இந்த உலகத்தில் ஒரு புது ஜீவன் எவ்வாறு உருவாகிறது? இன்னொரு இரண்டு ஜீவன்களின் சேர்க்கை மூலம் புதிதாக ஒரு ஜீவன் உருவாகிறது.
மனுஷனின் உடலில் உள்ள பல்வேறு அவயங்களில் மிகவும் கடினமானதும் எழிதில் அழிக்க முடியாததும் மனுஷனின் "பல் எனாமல்" ஆகும்.
அந்த பல் எவ்வாறு உருவாகிறது? ஆண்/ பெண் சேர்க்கையின் மூலம் வெறும் திரவ பொருளால் உண்டாகிறது.
அதேபோல் இந்த "ஆத்துமா"வும் உருவாகிறது
மனுஷன் தேவனால் எவ்வாறு உருவாக்கபடுகிறான் என்பதை பார்த்தால்:
பூமியின் தூசு (மண்) + தேவனின் சுவாசம் = ஜீவிக்கும் ஆத்துமா!
ஆதியாகமம் 2:7தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
மரிக்கும்போது
பூமியின் தூசு - பூமிக்கு திரும்புகிறது
தேவனின் சுவாசம் - தேவனிடம் திரும்புகிறது
பிரசங்கி 12:7இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
ஆகினும் அந்த மனுஷன் இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் செய்த காரியங்களை தன்னுள் அடக்க ஒரு உருவம் தேவனால் கொடுக்கபடுகிறது அவன் செய்த நன்மை தீமைகளின் தொகுப்பு அழிக்க முடியாத ஒரு தொகுப்பாக உருவாகி நியாய தீர்ப்புக்காக காத்திருக்கிறது. அந்த தொகுப்புக்கு மாம்ச தேகம் இல்லாத ஒரு உருவமும் உண்டு அதுவே ஆத்துமா சரீரம் ஆகும்.
அப்படி ஒரு சரீரம் உண்டா? என்று ஆராய்ந்தால்:
கீழே பவுல் சொல்வதை பாருங்கள்:
II கொரிந்தியர் 12:2கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம்வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
இந்த வசனம் மனுஷன் சரீரத்துக்கு புறம்பேயும் இருக்க முடியும் என்று சொல்கிறது. ஆனால் அந்நிலையிலும் கூட பார்க்கவும் கேட்கவும் முடியும் என்பதை இதற்க்கு முந்தின வசனம் சொல்கிறது.
எனவே ஆத்துமா என்ற அந்த அழியாத தொகுப்புக்கு கேட்கும்/உணரும்/ பேசும் தன்மைகள் உடைய ஒரு சரீரம் உண்டு. அதுவே ஆத்துமா சரீரம் எனப்படுகிறது.
நாம் நல்ல அயர்ந்த நித்திரையில் இருக்கும்போது ஏதேதோ கனவு காண்கிறோம் அங்கு நமது மாம்ச கண்கள் எதையும் பாப்பது இல்லை. அதை பார்ப்பது நமது ஆத்துமா கண்கள். மேலும் நமது உடலுக்கு எந்த நோயும் வேதனையும் இல்லாத போதுகூட சில காரியங்களினிமித்தம் நம் இருதயம் அதிக வேதனை படுகிறது. அது ஆத்துமாவின் வேதனை.
இப்படி மாம்சமான மனுஷனுக்கும் உயிர் என்ற ஆவிக்கும் இடையே யாரும் அழிக்க முடியாத (தேவனால் மட்டுமே அழிக்க முடிந்த ஒரு ஆத்தும சரீரம் இருக்கிறது)
மத்தேயு 10:28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
அந்த ஆத்துமா சரீரமே பாதாளத்துக்குள் செல்கிறது அங்கு அதன் கிரியைக்கு தகுந்த வேதனைபடுகிறது.
லூக்கா 16:23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
மீட்கபட்ட ஆத்துமா பரதீசு அல்லது ஆப்ரஹமின் மடி என்னும் இளைப்பாறும் இடத்துக்கு பொய் இளைப்பாறுகிறது.
லூக்கா 16:22பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்;
இவ்வசனங்கள் படி ஒருவன் மரித்தபின்னர் இளைப்பாறவும்/வேதனைப்படவும் முடியும் என்ற நிலை இருப்பதால் அவனுக்கு
மாம்சம் அல்லாத ஆனால் அனைத்தையும் உணரக்கூடிய ஒரு சரீரம் இருக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது.
இந்த பூமியில் ஒவ்வொரு ஜீவனுக்கும் அதற்க்கு ஏற்ற மேனிகள் உருவாக்கபட்டுள்ளது போல, மரித்த ஆத்துமாக்களுக்கும் அது தங்கும் இடத்துக்கு ஏற்ற மேனிகள் உருவாக்கபடும் என்றும் நான் கருதுகிறேன்.
எனவே சகோதரரே நாம் வெளிப்புறமாக காணும் இந்த மாம்சம் நமது உண்மையான தோன்றம் அல்ல. உள்ளான மனுஷன் ஒருவன் நமக்குள் இருக்கிறான் என்பதை அறிய வேண்டும்.
நீங்கள் தேவனிடம் வாஞ்சையோடு விடாபிடியாக ஜெபித்து கேட்டால், உங்கள் உள்ளான ஆத்தும மனுஷனை நீங்களே கூட பார்க்க முடியும்! அதற்க்கு பலரின் அனுபவங்கள் சாட்சியாக இருக்கிறது.
தங்கள் அடுத்த கேள்விக்கான பதிலை விரைவில் தர வாஞ்சிக்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)