இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "சுயநலவாதி"யாகிபோன 38 வருஷ நோயாளி!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
"சுயநலவாதி"யாகிபோன 38 வருஷ நோயாளி!
Permalink  
 


பரிசுத்த வேதாகமத்தில் யோவான் 5ம் அதிகாரத்தில் பெதஸ்தா குளம் பற்றியும் அங்கு சுகமான ஒரு 38 நோயாளி பற்றியும் ஒரு சம்பவம் எழுதப்பட்டுள்ளது! 

2. எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.
3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
4. ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
5. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
6. படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
7. அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்


மேலேயுள்ள இந்த சம்பவத்தில் அந்த நீண்டநாள் வியாதியஸ்தனை இயேசு அணுகி "சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா" என்று கேட்டார். அவ்வாறு இயேசு கேட்கும்போது அவன் இயேசுவை பற்றியும் அவரது வல்லமை பற்றியும் சரியாக அறியாததால் உலகப்பிரகாரமாக "என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை" என்று சொல்கிரான்.
 
இயேசு அவனிடம் "எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்றார்". உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக் கொண்டு, நடந்துபோனான்"
 
இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவெனில், 

இயேசுவின் வல்லமை மற்றும் மகிமையை அறிந்த நல்ல மனமுடைய ஒருவன் இங்கு என்ன செய்வான்? அவன் குணமானது போலவே அங்கு படுத்து கிடக்கும் ஒவ்வொருவரையும் காட்டி "ஆண்டவரே  இவனை குணமாக்கும்" இவனை குணமாக்கும்" "இங்கு வேதனைப்பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் குணமாகும்" என்று கெஞ்சி கேட்டிருக்க வேண்டாமா?

தனக்கு சுகம் கிடைத்துவிட்டது என்றவுடன் உடனே நடந்து போனவன் போயே  போய் விட்டான். என்ன குறுகிய மனது பாருங்கள்!
 
இன்றும் அனேக விசுவாசிகள் தனக்கு இரட்சிப்பு கிடைத்துவிட்டது நான் பரலோகம் போய்விடுவேன் அடுத்தவன் எப்படி போனால் எனக்கென்ன என்று வாழ்வதை பார்க்கமுடியும்.
 
அடுத்தவன் எப்படி போனால் எனக்கென்ன என்று போனால்கூட போதும்! ,ஆனால் அவன் எப்படியாது தண்டிக்கப்படவேண்டும் என்ற வக்கிர எண்ணம் இருதயத்தில்  உடையவர்களாக இருப்பது அதிக வேதனைக்குரியது. 
  
இங்கு  நம் ஆண்டவர் சொன்ன ஒரு உவமைகளை சற்று சிந்தித்து பார்ப்பது நல்லது!
 
தான் வாங்கிய  கடனை தீர்க்க நிவாகம் இல்லாத ஒருவனிடம்   (மத் 18:25)  அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.

26. அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.

27. அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
 
அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான் (மத் 18:28
 
33. நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி  34: அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
 
அதுபோலவே, எந்த ஒரு அடிப்படை தகுதியும் இல்லாமல் பாவ சாபங்களை எவ்விதத்திலும் போக்க வழியில்லாமல் தவித்த நாம்  தேவனின் பெரிதான இரக்கங்களால் ரட்சிப்பை பெற்றுள்ளோம். அப்படி தேவனின் இரக்கத்தை பெற்ற நாம் இரட்சிப்பை பெறாத அடுத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று ரகசியமாக எண்ணாமலும், அந்த 38 வருட நோயாளி இயேசுவிடம்  சுகத்தை பென்று போனதுபோல் எவனும் எக்கேடும் கெட்டு போகட்டும் என்று   போய்விடாமல், ரட்சிப்பை பெறாதவர்கள் எவ்விதத்திலாவது ரட்சிக்கபட்டு தண்டனையில் இருந்து தப்பிக்கவேண்டும் என்று ஆண்டவரிடம் கெஞ்சி கேட்போமாக.
 
பலர் தேவனிடம் அவ்வாறு பிறருக்காக ஜெபித்தாலும் தஙகள்  இருதயத்தில் பிறரை மனதார மன்னிக்காமல் முழு கரிசனையோடு ஜெபிக்காமல் ஒப்புக்கு அவ்வாறு வேண்டுகின்றனர். அதனால் பயன் எதுவும் இல்லை! 
 
35. நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
 
எப்படி செய்யவார்?
 
34. அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
 
அவன் பாவங்கள் தேவனால் மன்னிக்கபட்டிருந்தாலும் அவன் அடுத்தவன் பாவத்தை மனதார மன்னிக்காத காரணத்தால் அவனுடைய பழைய பாவங்கள் மீண்டும் நினைக்கபட்டு தண்டனை வழங்கப்படும்!

 

 



-- Edited by SUNDAR on Wednesday 12th of February 2014 05:26:18 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard