மரித்தவன் எதற்கும் கவலைப்பட மாட்டான், நாளைக்கென்று எந்த ஒரு திட்டமும் போடமாடான், பணத்தை சேர்த்து வைக்க மாட்டான், காசு காசு என்று அலையமாட்டான், காணிக்கை வேண்டும் என்று கேட்டு பிரசங்கம் செய்ய மாட்டான்
இது எல்லாமே இயேசுவின் கட்டளைகளில் அடங்கியுள்ளதுதான்.
இயேசு உலகத்துக்கு மரித்தல் என்றால் என்னவென்பதை விளக்கமாக சொல்லியிருக்கிறார், அதை பவுல் சுருக்கி சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான்.
இயேசு சொன்னதில் கொஞ்சமாவது செய்து உலகத்துக்கு மரிக்க நாம் முயற்ச்சியாவது செய்ய வேண்டாமா? ஆனால இதில் எல்லாமே செய்துகொண்டு "உலகத்துக்கு மரித்தேன்" என்று சொன்னால் அதன் பொருள்தான் என்ன?
நீங்கள் மரித்துவிட்டீர்கள் என்பதற்கு ஏதாவது ஒரே ஒரு அடையாளம் சொல்ல முடியுமா?
எனவே இன்று அனேக கிறிஸ்த்தவர்களை "மரித்தவர்கள்" என்று சொல்வதைவிட "மரித்தவர்போல் பாசாங்கு செய்பவர்கள்" என்று சொன்னால் சரியாக பொருந்தும்.
காரணம்:
இயேசு போதித்தபடி நீங்கள் வாழ்கிறீர்களா? என்று யாராவது கேட்டால் "நாங்கள் உலகத்துக்கு மரித்தவர்கள்" என்று சொல்லி தாங்கள் மரித்தவர்கள்போல் பாசாங்கு செய்துகொள்வார்கள்.
"பணம்/ உலகப்பொருள்/ மாம்ச இச்சை" என்று வந்துவிட்டால் உடனே உயிருள்ளவராகிவிடுவர்கள்!
மனுஷனின் இருதயத்தை குருடாக்கி பிசாசு செய்யும் தந்திரங்களைதான் என்னென்று சொல்வது?
எனவே நீங்கள் கிறிஸ்த்துவோடு மரித்தவர்கள் என்றால் அதை நிரூபிக்க ஆவியானவரின் பெலத்துடன் கிரிஸ்த்துசொன்னத போல்நடந்து நீங்கள் உலகத்துக்கு மரித்துவிட்டீர்கள் என்பதை நிரூபிக்க முயற்ச்சிக்க வேண்டும்.
மனுஷனிடம் பாசாங்கு செய்துவிடலாம் ஆனால் தேவனிடம் ஒருவரும் பாசாங்கு செய்து தப்பிக்க முடியாது?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)