கடந்த 1992ம் வருடம் நவம்பர் டிசம்பர் மாதங்களில் சுமார் 6 நாட்கள் ஆண்டவர் என்னோடு இடைபட்டு நேரடியாக பேசுவதுபோல் பேசி அனேக காரியங்களை வெளிப்படுத்தினார்.
முக்கியமானக "வேத வார்த்தைகளை உன் வாழ்வில் கைக்கொண்டு வாழ வேண்டும்" என்று தேவன் வலியுறுத்தினார். அவ்வார்தைகளின் அடிப்படையில் ஆவியானவர் துணையுடன் என்னால் முடிந்த அளவு அவர் வார்த்தைகளை கைகொண்டு கர்த்தருக்கு முன்னால் நின்று வாழ கடந்த 21 வருடமாக பிரயாசம் எடுத்து வருகிறேன்.
இந்த 21 வருட நாட்களில் ஆண்டவர் ஜெப/தியான வேளைகளில் வேத வசனங்களுக்கான சரியான வியாக்கீன உண்மைகளை உணர்த்துதல் மூலம் வெளிப்படுத்தினாலும் நான் முன்பு கேட்டதுபோல் அவருடைய நேரடியான நடத்துதலை கேட்டு சுமார் 21 வருடங்க்ள ஆகிறது.
தற்ச்சமயம் நான் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிவதில் எந்த அளவுக்கு முழுமை அடைந்திருக்கிறேன் என்பது பற்றியும், என்னை பற்றிய தேவனின் விமர்சனம் என்ன என்பதையும் அறிய வேண்டும் என்ற ஆவல் எனக்குள் அதிகமாக எழுந்துள்ளது.
பிறரைபற்றி குறைகள் கூறவும் பிறரை பற்றிய விமர்சனங்களை எழுதுவதும் எனக்கு எள்ளளவேனும் பிரியமில்லை அதற்க்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை. நான் தேவனுக்கு முன்னால் சரியான நிலையில் நிற்கிறேனா என்பதை மாத்திரம் நான் உறுதிபடுத்த விரும்புகிறேன்.
எனவே கடந்த சிலநாட்களாக தேவனின் வார்த்தைகளை கேட்பதற்காக மன்றாடி ஜெபித்து வருகிறேன்.
என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு உத்தரவு கொடுப்பேன்
ரேமியா 33:3என்னைநோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
என்று ஆண்டவர் வாக்கு அருளியிருக்கிரபடியால் அவர் நிச்சயம் பதில் தருவார் என்று விசுவாசிக்கிறேன்.
பாவத்தில் மூழ்கி கிடந்த என்னை தூக்கி எடுத்த கர்த்தர் "இப்படி நட" என்று சொல்லி என்னை நடக்க சொன்னார். நானும் முயற்சி செய்து விழுந்து எழுந்து நடக்கிறேன் இன்று நான் அவர் எதிர்பார்த்ததுபோல் சரியான வழியில் நடக்கிறேனா அல்லது வேறு வழியில் செல்கிறேனா என்பதை அறிந்துகொள்ள வாஞ்சை ஏற்ப்பட்டுள்ளது.
எனவே அவரிடம் இருந்து சரியான பதில் பெரும் வரை என் வேண்டுதலை தொடரபோகிறேன்.
கர்த்தர் தாமே எனக்கு உண்மைகளை புரியவைக்கும்படி எனக்காக ஜெபித்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)