ஆவியானவர் துணையின்றி ஒருவர் செய்யும் நற்கிரியைகள்கூட தேவனுடைய சமூகத்தில் நினைவு கூறப்படும் என்பதை கொர்நெலியு பற்றி வேதம் கூறும் சம்பவத்தின் மூலம் நாம் அறிய முடியும்.
கெர்நெலியுவின் ஜெபம் தேவ சந்நிதியில் பொய் எட்டியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அப்போஸ்தலர் 10:31கொர்நேலியுவே உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.
என்றாலும். தேவன் அங்கு இடைபட்டு அவருக்கு சொல்லும் ஆலோசனை என்னவென்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்
48. கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
44. இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
ஞானஸ்தானம் பெறவும் ஆவியானவரை பெற்றுக்கொண்டு அதில் முழுமை அடையும்படி தேவன் அவரை வழிநடத்துவதை நாம் பார்க்க முடிகிறது. அதுவே தேவ நியமனம்.
கொர்நெலியுவுக்கு இடைபட்டது போல் ஒவ்வொரு சன்மார்க்கனுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் தேவன் இடைபடுகிறார் ஆவியானவர் இடைப்படும் போது
கொர்நெலியு எப்படி கீழ்படிந்து செயல்பட்டானோ அதுபோல் கீழ்படிந்து நடப்பவர்கள் சரியான வழியை கண்டடைவார்கள். இடும்பு பிடிப்பவர்கள் இழிநிலையையே அடைவர்கள்.
எனவே ஆவியானவர் இல்லாமல் ஒருவர் நற்க்கிரியை செய்ய முடியும் ஆகினும் அது எப்படிபட்ட நற்க்கிரியைகளாக இருந்தாலும் அது ஒருநாளும் முழுமை அடையாது.
மனுஷ நீதி வேறு தேவ நீதி வேறு!
ஏசாயா 64:6நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது,
எனவே ரட்சிப்பை பெற்று பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டு செய்யும் நற்கிரியைகள் மாத்திரமே முழுமையானதும் தேவனுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இதற்க்கு உதாரணமாகத்தான் நான்
அதாவது ஒரு இடத்தில் ஓட்ட பந்தயம் நடக்கிறது பந்தய சாலைக்கு உள்ளே வராமல் ஒருவன் வெளியே என்னதான் வேகமாக ஓடினாலும் அதனால் அவனுக்கு என்ன பயன்?
அவன் பந்தைய சாலைக்குள் வந்து அங்கு ஒடுபவர்களோடே ஓடி போட்டியில் ஜெயித்தால் மட்டுமே கிரீடம் கிடைக்கும்.
மற்றபடி எல்லோரும் உள்ளே ஓடுகிறார்கள் நான் வெளியே ஓடுகிறேன் என்று சொல்லி ஓடுவதுபோல். எல்லோரும் நற்க்கிரியை செய்கிறார்கள் நானும் செய்வேன் என்று இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல் ரட்சிப்புக்கு வெளியே நின்று செய்யும் நற்க்கிரியைகளால் தேவனுக்கு எந்த பயனும் இல்லை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)