மனுஷனுக்கு "விசுவாசம்" என்பது மிக மிக முக்கியமும் அவசியமும் ஆனது. அதன் மேன்மை மிகவும் பெரியது. நாம் இயேசுவை விசுவாசிப்பதாலேயே தேவனோடு ஒப்புரவானோம் இன்று விசுவாசிகளானோம் விசுவாசம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை. எல்லாவற்றிக்கும் அடிப்படையே விசுவாசம்தான்!
விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமானவர்களாக இருக்ககூட முடியாது
எபிரெயர் 11:6விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
இதில் ஆரம்பித்து
மாற்கு 9:23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம்கூடும் என்றார்.
"விசுவாசத்தால் எல்லாமே கூடும்" என்பது வரை விசுவாசம் என்பது அடிப்படையானதும் மிகவும் வலிமை வாய்ந்ததுமானது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.
ஆனால் "நான் சந்தேகம் இல்லாமல் தேவனை விசுவாசிக்கிறேன் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்?
ஒரு நோய் வரும்போது பயந்து அடித்து உடனே டாக்டரை தேடி ஓடாமல் தேவனின் பாதத்தில் அமர்ந்து தன்னை சீர்படுத்தி அவரிடம் இரக்கத்துக்காக கெஞ்சுதல் என்ற கிரியை மூலமே நான் டாக்டரைவிட தேவனை அதிகம் விசுவாசிக்கிறேன் என்று நிரூபிக்க முடியும்.
தேவனை அதிகம் விசுவாசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பண தேவைகளுக்கு வங்கியை நம்பிக்கொண்டு அங்கேபோய் லட்சம் லட்சமாக கடன்வாங்கினால் அங்கே விசுவாசம் என்பது எங்கே இருக்கிறது?
யாருடனாவது சண்டை/ சொத்து தகராறு வந்தால் தேவனின் பாதத்தில் அமர்ந்து அவரது சமூகத்தில் அந்த பிரச்சனைகளை வைத்துவிட்டு அவர் எந்த முடிவு தந்தாலும் அதை ஏற்க்க தயாராக இருக்காமல் உடனே உலக போலிசையும் நீதி மன்ற்ங்களையும் நோக்கி ஓடுனால் அங்கே தேவன் பேரில் உள்ள விசுவாசம் கேள்விக்குறியாகிறதே!
இதுபோல்தான் எல்லா காரியமும்.
எவரும் "நான் தேவனை விசுவாசிக்கிறேன்" என்று சொல்லிவிட முடியும். ஆனால் அவர்களின் கிரியையே அவர்கள் உண்மையில் தேவனை விசுவாசிக்கிரார்களா அல்லது மாய்மாலமாக சொல்கிறார்களா என்பதை நிரூபிக்கும்.
எனவேதான்
யாக்கோபு 2:20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
என்று வசனம் சொல்கிறது.
அதே நேரத்தில், விசுவாசத்தை தொடங்குகிறவரும் முடிக்கிறவருமான இயேசு நம் விசுவாசத்தை வர்த்திக்கபபண்ணவில்லை என்றால் நாம் உறுதியான விசுவாசத்துகுள் வரவே முடியாது.