என்னுடைய அஸ்திபாரம் எதன்மேல் போடபட்டுள்ளது என்பதை நான் முதலில் இங்கு தெரிவித்து கொள்கிறேன்:
கிறிஸ்த்துவை மூலைக்கல்லாக கொண்டு அவர் வார்த்தைகள்மேல் அஸ்திபாரம் போடுள்ளேன்.
எதன்மேல் அஸ்திபாரம் போடப்பட்ட வீடு வீழ்ந்துபோகாது என்று இயேசு சொல்கிறார்?
மத்தேயு 7:24ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
வார்த்தைகள கேட்டு செய்கிறவனே கன்மலைமேல் அஸ்திபாரம் போட்டவன்!
ஆம்! இயேசுவின் வார்த்தைகள் மீது போடபட்ட வீடுதான் எந்த சோதனையிலும் வீழ்த்து போகாது என்று சொல்கிறார்.
மத்தேயு 7:25பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அதுகன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
ஆனால் இன்று அனேக கிறிஸ்த்தவர்கள் "நான் கிறிஸ்த்துவின்மேல் அஸ்த்திபாரம் போட்டுள்ளேன்" என்று சொல்லி அவர் சொல்லிய வார்த்தைகளை அசட்டை பண்ணுவதை காண முடிகிறது!
அதற்காக அவர்கள் கொடுக்கும் வசன ஆதாரம் இதோ:
I கொரிந்தியர் 3:11போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
ஆண்டவராகியே இயேசுவே அவர் வார்த்தைமீது அஸ்த்திபாரம் போட சொல்லியிருக்கும் பட்சத்தில், பவுலை கொண்டு பேசிய ஆவியானவர் ஏன் இவ்வாறு சொன்னார் என்பதை நாம் அவசியம்.
ஒரு மனுஷன் இயேசுவின் படம் ஒன்றை கையில் வைத்துகொண்டு நான் இந்த இயேசுவின் மேல்தான் அஸ்திபாரம் போட்டுள்ளேன் என்று சொல்லிக்கொண்டு மனம் திரும்பாமல் திருமுழுக்கு பெறாமல் இருந்தால் பவுலோ அல்லது கிரிஸ்த்தவர்களோ அவன் சொல்வது சரிதான் என்று ஒத்துகொள்வார்களா?
மாட்டார்கள் அல்லவா? அவனை பார்த்து நீ இப்படி சொல்றது தவறு உண்மையில் இயேசுவின்மேல் அஸ்த்திபாரம் போட்டால் மனம்திரும்பி ஞானஸ்தானம் பெறவேண்டும் என்று சொல்வார்கள் இதை ஏன் சொல்கிறார்கள் என்றால் இயேசு அவ்வாறு கட்டளையிட்டுள்ளார்
ஆகவே நாம் மீண்டும் இயேசுவின் வார்த்தைக்கே வருகிறோம். அவர் கட்டளையிட்ட வார்த்தையை செய்வதுதான் அவர்மேல் அஸ்திபாரம் போடுவது என்பதை அறிகிறோம்.
எனவே இயேசுவோ பவுலோ கருத்தை மாற்றி சொல்லவில்லை என்பதை இதன் மூலம் புரிகிறோம்.
பின்னர் இங்கு இயேசுவின் மேல் அஸ்திபாரமா? அவர் வார்த்தைமேல் அஸ்த்திபாரமா? என்று ஒன்றான இரண்டையும் தனித்தனியே பிரித்து குழப்பத்தை உண்டாக்க நினைப்பது யார் தெரியுமா?
இயேசு சொல்லிய வார்த்திகளில், இரட்சிப்பு/ ஞானஸ்தானம்/சபைக்கு போகுதல்/ வேதம் வாசித்தல்/ காணிக்கை தசம பாகம் கொடுத்தல் போன்ற சுலபமான கட்டளைகளை கைகொண்டுவிட்டு மலை பிரசங்கத்தில் இயேசு சொல்லிய கொஞ்சம் கடினமான கட்டளைகளாகிய:
"உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள்" "ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பி கொடுங்கள்" "கேட்பவருக்கு கடன் கொடுங்கள்" " சத்துருவை சிநேகியுங்கள்"
போன்ற கட்டளைகளை கைகொள்ள விரும்பாத கலக வீட்டாரே தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும், இயேசுவுக்கும் அவர் வார்த்தைக்கும், பவுல் சொல்லிய ஆவியானவர் வார்த்தைக்கும் இடையில் பிரிவினையை எற்ப்படுத்தி உண்மையை அறிந்து கொள்ள முடியாமல் கலக்கிவிடுகிரார்கள் என்பதை அறியவேண்டும்.
நாளை பெரு மழை காற்று வெள்ளம் வந்து அவர்கள் வீட்டை அடித்துக்கொண்டு போகும்போது ஆண்டவரே உம்மேல்தானே நான் அஸ்திபாரம் போட்டேன் என்று கதருவார்கள். அப்பொழுது ஆண்டவர் சொல்லுவார் மகனே! "என் வார்த்தையின் மீது அஸ்திபாரம் போடு" என்று சொல்லி நான் தெளிவாக சொல்லவில்லையா?
மத்தேயு 7:21பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
என்று பதில் சொல்லி போய்விடுவார்.
தேவனின் வார்த்தைதான் மாம்சத்தில் வந்த குமாரனாகிய கிறிஸ்த்து!
1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
இன்று அந்த வார்த்தையின் வல்லமை முழுவதும் "வானமும் பூமியும் ஒளிந்துபோனாலும் ஒழிந்து போகாத" அவர் சொன்ன வார்த்தையில் நிறைந்துள்ளது. அதை விட்டுவிட்டு இன்னும் மாம்சத்தில் வந்த கிறிஸ்த்துவை எண்ணிக்கொண்டு அவர்மேல் அஸ்திபாரம் போட்டால் அதை அவரே விரும்ப மாட்டார்!
II கொரிந்தியர் 5:16நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
எனவே உங்கள் அஸ்த்திபாரம் எதன்மேல் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துகொள்வது நல்லது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)