மாளிகைபோல வீட்டை வைத்துகொண்டு ஒருவரோ இருவரோ வாழ்ந்துகொண்டு, ஆள் அரவமற்ற பெரிய வீட்டில் ஒரு ரூமில் இன்னொரு அறைக்கு தனியாக போக பயந்துகொண்டு பல ரூம்களை பூட்டியே வைத்திருக்கும் ஜனங்களை ஒருபுறம் பார்க்கிறோம். இன்னொரு புறமோ மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கி தங்க சிறிய இடம் கூட இல்லாமல் வீடின்றி தவிக்கும் அனேக ஜனங்களை ரோட்டோரம் பார்க்கிறோம்.
இவர்களை பார்த்து நாம் பரிதபிக்கத்தான் முடியுமேயன்றி இவர்களை இந்நிலையில் இருந்து விடுவிப்பது என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல.
இதுபோன்ற வீடில்லாத ஒரு கணவன் மனைவி 4 பிள்ளைகள் கொஞ்சநாள் எங்கள் வீட்டின் கீழே தங்கியிருந்தார்கள் அவர்கள் பண்ணிய அட்டூழியம் தாங்கமுடியாது.
எவ்வளவு தண்ணீர் ஏற்றிவைத்தாலும் திறந்துவிட்டு உடனே காலி பண்ணிவிடுவார்கள். நல்லபடி அட்வைஸ் பண்ணினால் கேட்காமல் நம்மேலேயே கோபபடுவார்கள். அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே பயங்கர சண்டை. மிக மிக மோசமான அருவருப்பான வார்த்தைகள் "ஓ" என்றல் அலறுதல்கள். குழந்தைகள் கையில் என்ன கிடைத்தாலும் உடைத்து விடுவார்கள். வண்டியை கீழே விட்டுவிட்டு வீட்டுக்குள் நிம்மதியாக இருக்க முடியாது. இவை எல்லாவற்றிக்கும் சிகரமாக அந்த பெண் என் மனைவியிடம் வந்து "பக்கத்தில் ஒரு இடத்தில் சில ஆண்கள் இருக்கிறார்கள் ஒரு நேரம் போனால் 200ரூபாய் சும்மா கிடைக்கும் என்று சொன்னதாம்
இப்படிபட்டவர்களை என்ன செய்ய?
அதனால் இப்படிபட்டவர்களுக்கு உதவி செய்யகூடாது என்பதல்ல எனது கருத்து,
I பேதுரு 3:17தீமைசெய்துபாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து
பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
என்று வசனம் சொல்வதால் நம்மால் முடிந்த உதவியை சோர்ந்து போகாமல் இவர்களுக்கு செய்யலாம்.
ஆகினும் இவர்களை ஆட்கொண்டிருக்கும் சாத்தானை விரட்டினலோழிய இவர்களை முற்றிலும் மீட்கமுடியாது. இரட்சகரின் கரத்தினும் இவர்களை கொண்டுவந்தால் மட்டுமே இவர்களால் பூரண விடுதலையை பெறமுடியும்.
சிலுவையில் அறையபட்ட இயேசுவுக்கு தன்னை அடித்தவர்களின் புற தோற்றத்தைவிட அவர்களுக்குள்ளே இருந்து அவர்களை ஆட்கொண்டு கிரியை செய்த சாத்தான் கண்ணுக்கு தெரிந்ததால் "பிதாவே இவர்களுக்குமன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று வேண்டினார் இதுபோன்ற ஜனங்களும் சாத்தானால் ஆட்கொள்ளபட்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எதோ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் படும் வேதனையை பார்க்கும் தேவனும் "இப்படி வேதனை அனுபவிக்கவா நான் மனுஷனை படைத்தேன். நல்லதாவகே நான் உண்டாக்கிய எல்லாவற்றையும் சாத்தான் கெடுத்து பாவமாக்கி துன்பத்தின் உச்சிக்கு மனுஷனை கொண்டு செல்கிறானே என்று பரிதபிக்கிறார்"
அவர் ஆவியாய் இருப்பதால் இரக்கமுள்ள சிலருடைய சரீரங்களுகுள் வந்து வேதனை பட்டு பரிதபித்து கண்ணீர் வடிக்கிறார்.
எரேமியா 14:17என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
என்று சொல்லி பரிதபித்த தேவன், தன ஜீவனையே மனுஷனுக்காக கொடுத்து, மீட்பின் திட்டத்தில் தன் சார்பில் செய்ய வேண்டியதை செய்து "எல்லாம் முடிந்தது"என்று முடித்துவிட்டார்.
ஆனால் இன்னும்கூட அசரமால் ஆட்டம்போட்டுகொண்டு இருக்கும் "அந்த கொடிய சத்துரு ஜெயிக்கப்பட வேண்டும்" இல்லையேல் இவற்றுக்கெல்லாம் முடிவு வராது. ஒரு ஏழையை நாம் கஷ்டபட்டு உயர்த்தினால் அவன் ஒன்பது புதிய ஏழைகளை உருவாக்கி துன்புறுத்துவான். ஆகினும்
அதுவரை நாம் சோர்ந்துபோகாமல் நம்மால் முடிந்ததை நாம் செய்வோமாக.
கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
மேலும் இப்படிபட்டோருக்கு உதவி செய்வோரை தேவன் தனக்கே உதவி செய்த மேன்மையை தருகிறார்
மத்தேயு 25:40அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள்எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
சுருங்க சொல்லின்: எக்காலத்திலும்
மத்தேயு 5:7இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நீங்கள் சொல்வதும் சரிதான் அண்ணா. உதவி செய்ய வேண்டும் என்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பல வேளைகளில் நாம் செய்யும் உதவியே சிலரை சோம்பேறிகளாக்கி விடுகிறது.
மீனைக் கேட்கும் ஒருவனுக்கு தூண்டிலைக் கொடுப்பதே நாம் செய்யக் கூடிய உதவிகளில் மிகச் சிறந்த உதவி.
மீனைக் கொடுத்தால் ஒரே தடவையில் சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்த வேளை பசி வந்தவுடன் மீனைக் கொடுத்த கையையே மீண்டும் பார்த்துக் கொண்டிருப்பான். தூண்டிலைக் கொடுத்தால் தேவைப்படும் போதெல்லாம் மீனைப் பிடித்து பசியாறிக் கொள்வான்.
பசியோடு வருபவனுக்கு வயிராற உணவு கொடுத்து விட்டு அவன் தொடர்ந்தும் பிழைப்பதற்கு ஒரு வேலை தேடிக் கொடுக்கலாம். அல்லது நாமே வேலை செய்யவைத்து கூலி கொடுத்து அனுப்பலாம். அது அவனை உழைத்து வாழச் செய்யும்.
உடம்பிருந்தும் உழைக்காதவனுக்கு சாப்பிடும் தகுதி இல்லை. என்னுடைய அப்பாவை நான் உதாரணமாக கூற முடியும். என்னுடைய அப்பாவுக்கு ஒரு ரயில் விபத்தில் சிக்கியதால் ஒரு கையும் ஒரு காலும் அகற்றப்பட்டு விட்டது. ஒரு கால் ஒரு கையுடன்தான் திருமணம் முடித்து எங்களைப் பெற்று யாரிடமும் கையேந்தாமல் மீன்பிடித் தொழில் செய்து, வியாபாரத் தொழில் செய்து எங்ளை இந்தளவு வளர்த்து விட்டார். அது கர்த்தரின் பெரிய கிருபை.
திருமணம் முடித்து 4பிள்ளைகளை பெற்றுள்ள ஒருவர் வாழுவதற்கு கையேந்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. வீடில்லை என்றும் கூற முடியாது, ஒரு குடிசையையாவது அமைத்துக் கொள்ள ஊக்கப்படுத்தி முடிந்தால் உதவி செய்து வீட்டை விட்டு அனுப்பி விடுவதுதான் சிறந்தது.
இன்னொருவரால் நமது குடும்ப சமாதானம் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
மேலும் தெருக்களில் காயங்களோடு பிச்சை எடுப்பவர்களை காயங்களை கட்டும்படி வைத்திய சாலைக்கு கூட்டிப் போகிறேன் வாருங்கள் என்று கூப்பிட்டு பாருங்கள் , சிலர் கடைசிவரை வர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தாங்கள் சுகப்படுவதை விரும்ப மாட்டார்கள். சுகப்பட்டால் பிச்சை எடுக்க முடியாது போய்விடும். சோம்பேறித்தனமான வருமானத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களை சுகமாக்கி வேலையொன்றை செய்யும்படி ஊக்கப்படுத்துவதே சிறப்பானது.
மேலும் உங்கள் வீட்டிலிருப்பவர்களுக்கு சில கண்டிஷன் போடுங்கள் கட்டுப்படா விட்டால் வீட்டை விட்டு அனுப்பி விடுவேன் என்று கண்டிப்பாக கூறி விடுங்கள். கர்த்தருடைய சபையில் கூட இப்படியான கட்டுப்பாடுகளை கர்த்தர் விதித்துள்ளதை கவனியுங்கள்.
மீனைக் கேட்கும் ஒருவனுக்கு தூண்டிலைக் கொடுப்பதே நாம் செய்யக் கூடிய உதவிகளில் மிகச் சிறந்த உதவி.
மீனைக் கொடுத்தால் ஒரே தடவையில் சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்த வேளை பசி வந்தவுடன் மீனைக் கொடுத்த கையையே மீண்டும் பார்த்துக் கொண்டிருப்பான். தூண்டிலைக் கொடுத்தால் தேவைப்படும் போதெல்லாம் மீனைப் பிடித்து பசியாறிக் கொள்வான்.
பசியோடு வருபவனுக்கு வயிராற உணவு கொடுத்து விட்டு அவன் தொடர்ந்தும் பிழைப்பதற்கு ஒரு வேலை தேடிக் கொடுக்கலாம். அல்லது நாமே வேலை செய்யவைத்து கூலி கொடுத்து அனுப்பலாம். அது அவனை உழைத்து வாழச் செய்யும்.
பலருக்கு நல்ல பயனுள்ள வழிகாட்டும் செய்தி சகோதரரே. கர்த்தருக்கு சித்தமானால் நாமும் அதுபோல் செய்ய முயற்ச்சிக்கலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)