துன்பத்திலும் நோயிலும் வேதனையிலும் வாடும் அனேக கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பாவம் என்னவென்பதை ஆராய்ந்து அறிய விரும்பாமல் யோபுவின் வாழ்க்கையை சொல்லி எதோ அவர்கள் யோபு போல உத்தமமானவர்கள் போலவும் சாத்தான் அவர்களை சோதிக்க இப்படி பல வேதனைகளை கொண்டு வருவதாகவும் தவறாக எண்ணிக்கொண்டு தங்கள் பாவத்தை ஆராய்ந்து திருந்தாமல் மேலும் மேலும் தண்டனைக்குள்ளகிரார்கள்
யோபு தான் "உத்தமன் நல்லவன் எனக்கு இப்படி சோதனையை தேவன் தருகிறார்" என்று சொல்லி வாதாடியதே தவறான காரியம். காரணம் அந்நாட்களில் நியாயபிரமாணம் எழுதிகொடுக்கபட வில்லை. நன்மை எது தீமை எது என்று வரையறுப்பது நியாயபிரமானமே. நியாயப்பிரமாணம் இல்லாத அந்நாட்களில் ஒருவன் தேவனுக்கு பயந்து சன்மாக்கமாகதான் நடக்க முடியுமேயன்றி தேவனின் முழு எதிர்பார்ப்பையும் செய்துவிட முடியாது. அதனால் அந்நாட்களில் சில காரியங்களுக்கு யோபுவுக்கு பதில் தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் இன்று நிலை அதுவல்லை
மீகா 6:8மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்;
நன்மை எது தீமை எதுவென்று மிக திட்டமாக தேவன் வரையறுத்து நம் கையில் எழுதிகொடுத்து
உபாகமம் 30:15இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
என்று தெளிவாக சொல்லிவிட்டார். அதற்க்கு மிஞ்சினது தெரியாதது என்று ஒன்றும் இல்லை. தொடர்ந்து ஆண்டவராகிய இயேசு இவ்வாறு சொல்கிறார்.
எனவே இனிமேல் அது தெரியாது இது தெரியாது அதனால் துன்பம் வந்தது என்று சொல்வதற்கு சான்சே இல்லை.
ஒவ்வொரு துன்பத்துக்கும் ஒவ்வொரு காரணம் நிச்சயம் உண்டு. அதை வேத வசனத்தின் அடிப்படையில் கண்டுபிடித்துவிட முடியும். எனவே மீறுதல் இல்லாமல் யாருக்கும் துன்பம் வருவதில்லை என்பதை கீழ்கண்ட வசனங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
யாக்கோபு 1:14அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
புலம்பல் 3:39 உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்குவரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
எரேமியா 13:22இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
யோவான் 5:14அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடிஇனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
ஒரு சிறிய உதாரணத்தை எடுத்துகொள்வோம்:
மத்தேயு 5:37உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
என்று ஆண்டவர் தெளிவாக சொல்கிறார். ஆனால் எத்தனைபேர் தீமைக்கு பயந்து உள்ளதை உள்ளதென்று சொல்கிறோம்?
செய்த தீமை நம்மை சும்மா விடுமா? அது எங்காவது ஒரு இடத்தில் நமக்கு பிரச்னையை உண்டாக்கத்தான் செய்யும். பிறகு ஐயோ நான் நான் எந்த தவறும் செய்யவில்லையே எனக்கு ஏன் இந்த சோதனை என்று புலம்புவோர் அநேகர்.
எனவே செய்யும்/சொல்லும் காரியங்களை வேத வார்த்தையின் அடிப்படையில் ஆராய்ந்து செய்தால் அனேக துன்பகளுக்கு நாம் நிச்சயம் தப்பிவிட முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Gnana Piragasam//சகோ. ஞானம் அவர்களே, முதலில் யோபு தான் உத்தமன் நல்லவன் எனக்கு இப்படி சோதனையை தேவன் தருகிறார் என்று சொல்லி வாதாடியதே தவறான காரியம்.//
நீங்கள் உங்கள் சுயத்தின்படியே யோபுவைக் குறித்து இப்படி தீர்ப்பு செய்கிறீர்கள்; நானோ வசனத்தின்படி சொல்கிறேன். யோபுவைக் குறித்து தேவனே சொன்ன சாட்சி இதோ:
யோபு 42:7 கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.
