எரேமியா 17:7கர்த்தர்மேல்நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
வசனம் மிக அருமையாக சொல்கிறது நாமும் அதை விசுவாசிக்கிறோம் விரும்புகிறோம், ஆமென் சொல்கிறோம் லைக் போடுகிறோம்.
ஆகினும் நம் வாழ்வின் அன்றாட காரியங்களில் நாம் கர்த்தரையே நம்பிக்கையாக கொண்டிருக்கிறோமா?
எந்த முகாந்திரமும் இல்லாமல் நம்மை எதிரிகள் தூன்றும்போது கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து அவர்களை ஆசீர்வதிக்கிரோமா? அல்லது
அவனுக்கு எப்படி குழி தோண்டலாம் என்று குறுக்கு வழியில் யோசிக்கிறோமா?
நிரந்தரமில்லாத வேலையில் இருப்பவர்கள் கர்த்தர் மேல் நமிக்கை வைத்து பயமற்று நாளையை பற்றி கவலைப்படாமல் இருக்கிறோமா?
அல்லது
இந்த வேலைபோனால் நான் என்ன செய்வேன் என் குடும்பத்தை எப்படி காற்றுவேன் என்று அடிக்கடி யோசித்து குழம்புகிரோமா?
மகனோ மகளோ திருமண வயதை தாண்டி மணமாகாமல் இருக்கும்போது கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்துகவலையை ஒழித்து காத்திருக்கிரோமா?
அல்லது
எதோ 100 டன் கல்லை தலையில் வைத்திருப்பதுபோல தாங்க முடியாமல் தவிக்கிரோமா?
கடுமையான நோயினால் பாதிக்கப்படும்போதுகூட பரிகாரிகளை தேடாமல் கர்த்தரையே நம்பிக்கையை கொண்டு பயமற்றிருக்கிரோமா?
அல்லது
உலகில் உள்ள பெரிய பெரிய நோய்களை எல்லாம் யோசித்து அதாயிருக்குமோ இதாயிருக்குமோ என்று எண்ணி திகிலடைகிரோமா?
நமக்கு வரவேண்டிய பணம் நீண்டநாளாக வராமலிக்கும்போது எரிச்சல் வேதனையடையாமல் பொருமையாயிருக்கிரோமா? அல்லது
கொடுக்க வேண்டியவனை திட்டி தீர்த்து முடிந்தவரை பழி தீர்க்கிரோமா?
நமது மேலதிகாரிகள் மாமியார்கள் ஏதாவது காரணத்திநிமித்தம் நம்மை திட்டும்போது கர்த்தரின் மேல் நம்பிக்கை வைத்து பொறுமை காக்கிறோமா?
அல்லது
போற இடமெல்லாம் அவரை குறித்து குறைசொல்லி புலம்பி தள்ளுகிரோமா?
சும்மா ஒப்புக்கு அல்ல, நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் மொத்தத்தில் கர்த்தரின் பாதுகாப்பை மீறி நமக்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று திட மனதோடு வாழ்கோரோமா? அல்லது என்ன நடக்குமோ? எது நடக்குமோ? என்று எதிகாலத்தை குறித்து நிலையற்று தவிக்கிரோமா?
உங்கள் நிலைப்பாடு என்ன? சற்று யோசியுங்கள்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)