இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விசுவாசமா? கிரியையா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
விசுவாசமா? கிரியையா?
Permalink  
 


மனுஷனுக்கு "விசுவாசம்" என்பது மிக மிக முக்கியமும் அவசியமும் ஆனது. அதன் மேன்மை மிகவும் பெரியது. நாம் இயேசுவை விசுவாசிப்பதாலேயே தேவனோடு ஒப்புரவானோம் இன்று விசுவாசிகளானோம்  விசுவாசம்  இல்லை என்றால் ஒன்றுமே இல்லை. எல்லாவற்றிக்கும் அடிப்படையே விசுவாசம்தான்!    

விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமானவர்களாக இருக்ககூட முடியாது  

எபிரெயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

 
இதில் ஆரம்பித்து 
 
மாற்கு 9:23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
 
"விசுவாசத்தால் எல்லாமே கூடும்" என்பது வரை விசுவாசம் என்பது  அடிப்படையானதும் மிகவும் வலிமை வாய்ந்ததுமானது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. 
 
ஆனால் "நான் சந்தேகம் இல்லாமல் தேவனை விசுவாசிக்கிறேன் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்?
  
ஒரு நோய் வரும்போது பயந்து அடித்து உடனே டாக்டரை தேடி ஓடாமல் தேவனின் பாதத்தில் அமர்ந்து தன்னை சீர்படுத்தி அவரிடம் இரக்கத்துக்காக கெஞ்சுதல் என்ற கிரியை மூலமே நான் டாக்டரைவிட தேவனை அதிகம் விசுவாசிக்கிறேன் என்று நிரூபிக்க முடியும். 
 
தேவனை அதிகம் விசுவாசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பண தேவைகளுக்கு வங்கியை நம்பிக்கொண்டு அங்கேபோய் லட்சம் லட்சமாக கடன்வாங்கினால் அங்கே விசுவாசம் என்பது எங்கே இருக்கிறது? 
 
யாருடனாவது சண்டை/ சொத்து தகராறு வந்தால் தேவனின் பாதத்தில் அமர்ந்து அவரது சமூகத்தில் அந்த பிரச்சனைகளை வைத்துவிட்டு அவர் எந்த முடிவு தந்தாலும் அதை ஏற்க்க தயாராக இருக்காமல் உடனே  உலக போலிசையும் நீதி மன்ற்ங்களையும் நோக்கி ஓடுனால் அங்கே தேவன் பேரில் உள்ள விசுவாசம் கேள்விக்குறியாகிறதே!      
  
இதுபோல்தான் எல்லா காரியமும்.
 
எவரும் "நான் தேவனை விசுவாசிக்கிறேன்" என்று சொல்லிவிட முடியும். ஆனால் அவர்களின் கிரியையே அவர்கள் உண்மையில் தேவனை விசுவாசிக்கிரார்களா அல்லது மாய்மாலமாக சொல்கிறார்களா என்பதை நிரூபிக்கும்.
 
எனவேதான் 
 
யாக்கோபு 2:20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
   
என்று வசனம் சொல்கிறது. 
 
அதே நேரத்தில், விசுவாசத்தை தொடங்குகிறவரும் முடிக்கிறவருமான இயேசு நம் விசுவாசத்தை வர்த்திக்கபபண்ணவில்லை  என்றால் நாம் உறுதியான விசுவாசத்துகுள் வரவே முடியாது.  
 
எபிரெயர் 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
 
அவ்வாறு தேவனால் நம்முள்  விசுவாசம் ஊற்றப்பட நாம் என்ன செய்யவேண்டும் என்று வேதம் சொல்கிறது?  
 
"நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு" இயேசுவை நோக்கி ஓடவேண்டும்.
 
பாவம் நெருக்கும்போது அதில் வீழ்ந்துவிட கூடாது பாவம் தன்னை நெருக்கியபோது யோசேப்பு தள்ளிவிட்டு ஓடினான் அவன் தேவனால் உயர்த்தபட்டான். 
 
