எனது அலுவலகத்தின் கீழே நடைபாதை ஓரம் ஒரு மிக வயதான நாய் ஓன்று சில நாட்களாக படுத்து கிடக்கிறது. அதற்க்கு எழுந்து நடக்க கூட முடியவில்ல. கண் பார்வை சரியாக இல்லை. பக்கத்தில் பிஸ்கட் வாங்கி போட்டால் கூட அதை எடுத்து சாப்பிட திராணி இல்லாமல் சோகமாக படுத்து கிடக்கிறது.
ஒவ்வொரு நாளும் இந்த நாயை பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இதற்க்கு ஏதாவது உதவி செய்யலாம் என்றால் என்ன செய்ய? அதை கொன்று போடுவதுதான் அதற்க்கு செய்யும் மிகப்பெரிய உதவி போல் தெரிகிறது.
பாவம் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அது படும் அவஸ்த்தைகளை பார்க்கும்போது என்னால் வேதனையை சகிக்க முடியவில்லை.
பாவம் எது புண்ணியம் எதுவென்று தெரியாத அந்த நாயை கூட பாவத்தினால் வந்த நோயும் சாவும் முதுமையும் விட்டுவைக்கவில்லை!
இதுமட்டுமா?
கடந்த நாளில் நான் சாலையில் வரும்போது இரண்டு மூன்று அழகான ஆட்டுக்குட்டி ஒருவர் பின்னால் ஓடிப்போனது. அது போகும் இடம் எதுவென்றால் பார்த்தால் ஒரு பெரிய கசாப்பு கடை! இன்னும் சிறிது நேரத்தில் அது தலை வேறு உடம்பு வேறாக தொங்க போகிறது என்பதை நினைத்து பார்த்தாலே உடம்பு நடுங்குகிறது.
இத்தோடு மட்டுமல்ல,
நான் கடந்து வரும் சென்னை பம்மல் ஏரியாவில் பன்றிகளை பிடித்து திறந்த வெளியில் வைத்து கொல்லும் பரிதாபமும் உண்டு. ஊரே அதிரும்படி அவைகள் கதறும்! ஆனால் ஏனென்று கேட்கத்தான் யாரும் அங்கே இல்லை!
இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!
இந்த வாயில்லா ஜீவன்கள் படும் வேதனைகளை எல்லாம் பார்க்கும் போது, இவைகளுக்கெல்லாம் எப்பொழுது விடுவுகாலம் என்று என் மனது தவிக்கிறது! ஆண்டவர் வரும் நாளை எதிர்பார்த்து என் மனம் ஏங்குகிறது!
கடந்த நாளில் நான் சாலையில் வரும்போது இரண்டு மூன்று அழகான ஆட்டுக்குட்டி ஒருவர் பின்னால் ஓடிப்போனது. அது போகும் இடம் எதுவென்றால் பார்த்தால் ஒரு பெரிய கசாப்பு கடை! இன்னும் சிறிது நேரத்தில் அது தலை வேறு உடம்பு வேறாக தொங்க போகிறது என்பதை நினைத்து பார்த்தாலே உடம்பு நடுங்குகிறது.
இதை பற்றி எல்லாம் யாருக்கும் இப்பொழுது கவலை இல்லை ஐயா.
ஒரு கிறித்தவ மீட்டிங் நடந்தாலே அங்கு சிக்கனா மட்டனா என்று எதிர்பார்த்து வரும் ஜனங்கள்தான் அதிகம். சாம்பாரை ஊற்றினால் யாரும் சாப்பிடுவது இல்லை ஐயா. சிக்கனில் போட்ட உருளை கிழங்கை கூட தூர தூக்கி போட்டுவிட்டு வெறும் சிக்கன் துண்டுகளை மட்டுமே தேடுகிறார்கள் ஐயா.
இந்த ஜனங்களுக்கு இதை எல்லாம் எழுதுவதால் என்ன பயன்.
இந்த ஜீவன்களை பற்றி நான் இங்கு எழுதுவதற்கு காரணம் வெறும் பாவபடுவதர்க்காக மட்டும் அல்ல.
எனக்கு யாரென்றே தெரியாத எவனோ ஒரு ஆதாம் செய்த பாவம் என்னையும் எல்லா மனுஷனையும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் இந்த உலகில் உள்ள மற்ற ஜீவன்களையும் விட்டுவைக்கவில்லை.
துன்பமும் வேதனையும்யும் அனுபவிக்கும் நம்மை பார்த்து தேவன்:
ஆனால் இந்த பாவமறிய வாயில்லா ஜீவன்களும் இவ்வளவு அவஸ்த்தைபடுகிறதே அதற்க்கு யார் காரணம் என்பதை சற்றேனும் ஆழ்ந்து யோசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவைகளை பற்றியும் இங்கு எழுதுகிறேன்.
கேட்பவன் சிந்திக்க கடவன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்று காலை அலுவலகம் வரும் வழியில் ஒரு குட்டி நாயை பார்க்க நேர்ந்தது.
எதோ ஒரு நோயால் மிக கடுமையாக பாதிக்கபட்டிருந்த எலும்பும் தோலுமாக இருந்த அந்த நாயின் கண் முதற்கொண்டு பாதிக்கபட்டு வலி தாங்க முடியாமல் ஊளை விட்டுக்கொண்டே அழுதுகொண்டு இருந்தது.
அதை பார்த்த எனக்கு மிகவும் வேதனையாகி போனது "வாய் பேசி தன் வலியை சொல்லகூட முடியாத இது போன்ற உயிர்களை இப்படியெல்லாம் வேதனைப்பட வைப்பது யார்"
இதற்க்கு யார் பொறுப்பு?
தேவன் நல்லதாகவே படைத்த இந்த உலகில் ஏன் இப்படிஎல்லாம் நடக்கிறது?
இதற்க்கு முடிவுதான் எப்போது?
போன்ற பல்வேறு கேள்விகள் மனதில் எழும்ப மிகவும் வேதனையோடு அந்த இடத்தை கடந்து வந்தேன். அந்த நாய் அவ்வாறு வேதனையை அனுபவிக்க மனுகுலம்தான் காரணம் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.
அந்த நாயிக்கு பாவம் எது புண்ணியம் எதுவென்று எல்லாம் நிச்சயம் தெரியாது. சிலர் சொல்லுவதுபோல் அதற்க்கு சோதனையும் கிடையாது ஆனாலும் அது வேதனையை அனுபவிக்கிறது. அதற்க்கு காரணம் மனுக்குலத்தின் பாவம்தான் என்பது தெளிவாகவே புரிந்தது.
அன்று ஆதாம் பாவம் செய்தபோது அவன் நிர்வாணத்தை மூட தோல் உடை கொடுக்கபட்டது. அதற்க்கு எதோ ஒரு உயிர் தன ஜீவனை கொடுத்திருக்க வேண்டும்.
இன்று, சர்வலோக பாவத்துக்கும் ஆண்டவராகிய இயேசு தன் ஜீவனை கொடுத்தும் இந்த வாயில்லா ஜீவன்கள் படும் அவஸ்த்தைகள் குறையவில்லையே என்பதே வருத்தமாக இருக்கிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)