இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "திறப்பின் வாசலில் நின்றல்" என்றால் என்ன?

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
"திறப்பின் வாசலில் நின்றல்" என்றால் என்ன?
Permalink  
 
தற்காலத்தில் "திறப்பின் வாசல் ஜெபம்" என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  அதன் சரியான பொருள் என்ன?  
 
வேதாகமத்தில் இரண்டு இடங்களில் திறப்பின் வாசல் என்ற வார்த்தை வருகிறது. 
 
1. மோசே இஸ்ரவேல் ஜனங்களை அழிக்காதபடிக்கு திறப்பின் வாசலில் நின்றான் என்பது. 
 
சங்கீதம் 106:23 ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்

2. கர்த்தர் தேசத்தை அழிக்காதபடிக்கு  திறப்பின் வாசலில் நிற்கும் ஒருவனை தேடுகிறார் ஆனால் ஒருவனும் இல்லை என்று சொல்கிறார்.
 
எசேக்கியேல் 22:30 நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். 
 
"திறப்பின் வாசலில் நின்றல்"  என்பதன் சரியான பொருள் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கலாமே.
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 
திறப்பின் வாசல் என்பது குறித்து எனது கருத்தைக் கூறுகிறேன்.

அதாவது அக்காலத்தில் அரணிப்பான நாடுகள் அல்லது நகரங்களைச் சுற்றி மதில்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த மதிலுக்கு ஒரேயொரு வாசல்தான் காணப்படும். அந்த வாசல் திறந்திருந்தால் தேசத்தை அழிக்க வரும் எதிரிகள் இலகுவாக தேசத்துக்குள் புகுந்து அதை அழித்து விடக் கூடும்.

தேசத்துக்குள்ளிருந்து பலர் போவதும் வருவதுமாக இருப்பதால் கதவு திறந்து வைக்கப்பட்டிருக்கும் எப்போதும் கதவருகே ஒரு காவலன் காணப்படுவான். . ஆனால் இந்த வாயிற்காவலன் தேசத்துக்குள் யாராவது எதிரிகள் நுழைவதற்கு முற்படும் போது அவர்கள் வருவதற்கு முன்னதாக அந்த வாயிலை அடைத்து விட வேண்டும். இதற்கு அவன் விழிகள் எப்போதும் கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டே இருக்க வேண்டும். இதைத்தான் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும் தக்கதான மனிதன் என தேவன் கூறுகிறார்.

மேலும் இன்னொரு கருத்தும் உண்டு. என்னவெனில் இப்படியான கோட்டைச் சுவர்கள் சில இடங்களில் எதிரிகளின் தாக்குதலால் வெடித்து எதிரிகள் நுளழயக் கூடியவாறு திறந்து காணப்படும். இதையும் திறப்பு என்று கூறலாம். இப்படி பிளந்த இடத்தை அவதானிக்கும் மனிதன் கண்டும் காணாமல் போய்விடாமல் அத் திறப்பை அடைத்து தன் தேசத்தை காக்க வேண்டும். அல்லது அந்த திறப்பினருகே நின்றுகொண்டு அதற்குள் நுழைய முற்படும் எதிரியோடு தைரியமாக போராடி நுழைய விடாது தடுத்து தன் தேசத்தை காக்க வேண்டும்

இதை உவமானமாக கொண்டே சங்கீதக்காரன் திறப்பின வாசலில் நிற்கும் மனிதனுக்கு உதாரணமாக மோசேயை காண்பித்து பேசுகிறார்.

தன்னுடைய தேசமும் மக்களும் அழியாதபடி ஜெபத்திலிருந்து கர்த்தருடைய உக்கிரத்தை ஆற்றும் மனிதனே இந்த திறப்பில் நிற்கும் மனிதன். அல்லது தன் தேசத்தையும் மக்களையும் காக்க எதிரியோடு போராடும் மனிதனே இந்த திறப்பில் நிற்கும் மனிதன்

சுந்தர் அண்ணா நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு வசனங்களிலுமிருந்து இதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இது என் கருத்து தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
t dinesh wrote:

திறப்பின் வாசல் என்பது குறித்து எனது கருத்தைக் கூறுகிறேன்.
 
தன்னுடைய தேசமும் மக்களும் அழியாதபடி ஜெபத்திலிருந்து கர்த்தருடைய உக்கிரத்தை ஆற்றும் மனிதனே இந்த திறப்பில் நிற்கும் மனிதன். அல்லது தன் தேசத்தையும் மக்களையும் காக்க எதிரியோடு போராடும் மனிதனே இந்த திறப்பில் நிற்கும் மனிதன்
 
"திறப்பின் வாசல்" என்ற வார்த்தைக்கும் தங்கள் விளக்கம்  சரியான நிதானிப்பு தான் சகோதரே. 
 
அப்படி திறப்பில் நிர்ப்பவர்களுக்கு ஜெபத்தோடு கூட  இன்னும் சில  தகுதியும் தேவை.  
 
1. அலங்கத்துக்குள் இருப்பவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் நான்  மட்டும் ஏன் இங்கு கிடந்து அவஸ்த்தைபட வேண்டும்  என்ற எண்ணம் இருக்க கூடாது.
 
2. தன உயிரை கொடுத்தாவது அலங்கத்துக்குள் இருப்போரை காக்க தயாரான வாஞ்சை வேண்டும்.
 
3.  திறப்பு சுவரை அடைக்கும் வழி  தேவனிடம் உண்டு. அதை  அறிந்து செயல்படுத்த முயற்ச்சிக்க வேண்டும்.
 
வனாந்திரத்தில் பாவம் செய்த இஸ்ரவேலை அழிக்கும்படி தேவன் கோபம்கொண்டபோது  அங்கு மோசே நின்று அவர்களுக்காக வேண்டினான் எனவே தேவன் அப்போதைக்கு அவர்களை அழிக்காது விட்டாலும், பின்னாட்களில் அவர்கள் எல்லோருமே வனாந்திரத்தில் மாண்டுபோனார்கள்.  எனவே திறப்பு இருக்கும் வரை தப்புவது கடினம். 
 
எனவே திறப்பில் நின்று ஜெபிபதொடு மட்டுமல்ல சுவரை அடைக்கும் முயற்ச்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 
நீங்க சொல்வது சரிதான் அண்ணா. திறப்பின் வாசலில் நிற்பது என்பது வெறுமனே தேவத்துக்காக ஜெபிப்பது மட்டுமல்ல. தேசத்தில் தேவ கோபாக்கினையை கொண்டு வரக் கூடிய வெடிப்புகளை சீர்படுத்த வேண்டும்.

லஞ்ச ஊழல்களை தட்டிக் கேட்டல், அநீதிக்கொதிராக  குரல் கொடுத்தல், ஆத்தும இரட்சிப்புக்காக ஊழியம் செய்தல் என்பவையும் அடங்கும். என்று நினைக்கிறேன்.

பக்கத்து வீட்டில் அநியாயமொன்று நடக்கிறது, ஒரு சிறு பிள்ளையை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றால் அதற்கெதிராக நியாயமான முறையில் எதுவும் செய்யாமல் ஜெபித்து கொண்டிருப்பது சரியாகாது. எனவே ஜெபம் தேவைதான் அத்துடன் திறப்புகளை அடைக்கவும் முன்வர வேண்டும்...

அத்துடன் திறப்பின் வாசலில் நிற்க விரும்புபவர் நீங்கள் மேலே சொன்ன தகுதிகளையும் உடையவராயிருக்க வேண்டும்.

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 
///////////////////////////////////////வனாந்திரத்தில் பாவம் செய்த இஸ்ரவேலை அழிக்கும்படி தேவன் கோபம்கொண்டபோது  அங்கு மோசே நின்று அவர்களுக்காக வேண்டினான் எனவே தேவன் அப்போதைக்கு அவர்களை அழிக்காது விட்டாலும், பின்னாட்களில் அவர்கள் எல்லோருமே வனாந்திரத்தில் மாண்டுபோனார்கள்.  எனவே திறப்பு இருக்கும் வரை தப்புவது கடினம். 
 
எனவே திறப்பில் நின்று ஜெபிபதொடு மட்டுமல்ல சுவரை அடைக்கும் முயற்ச்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.////////////////////////////////////
 
இக்கருத்தில் தேவன் அப்போதைக்கு ஜனங்களை அழிக்கா விட்டாலும் பின்னர் அவர்களை அழித்தார் என்றால் அப்போ மோசேயின் ஜெபம் கேட்கப்படவில்லையா ?
 
__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 
Debora wrote:
 
 மோசேயின் ஜெபம் கேட்க்கப்படடதால்தான் கர்த்தர் அந்நாடகளில் அவர்கள் யாரையும் அழிக்காமல் விட்டு வைத்தார் 

திறப்பின் நின்ற மோசேயின் ஜெபம் இதுதான்: 
 
யாத்திராகமம் 32: 32. ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.
 
அவர்கள் பாவத்தை மன்னியும் அல்லது அதற்க்கு பதில் என் பெயரை கிறுக்கிப்போடும் என்ற மே ன்மையான ஜெபம்.
 
அதற்க்கு கர்த்தரின் பதில் :
 
33. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.
 
ஆகினும் கர்த்தர் மோசேயின் வேண்டுதலுக்கு இணங்கி  அந்நாட்களில் அவர்கள் பாவத்துக்கு தக்க தண்டிக்காமல் விட்டுவிடடார்.  
 