அவ்வாறு பாவத்தை தள்ளிவிட்டு ஓடுவது என்பதும் ஒரு கிரியைதான்  
 
எனவே முடிவாக:
தேவன் ஒருவருக்குள் விசுவாசத்தை உருவாக்க வேண்டும் என்றால்  நம் கிரியைகள் மூலம் முயற்ச்சித்தால் அதற்க்கான தொடர்ச்சியை தேவனே பொறுப்பேற்பார். 
 
மற்றபடி கிரியையே இல்லாமல் நான் விசுவாசிக்கிறேன் என்று சொல்வது எப்படிபட்டது?
 
யாக்கோபு 2:19 தேவன் ஒருவர் உண்டென்று ...........பிசாசுகளும் விசுவாசித்துநடு்குகின்றன.
 
என்றுதான் பொருள்படும்! 
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

 
வசனம் சொல்வதுபோல் "கிருபையினாலே மட்டுமல்ல அத்தோடு விசுவாசத்தையும்  கொண்டுதான் நாம் இரட்சிக்கபட்டிருக்கிறோம் என்ற உண்மையை நாம் அறிதல் அவசியம்.
 
தேவ கிருபையானது இலவசமாக கிடைத்தும் "விசுவாசம்" என்ற கிரியை இல்லாத காரணத்தால் இன்று அநேகர் தேவ ராஜ்யத்துக்கு 
புறம்பே இருக்கின்றனர்.  
 
கிருபை என்பது எல்லார்மேலும் பலிக்கும் ஒரு தேவனின் கொடை என்றாலும் அந்த கிருபையை பெற்றுக்கொள்ள "விசுவாசம்" என்ற ஒரு கிரியை அவசியமாகிறது.
 
இக்கருத்தை விளக்க இஸ்ரவேலர் வனாந்திரத்தில் நடந்து வந்தபோது தேவனால் கொடுக்கபட்ட உணவாகிய "மன்னா"வை கூறலாம்.  
 
மன்னாவானது இஸ்ரவேலாரின் பாளையத்தில் இலவசமாக பொழியப்பட்டது. ஆனால் அதை பொருக்கி எடுத்து சரியான முறையில் பயன்படுத்தாதவர்க்கு அதனால் பயனில்லை!    
 
அதுபோல், இன்று உலகில் தேவனின் கிருபையானதது இலவசமாக எல்லா இடங்களிலும் பொழியப்படுகிறது 
 
ஆனால் இலவசமாக ஒரு வேஷ்டி கொடுத்தால் கூட்டமாக  கூடும் மனுஷர்கள், தேவ கிருபை இலவசமாக கிடைப்பதை அறியாமலே  
வாழ்ந்து மடிகின்றனர். 
 
அத்தோடு அறிகிறவர்கள் அறிந்தால் மட்டும்போதாது அதை அவர்கள் "விசுவாசிக்கவும்" வேண்டும்.
 
இந்த "விசுவாசம்" என்றால் என்ன?
 
எபிரெயர் 11:1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.  
  
காணப்படாத ஒன்றை நிச்சயமாக நம்புவதே விசுவாசம்! 
 
கண்ணால் கண்ட ஒரு காட்சியையே நம்பாமல் அதற்க்கு ஆதாரம் சாட்சியம் கேட்டு நிராகரிக்கு இந்த உலகில் காணாத ஒன்றை நம்புவது என்பது கடினமான ஒரு காரியம்.
 
எனவே "விசுவாசம்" என்பதும்கூட மனுஷனின் ஒரு கிரியைதான். 
 
எனவே:
 
கிருபை இருந்தும் விசுவாசம் இல்லை என்றால் பயனில்லை!
(எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்)
இயேசுவின் மூலம் கிருபை இலவசமாக கிடைத்தும் அதை விசுவாச்க்காதோருக்கு  நித்திய ஜீவன் இல்லை  
 
விசுவாசம் இருந்தும் கிரியை இல்லை என்றால் பயனில்லை!  
 
(யாக்கோபு 2:20 கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?)
விசுவாசம் இருந்தும் அதை  செயலில் காண்பிக்காமல் நான் விசுவாசிக்கிறேன் என்று வாயால் சொல்வதில் பயனில்லை.
     


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard