சரியான தாழ்மையுடைய ஒருவர் தான் எவரோ ஒருவரால் துன்பப்பட /திட்டப்படும்போது, வருத்தபட்டாலும் படுவாநேயன்றி திட்டுபவர்மேல் துன்பப்டுத்தியவர் மேல் கோபடமாட்டான்.
அதுவே கிறிஸ்த்து செய்ததும் தேவன் எதிர்பார்ப்பதுமான தாழ்மை நிலை. இந்த நிலையை அடைவது மிக கடினம்.
I பேதுரு 2:23அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
இந்த நிலையை அடைவது மிக கடினம். இந்த நிலையை நோக்கி நாம் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும்.
பலர் தங்களின் தாழ்மையை பிறருக்கு பெரிதாக காட்ட "நான் வெறும் குப்பை எல்லாம் தேவன்தான் செய்கிறார்" என்று சொல்வார்கள் ஆனால் அவரை பார்த்து "யோவ் குப்பை" என்று கூப்பிட்டால் அவர் அதன் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று நிதானிக்கவும்.
அங்கு கோபம் வந்தால் இதுவும் மாயமான ஒரு தாழ்மையே.
ஒவ்வொரு நாளும் நாம் நிலை நிற்பது தேவனுடைய கிருபைதான் அதை அன்றி வேறு எதுவும் இல்லை என்பதையும்
புலம்பல் 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடையகிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
அதை அன்றி வேறு எதுவும் இல்லை என்பதையும்.
நாம் என்னதான் நம்மை சுத்தமாக்கி பரிசுத்தமாக நடக்க எண்ணினாலும் பிரயாசம் எடுத்தாலும் தேவன் நம்மை தாங்காமல் விட்டுவிட்டால் ஒரே நொடியில் நாம் அசுத்தமாகிவிடுவோம்
யோபு 9:30/31. நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.
அவர் நம்மை சேற்றில் அமிழ்த்த நினைத்தால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதேபோல் அவர் நம்மை தூக்கிவிட நினைத்தாலும் யாரும் தடுக்க முடியாது! என்ற உண்மையை அறிந்தால் நாம் ஒன்றுமேயில்லை என்ற தாழ்மை தானாக வரும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)