சாத்தானுக்கு மாம்ச சரீரம் இல்லை அவன் யூதாசுக்குள் புகுந்து கிரியை செய்ததுபோல எந்த ஒரு மனுஷனுக்குளும் புகுந்து கிரியை செய்ய முடியும்.
அவ்விதமாக பெல்ஷாத்ஷார் என்ற ராஜாவுள்ளுள் அவன் புகுந்து தன்னை தேவனுக்கு மேலாக உயர்த்தினான்.
Dan 5:23 பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்
அவனின் முக்கிய நோக்கம் தேவனுக்கு விரோதமான கிரியை மற்றும் தான் தேவனுக்கு சமமாக ஆகவேண்டும் என்பதுதான். எனவே இன்று எனக்குள்ளோ அல்லது தங்களுக்குள்ளோ அவன் புகுந்து தேவனுக்கு விரோதமான கிரியை செய்தால் நம்மை நாம் பிறருக்கு முன்னால் உயர்த்தினால் நாமும் சாத்தான்தான்.
அதனால்தான் அன்று தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தியாமல் பேசிய பேதுருவை "அப்பாலே போ சாத்தானே" என்று இயேசு கடிந்துகொண்டார்.
ஆனால் இயேவோ தேவனுக்கு சமமாக இருந்தும்கூட தன்னை ஒருபோதும் தான் தேவன் என்று கூறவில்லை மாறாக, சீஷர்களின் கால்களை கழுவி மரண பரியந்தம் தன்னை தாழ்த்தினார். இந்த பூமியில் "தன்னை உய்ர்த்துகிறவன் எவனும்
தாழ்த்தப்படுவான்" என்றும் சொல்லி சென்றார்.
சாத்தான் என்பவன் தனியாக எங்கோ இருக்கிறான் என்று எண்ணி தேடினால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
காரணம் அவன் நம்முள்ளும் இருக்கலாம் நம் அருகில் இருப்பவர்களுக்குளும் இருக்கலாம். தேசத்தின் அதிபதிக்குள்ளும் இருக்கலாம், போலீஸ்காரருக்குள் இருக்கலாம், பக்கத்து வீட்டுக்காரருக்குள் இருக்கலாம் மாம்சமாயிருக்கும் யாருக்குளும் இருக்கலாம்.
ஏசாயா 14:12ல் வரும் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி"தான் வீழ்ந்துபோன தூதன். அவன்தான் ராஜாவாகிய பெல்ஷத்சாருக்குள் புகுந்துகொண்டு தன் ஆதி கிரியையாகிய தேவனுக்கு மேலாக தன்னை உயரத்தும் செயலை செய்தான்.
இன்றும் அனேக மனுஷர்கள் தேவனுக்கு நிகராக தன்னை உயர்த்தும் செயலாம் நாம் பார்க்கிறோம் அவர்கள் எல்லோருமே அந்த லூசிபரின் ஆவியை உடையவர்களே! இவர்களின் உயர்த்துதல் எல்லாவற்றிக்கும் அடிப்படை காரணி அன்று தேவனிடம் இருந்து தள்ளபட்ட அந்த லுசிபரே!
எனவே சாத்தானின் கிரியை அழிக்க வந்த தேவ குமாரனின் மூலம் அருளப்பட்டுல் ஆவியில் பெலனடைந்து சாட்சியான வாழ்க்கையோடு, தேவையில்லாத வாக்குவாதம் செய்யாமல் பிறரை நியாயம் தீர்க்க துணியாமல், பிறருக்கும் முன்னால்
அதிகாரங்களுக்கும் முன்னால் நம்மைநாமே தரைமட்டும் தாழ்த்தி சாத்தானின் கிரியையை அழிக்க கடவோம்
இயேசுவை போல் தாழ்மை இயேசுவைப்போல் பிதாவுக்கு கீழ்ப்படிதல் இயேசு காட்டிய வழி, இவையையே அன்றி "நம் பெலத்தினாலோ பராக்கிரமத்தினாலோ வேறெதனாலும் சத்துருவின் கிரியைகளை அழிக்க முடியாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)