யாத்திராகமம் 32:34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார். 

ஆகினும் ஓர் நாளில் நான் அவர்கள் பாவத்தை விசாரிப்பேன் என்று சொன்னார். அதை செய்தார்.
 
இங்கு மோசே ஜெபம் கேட்க்கப்பட்ட்து கர்த்தரின் வார்த்தையும் நிறைவேறியது.  

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
RE: திறப்பின் வாசலில் நின்றல்" என்றால் என்ன?
Permalink  
 
OK ANNA

__________________

புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
RE: இயேசுவின் குத்தி "திறக்கப்பட்ட விலா" == "திறப்பின் வாசல்"
Permalink  
 
Hi,

இயேசுவின் குத்தி "திறக்கப்பட்ட விலா" == "திறப்பின் வாசல்"

சிலுவையிலே *குத்தி திறக்கப்பட்ட* இயேசுவின் விலாவை நோக்கி, அதாவது அதிலிருந்து வழிந்தோடிய இரக்கப்பெருக்கான ரத்தம் மற்றும் தண்ணீரை நோக்கி மன்றாடி பாவிகளின் மனமாற்றம் மற்றும் அவ்ரகளுக்காக கடவுளிடமிருந்து அதிகப்படியான இரக்கத்தை அதாவது கிருபையை பெற்றுக்கொடுப்பதே *திறப்பின் வாசல் ஜெபம்* என்பதாகும்.

சுருக்கமாக இறை இரக்க ஜெபம் என்றும் சொல்லலாம்.

*எடுத்துக்காட்டு விண்ணப்பங்கள்:*

-> Oh Eternal Father, We offer you the most precious blood of your divine son Jesus, along with our sacrifices we do everyday for all the sinners in the universal church, sinners everywhere, within my family, in my home and for me. In Jesus name, Amen.

-> இயேசுவின் திரு விலாவிலிருந்து வழிந்தோடிய ரத்தமே தண்ணீரே எங்கள் மீது இரக்கமாயிரும். Amen.

__________________

நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
RE: "திறப்பின் வாசலில் நின்றல்" என்றால் என்ன?
Permalink  
 
antorobin wrote:

Hi,

இயேசுவின் குத்தி "திறக்கப்பட்ட விலா" == "திறப்பின் வாசல்"

சிலுவையிலே *குத்தி திறக்கப்பட்ட* இயேசுவின் விலாவை நோக்கி, அதாவது அதிலிருந்து வழிந்தோடிய இரக்கப்பெருக்கான ரத்தம் மற்றும் தண்ணீரை நோக்கி மன்றாடி பாவிகளின் மனமாற்றம் மற்றும் அவ்ரகளுக்காக கடவுளிடமிருந்து அதிகப்படியான இரக்கத்தை அதாவது கிருபையை பெற்றுக்கொடுப்பதே *திறப்பின் வாசல் ஜெபம்* என்பதாகும்.

சுருக்கமாக இறை இரக்க ஜெபம் என்றும் சொல்லலாம்.

*எடுத்துக்காட்டு விண்ணப்பங்கள்:*

-> Oh Eternal Father, We offer you the most precious blood of your divine son Jesus, along with our sacrifices we do everyday for all the sinners in the universal church, sinners everywhere, within my family, in my home and for me. In Jesus name, Amen.

-> இயேசுவின் திரு விலாவிலிருந்து வழிந்தோடிய ரத்தமே தண்ணீரே எங்கள் மீது இரக்கமாயிரும். Amen.

 இங்கு சகோதரர் கொடுத்துள்ள கருத்துக்கள் வேதாகமத்துக்கு முரண்பட்டவையாகும். வேதத்தில் எங்கும் இயேசுவின் இரத்தத்தினிடடமும் தண்ணீரிடமும் வேண்டுல் செய்யும் படி சொல்லப்படவில்லை.

இயேசுவின் நாமத்தில் பிதாவை நேபக்கி ஜெபிக்கலாம், இயேசுவிடமும் ஜெபிக்கலாம்.

இவ்வாறு இரத்தத்திடமும் தண்ணீரிடமும் யாரும் ஜெபித்தாகவும் வேதத்தில் இல்லை.

சரி அவைதான் திறப்பின் வாசல் என்று வைத்துக் கொண்டாலும் திறப்பின் வாசலிடம் ஜெபிக்கும்படி கூறப்படவில்லை. திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் படிதான் கூறப்பட்டுள்ளது. அதாவது திறப்பில் நின்று தேவனிடம் ஜெபிக்க வேண்டும்

சகோதரர் இங்கு எடுத்துக்காட்டு விண்ணப்ப்கள் என்று பதிவு செய்துள்ளவைகள் யார் ஜெபித்த விண்ணப்பங்கள்?

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard