ஆரம்ப நிலையில் ஆண்டவர்மேல் உள்ள அன்பினால் ஊழியத்திற்கு வந்து உழியம் செய்த அவர்கள் பணம் பொருள் என்பவைகள் மீது ஈர்க்கப்பட்டு பணம் பொருட்களுக்காக ஊழியம் செய்ய ஆரம்பித்துவிட்டாரகள்
பணம் என்பது எல்லா மனிதனுக்கும் தேவையான ஒன்று இந்த பூமியில் பணமிருந்தால் மட்டும் தான் வாழ முடியும் என்ற சூழ்நிலை உண்டாகி விட்டதால் எல்லோரும் இப்பொழுது பண பிரியராகவும் பணக்காரன் ஆக பிரியராகவும்ஆசை படுகின்றனர்
ஏசாயா 55:2நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?
தேவனுடைய வார்த்தைகளை மனிதர்களுக்கு உபதேசிக்கும் போதர்களே
பிரசங்கி 5:10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.
என்பதைபோதகர்கள் அறிந்து தேவனுக்கு உண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்வீர்களாக, பணம் இல்லை பொருள் என்று கவலை கொள்ளாமால் தேவனாகிய கர்த்தரையே சார்ந்து அவருடைய கட்டளைக்கும் கற்பனைகளுக்கும் கீழ்படியுங்கள் அப்பொழுது
II இராஜாக்கள் 3:17 - நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எல்லா போதகர்களும் ஊழியர்களும் நல்லவர்களே ஆனாலும் சூழ்நிலைகள் தேவைகள் நிமித்தமும் இப்படியாகிவிடுமோ என்ற பயத்தின் நிமித்தமும் இப்படி மாறிவிடுகின்றார்கள்
எசேக்கியேல் 34:8கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.
எசேக்கியேல் 34:10கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)