ஏற்கெனவே இந்த உலகில் நடக்கும் பல்வேறு கொடுமைகளை பார்த்து பார்த்து இதற்க்கு முடிவே இல்லையா? என்று வேதனையின் உச்சத்தில் இருக்கும் நான், கடந்த நாளில் முக நூலில் வெளியான ஈழ மக்களை சிங்கள ராணுவத்தினர் வேட்டையாடும் படத்தை பார்த்து மிகவும் நொருங்கிபோனேன்.
அவர்கள் இருந்த இடத்தில் நானும் என் குடும்பமும் இருந்தால் எப்படி துடித்திருப்பேனோ என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. கண்களில் பெருமூச்சோடு நீர் பொங்குகிறது என்னால் அடக்க முடியவில்லையே!
ஒரு சாதாரண மனுஷனாகிய என்னாலேயே இதை தாங்கிகொள்ள முடியாதபோது எனக்கு இந்த இரக்கத்தில் கொடுத்த கருணையின் ஊற்றாகிய தேவன் அதை எவ்வாறு சகித்து கொண்டாரோ என்று எண்ணி எண்ணி கலங்குகிறேன்.
சொந்த மனுகுலத்தை அதே மனுக்குலம் வேட்டையாடும் மிருகத்துக்கு ஒப்பான செயலை செய்யும் அவர்களுக்கு எல்லாம் இருதயமே இல்லையா? அல்லது இரக்கமே இல்லாத சாத்தான் அவர்கள் இருதயத்தை நிரப்பிவிட்டானா?
இவ்வாறு குழந்தை என்று ஸ்திரிகள் என்றும் பார்க்காமல் கோர தாண்டவமாடிய இந்த சிங்களவர்கள் நாளை அதன் பலனை அனுபவிக்காமல் தப்பிக்கவே முடியாதே! அவர்கள் பிள்ளை குட்டிகள் நாளை துன்பபட்டாலும் அப்பொழுதும் நம் மனது கலங்கதானே செய்யும்
பழைய ஏற்பாடு காலத்தில் பெருகிய மனுஷனின் அக்கிரமத்தை பொறுக்க முடியாத தேவன் அவர்களை கூண்டோடு தண்ணீரினால் அழித்தார் அதன் பின்னரும் அக்கிரமம் குறைந்தபாடில்லை. தேவனை விட்டு அதிகம் விலகிப்போன ஏத்தியர் எமோரியர் போன்ற பல ஜாதிகளை இஸ்ரவேலரை கொண்டு அழித்து நிர்மூலமாக்கினார் ஆனால் இறுதியிலோ இஸ்ரவலரின் அக்கிரமே பெருத்துபோனது
ஓசியா 5:3எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே. ஓசியா 6:4எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும்மேகத்தைப்போலவும், விடியற்காலையில்தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
இப்பொழுது எப்பிராயீமை எப்படி தண்டிப்பேன் என்ற பரிதவிக்கும் தேவ சத்தம் பிறந்தது:
ஓசியா 11:8எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
தேவன் சொல்லும் இந்த வசனத்தை பார்த்தால் என் இருதயமே கலங்குகிறது. பாவம் செய்தவர்களை தண்டிக்கும் முன் தேவனின் பரிதாபங்கள் பொங்குவதை நாம் பார்க்கலாம்.
இதற்க்கெல்லாம் ஒரு முடிவை கொண்டுவரவே தன் சொந்த குமாரன் என்றும் பார்க்காமல் இயேசுவை பூமிக்கு அனுப்பினார் அவரும் தேவ சித்தத்துக்கு உட்பட்டுகோர சிலுவையில் தொங்கி சர்வலோக பாவங்களுக்காக மரித்தார் என்று வேதம் சொல்கிறது.
I யோவான் 2:2நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின்பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
ஆகினும் இன்றுவரை இன அழிப்பும்/ கொலை கொள்ளையும் வன்கொடுமை போன்ற எந்த தீமையும் தீர்ந்தபாடில்லையே அதற்க்கு காரணம் என்ன?
தேவன் எல்லாம் சரியாகத்தான் செய்திருக்கிறார்! ஆனால் அதை பயன்படுத்த தெரியாத நாம்தான் எங்கோ எதிலோ தவறுகிறோம் என்பதை உணரும் இருதயம் நமக்கு இன்னும் வரவில்லையே. "நாம்" என்று இங்கு நான் சொல்வது மொத்த மனுகுலத்தையுமே. நான் வேறு என் சகோதரன் வேறு அல்ல! யார் தண்டிக்கபட்டாலும் என் இருதயம் வலிக்கவே வலிக்கும்!
அடுத்தவர்களை ஆழ்ந்து ஆராய்ந்து அறிந்து குறைகூரிக் கொண்டிருக்க எனக்கு எள்ளளவேனும் நேரமில்லை அதற்க்கு விருப்பமும் இல்லை. ஆனால் நான் குணப்பட்டால் அடுத்தவர்களை நிச்சயம் ஸ்திரபடுத்த முடியும் எனவே ஆண்டவரை நோக்கி நான் கதறுவது
இன்னும் நான் என்ன செய்யவேண்டும் தேவனே?
என்பதுதான். உங்கள் எல்லோரையும் அதையே கேளுங்கள் என்று சொல்லும்படி ஆண்டவர் என்னை ஏவுகிறார்.
என்னை எவரும் புரிந்து கொண்டாலும் சரி புரியாமல் போனாலும் சரி நான் சொல்லவேண்டியதை சொல்கிறேன்.
அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். அவர்கள் எதோ அறியாமையால் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இருதயம் உணர்வடையும்போது அவர்கள் உண்மையை அறிவார்கள்.
ஆனால் நாமோ! அடுத்தவர்கள் பாவம் செய்யும்போதும்கூட அவர்களுக்காக தேவனுக்கு முன்னாள் குப்புற விழுந்து என் பெயரை உம புஸ்தகத்தில் இருந்து கிறுக்கி போடும் என்று கெஞ்சிய மோசேயாக இருக்கவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.
அவர் விருப்பத்தை நிறைவேற்றவே வாஞ்சிப்போம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)