யோபுவின் வாதத்தில் தவறு இருந்தால், அதைத் தேவன் சொல்லியிருப்பாரே! ஆனால் தேவனோ யோபு நிதானமாகப் பேசியதாகச் சாட்சி கொடுப்பதோடு, அவரைத் தமது தாசன் என்றும் பெருமையுடன் சொல்கிறாரே!
எனவே யோபுவின் வாதத்தில் தவறு இல்லை என்பது நிச்சயம்; இதற்கு தேவனே சாட்சி.
//காரணம் அந்நாட்களில் நியாயபிரமாணம் எழுதிகொடுக்கபடவில்லை அதனால் அந்நாட்களில் சில காரியங்களுக்கு யோபுவுக்கு பதில் தெரியாமல் இருந்திருக்கலாம்.//
நியாயப்பிரமாணம் மட்டும் எது குற்றம்/குற்றமில்லை என வகையறுப்பதில்லை. ஒருவனின் மனச்சாட்சிகூட எது குற்றம்/குற்றமில்லை என்பதை வகையறுக்கமுடியும்.
ரோமர் 2:14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால்கூட ஒருவன் தேவனுக்கு முன்பாக உத்தமனாக வாழமுடியும். யோபுவும்கூட தேவனால் உத்தமன் என சாட்சி பெற்றவர்தான். தேவனால் உத்தமன் எனச் சாட்சி பெற்ற ஒருவரை, தவறானவர் எனத் தீர்க்க முயலவேண்டாம்.
நியாயப்பிரமாணம் இல்லாமலேயே தேவனால் நீதிமான் என சாட்சி பெறமுடியும் என்பதற்கு ஆபேல், நோவா, ஆபிரகாம், மோசே எனப் பலரைக் காட்டமுடியும்.
தயவுசெய்து உங்கள் வாதத்தை சுயமாகச் சொல்லாமல், வசன ஆதாரத்தோடு வையுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///தயவுசெய்து உங்கள் வாதத்தை சுயமாகச் சொல்லாமல், வசன ஆதாரத்தோடு வையுங்கள்."///
அவனவன் பாவம்தான் அவனவன் துன்பங்களுக்கு காரணமாக இருக்கிறது என்பதற்கு நான் நான்கு வசன ஆதாரம் கொடுத்துதான எழுதியிருக்கிறேன் சகோதரரே. அதையும் சற்று கவனியுங்கள்.
///என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. யோபுவின் வாதத்தில் தவறு இருந்தால், அதைத் தேவன் சொல்லியிருப்பாரே! ஆனால் தேவனோ யோபு நிதானமாகப் பேசியதாகச் சாட்சி கொடுப்பதோடு,///
தேவனை குறித்து யோபு பேசியதில் எந்த தவறும் இல்லை எனவேதான் "யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை" என்று தேவன் சாட்சிகொடுக்கிறார். ஆனால் அவன் அனேக தேவையற்ற வார்த்தைகளை அலப்பியதால்தான் "என்னுடையா செயல்பாடுகளை நீ அறிவாயா? என்பதுபோல் தேவன் கேட்கிறார். அதை புரிந்துகொண்ட யோபுவே " நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்"யோபு 42:3.
///அவரைத் தமது தாசன் என்றும் பெருமையுடன் சொல்கிறாரே!///
தேவன் "என் தாசன்" என்று சொன்னவர்களில் தாவீது / மோசே போன்ற பலரும் தவறுதல் செய்து தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள் எனவே தேவன் தாசன் என்று சொல்லிவிட்டால் அவரன் 100% நல்லவன் என்று சொல்லிவிடமுடியாது. அவர்களும் தவறு செய்து தண்டனை அனுபவிக்க வாய்ப்புண்டு என்பதையே நான் சொல்கிறேன்.
///நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால்கூட ஒருவன் தேவனுக்கு முன்பாக உத்தமனாக வாழமுடியும். யோபுவும்கூட தேவனால் உத்தமன் என சாட்சி பெற்றவர்தான். தேவனால் உத்தமன் எனச் சாட்சி பெற்ற ஒருவரை, தவறானவர் எனத் தீர்க்க முயலவேண்டாம். நியாயப்பிரமாணம் இல்லாமலேயே தேவனால் நீதிமான் என சாட்சி பெறமுடியும் என்பதற்கு ஆபேல், நோவா, ஆபிரகாம், மோசே எனப் பலரைக் காட்டமுடியும்.///
இன்றும் கூட எந்த வேத பிரமாணத்தையும் அறியாத பல வேற்று மதத்தார்கள் சன்மார்க்க உத்தம வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை
யாரும் மறுக்க முடியாது. ஆனால் மோசே மூலம் தேவன் எழுதிகொடுத்த நியாயப்பிரமாணத்தின் மேன்மை என்னவென்பதை நாம் அறிதல் அவசியம்
மனசாட்சியின்படி குற்றமுண்டு என்று தீர்ப்பவர்களும் சன்மார்க்கர் உத்தமன் என்று தீர்க்கபடுகிரவர்களும் கூட தேவனின் கோபாக்கினை நாளிலே சங்கரிக்கபடலாம் என்பதை தேவன் சொல்கிறார்.
எசேக்கியேல் 21:3இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில்சன்மார்க்கனையும்துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணுவேன்.
ஆனால் அவரின் கட்டளைகளின்படி நடப்பவனை குறித்தோ
எசேக்கியேல் 18:9என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன்பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எனவேதான் நியாயபிரமாணத்தை எழுதிகொடுத்த கர்த்தர் இதோ மரண வழியையும் ஜீவ வழியையும் உங்கள் முன்னே வைக்கிறேன்
நீதிமொழிகள் 7:2என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
என்று சொன்னதோடு அதோடு ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம் என்று சொன்னார்.
தேவன் கொடுத்த அந்த வாத்தையில் உள்ள மேன்மை ஒருவன் சன்மார்க்கமாக நடப்பதாலோ மனசாட்சியின்படி வாழ்வதாலோ கிடைத்துவிடாது. தேவ கட்டளையின்படி வாழ்வதற்கும் நம் சொந்த மனசாட்சியின்படி உத்தமமாக வாழ்வதற்கும் அனேக வேறுபாடுகள் உண்டு.
நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத அந்த நேரத்தில்கூட யோபுவின் உத்தம சன்மார்க்க வாழ்க்கை தேவனுக்கு பிரியமாக இருந்ததால் அவனை குறித்து தேவன் சாட்சி கொடுக்கிறார். ஆகினும் நியாயபிரமாணம் எழுதி கொடுக்கபடாத யோபுவின் காலத்தில் அவன் உத்தமனாக சன்மார்க்கனாக இருந்திருந்தாலும் தேவனின் சித்தப்படி/எதிர்பார்ப்புப்படி வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
என்ற நிலை இருப்பதால். நியாய பிரமாணம் கொடுக்கப்படாத அந்த காலத்தில் தான் எங்கே மீறினோம், தன துன்பத்துக்கு காரணம் என்னவென்று தெரியாமல் யோபு புலம்புகிறான். அவனை அன்று சமாதானபடுத்த "நீ என் செயல்பாடுகளை அறிவாயோ?" என்று சொல்லி வேறொரு வழியில்அவனை தேவன் சமதானபடுத்துகிறார். அவ்வளவே!
ஆனால் இந்நாளில் அப்படியல்ல.
தேவையானது எல்லாமே எழுதிகொடுக்கபட்டாகிவிட்டது. அத்தோடு செய்யும் பாவத்தை கண்டித்து உணர்த்த பரிசுத்த ஆவியும் நம்மோடு இருக்கிறார் எனவே இன்னும் யோபுவை காரணம் காட்டி நாம் தப்பிக்க வகையில்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)