர் அவன் தேவனின் பண்பு மற்றும் குண நலன்களை உடையவனாக தேவனுக்கு ஏற்ற செம்மையானவனாகவே இருந்தான். . 
 
பிரசங்கி 7:29 இதோ தேவன் மனுஷனைச் செம்மையானவனாய் உண்டாக்கினார்; 
 
அடுத்து,  
 
கர்த்தராகிய தேவனும் "ஆவி /ஆத்துமா /சாயல்" என்று நிலைகள் இருப்பதாக வேதம் சொல்கிறது.
 
கர்த்தருக்கு ஆத்துமா உண்டென்று சொல்லும் வசனம்: 
எரேமியா 5:29 என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    
கர்த்தருக்கு ஆவி உண்டென்று சொல்லும் வசனம்: 
சகரியா 4:6 என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின்கர்த்தர் சொல்லுகிறார்.
 
கர்த்தருக்கு சாயல் உண்டென்று சொல்லும் வசனம் 
எண்ணாகமம் 12:8 அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்;    
 
இப்படி தேவன், ஆவி/ ஆத்துமா/சாயல் உடையவராக இருப்பதாலேயே மனுஷனையும் அதேபோல் சிருஷ்டித்தாரேயன்றி திரித்துவம் என்ற மூன்று தேவ கோட்பாடு இங்கு எங்கே வருகிறது?  
 
அடுத்து,  தேவ குமாரனாகிய இயேசு நம்மைப்போல மனுஷனாக வந்தததால் அவருக்கும் ஆவி/ஆத்துமா/சரீரம் உண்டாயிருந்தது    
 
இயேசுவுக்கு ஆத்துமா உண்டென்று சொல்லும் வசனம்: 
மாற்கு 14:34   என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.
 
இயேசுவுக்கு ஆவி உண்டென்று சொல்லும் வசனம்: 
லூக்கா 23:46  பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்
 
இயேசுவுக்கு சரீரம் இருந்தது: 
யோவான் 19:38  ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.
 
இப்படி தேவனுக்கும், தேவ குமாரனுக்கும் தனிப்பட்ட ஆவி ஆத்துமா சரீரம் அல்லது சாயல் இருக்கும் பட்சத்தில இதில் திரித்துவ கோட்பாட்டை நிலைநாட்ட என்ன முகாந்திரம் இருக்கிறது என்பது புரியவில்லை.
  
தாங்கள் சொந்தமாக கண்டுபிடித்த கருத்துக்களை நிலைநாட்ட சரியான வசன ஆதாரம் வேதத்தில் கிடைக்கவில்லை என்றால் எதோ ஒரு வசனத்தை சுட்டிகாட்டி "இதுதான் அது" என்று சொல்லிவிடவெண்டியதுதானா?   
 
முக்கிய குறிப்பு! 
(தேவன் திரித்துவராக  செயல்படுகிறார்/ செயல்பட்டார் என்பதை நான் மறுக்கவில்லை நிச்சயம் ஏற்கிறேன்! ஆனால் சர்வ வல்ல தேவனை "திரித்துவம்" என்ற முக்கோண கோட்டுக்குள் அடக்க நினைப்பதையே நான் எதிர்க்கிறேன். அவர் திரித்துவத்துக்கும் மேலானவர்!)   
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard