I கொரிந்தியர் 2:15ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
ஒரு ஆவிக்குரிய கிரிஸ்த்தவனால் எல்லாவற்றையும் நிதானித்து விட முடியுமா?
ஆவிக்குரிய அப். பவுல் இந்த வார்த்தையை எழுதியிருக்கும் பட்சத்தில் இன்னொரு இடத்தில் சில காரியங்களை "அறியேன்" என்றும் எழுதுகிறார்.
பிலிப்பியர் 1:22ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
II கொரிந்தியர் 12:4அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்;
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் நிதானிக்க முடியும் என்று எழுதிய பவுலுக்கு சிலதை ஆராய்ந்து நிதானிக்க முடியாமல் போனது ஏன்?
மேலும் இன்னொரு ஆவிக்குரியவராகிய அப். பேதுருவுக்கு பவுலின் வார்த்தைகள் அறிவதக்கு அரிதாய் இருக்க காரணம் என்ன?
II பேதுரு 3:16அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது;
அதேபோல் இன்றைய நாட்களில்கூட ஒரு ஆவிக்குரியவன் சொல்வதை இன்னொரு ஆவிக்குரியவனால் நிதானிக்க முடியவில்லை. "நீ கள்ளன்" "நான் கள்ளன்" என்று ஒருவர்மேல் ஒருவர் சேரையும் சகதியையும் வாரி இறைத்துகொண்டு இருக்கிறார்களே ஏன்?
"ஆலன் பால்" என்ற ஆவிக்குரியவர் சொல்வதை இன்னொரு ஐம்பது ஆவிக்குரியவர்கள் எதிர்த்து தவறு என்று பேசுகிறார்கள். ஆவிக்குரிய சாது. சுந்தர் அவர்கள் கூட்டணிக்கு மட்டும் ஒருவர் சொல்வதை ஒருவர் நிதானிக்க முடிகிறது. ஆனால் வெளியில் உள்ள ஆயிரம் ஆவிக்குரியோருக்கு அவர்கள் சொல்வது எல்லாமே தவறாக தெரிகிறதே ஏன்?
ஆவிக்குரிய ஜாமக்காரன் அவர்களுக்கு பல ஆவிக்குரிய பாஸ்டர்கள் செய்வது தவறாக தெரிகிறது
சாம்சன் பால் என்ற ஆவிக்குரிய ஊழியருக்கு பால் தினகரன் என்ற ஆவிக்குரியவரின் செயல்பாடுகள் தவறாக தெரிகிறது ஏன்?
அதுபோல் நான் நிதாநித்தறிந்து சொல்லும் கருத்துக்கள் சில ஆவிக்குரியோருக்கு சரியாகவும் சில ஆவிக்குரியவருக்கு தவறாகவும் தோன்ற காரணம் என்ன?
அவரவர் தங்கள் தங்கள் பேச்சுக்கு சில வசன ஆதாரங்களை வைத்துள்ளார்கள்.
அடுத்தவர்களின் குறைகள் தெளிவாக தெரியும் இவர்களுக்கு தங்களுடைய குறைகள் தெரிவதில்லையே ஏன்?
இங்கு யார் உண்மையான ஆவிக்குரியவர்? யார் உண்மையாக நிதானிக்கிறார்கள்?
கிறிஸ்தவத்தில் ஏன் இத்தனை குழப்பமான ஆவிகள்?
தேவனுக்கே வெளிச்சம்! அவருக்கே மகிமை உண்டாகட்டும்!
எசேக்கியேல் 13:3கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிறமதிகெட்டதீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
-- Edited by SUNDAR on Friday 28th of February 2014 04:23:14 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//எசேக்கியேல் 13:3கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிறமதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!//
ஆமென்!! இதையே தான் நானும் இவ்வளவு நேரம் சுட்டுகிறேன்!!
தீர்கதரிசனம் உரைக்கபடாத சபை சபையை இருக்க முடியாது !! தீர்க்க தரிசனம் இல்லாத இடத்தில ஜனங்கள் வேதம் சொல்லுகிறது..
//"ஆலன் பால்" என்ற ஆவிக்குரியவர் சொல்வதை இன்னொரு ஐம்பது ஆவிக்குரியவர்கள் எதிர்த்து தவறு என்று பேசுகிறார்கள். ஆவிக்குரிய சாது. சுந்தர் அவர்கள் கூட்டணிக்கு மட்டும் ஒருவர் சொல்வதை ஒருவர் நிதானிக்க முடிகிறது. ஆனால் வெளியில் உள்ள ஆயிரம் ஆவிக்குரியோருக்கு அவர்கள் சொல்வது எல்லாமே தவறாக தெரிகிறதே ஏன்?
ஆவிக்குரிய ஜாமக்காரன் அவர்களுக்கு பல ஆவிக்குரிய பாஸ்டர்கள் செய்வது தவறாக தெரிகிறது
சாம்சன் பால் என்ற ஆவிக்குரிய ஊழியருக்கு பால் தினகரன் என்ற ஆவிக்குரியவரின் செயல்பாடுகள் தவறாக தெரிகிறது ஏன்?
அதுபோல் நான் நிதாநித்தறிந்து சொல்லும் கருத்துக்கள் சில ஆவிக்குரியோருக்கு சரியாகவும் சில ஆவிக்குரியவருக்கு தவறாகவும் தோன்ற காரணம் என்ன?
அவரவர் தங்கள் தங்கள் பேச்சுக்கு சில வசன ஆதாரங்களை வைத்துள்ளார்கள்.
அடுத்தவர்களின் குறைகள் தெளிவாக தெரியும் இவர்களுக்கு தங்களுடைய குறைகள் தெரிவதில்லையே ஏன்?
இங்கு யார் உண்மையான ஆவிக்குரியவர்? யார் உண்மையாக நிதானிக்கிறார்கள்?
கிறிஸ்தவத்தில் ஏன் இத்தனை குழப்பமான ஆவிகள்? //
தம் சகோதரகளை (அப்போஸ்தலர்களை )விட அதிகமாய் அபிஷேகம் பெற்றிருந்த இயேசுவை பின்பற்றுங்கள். அவரே குரு !! பேதுருவிலும் சாத்தான் இருந்ததை அறிந்தவர் அவர்!! தீர்கதரிசனம் உள்ள இடத்திலே தான் குழப்பங்கள் முடியும் . காரியங்கள் திருஸ்டாந்தமாகும்.
தம் சகோதரகளை (அப்போஸ்தலர்களை )விட அதிகமாய் அபிஷேகம் பெற்றிருந்த இயேசுவை பின்பற்றுங்கள். அவரே குரு ====================================================================================================================================
நீங்கள் சொல்லும் இயேசுவை பின்பற்றுதால் என்றால் எப்படி ஐயா
சகோ. சுந்தரும் இயேசுவை பின்பற்றி அவர் வார்த்தைபடி வாழுங்கள் என்றுதானே பல பதிவில் சொல்லியிருக்கிறார்.
-- Edited by JOHNJOSH on Friday 28th of February 2014 09:39:21 PM