"கிறிஸ்த்துவை குறித்த சாட்சியுடன் தேவனின் கற்பனையை கைக்கொள்ளுகிறவர்களே" ஸ்திரியின் உண்மையான சந்ததி. அவர்களே சத்துருவை ஜெயம்கொள்ள முடியும். சத்துருவும் அவர்களோடு மட்டும்தான் யுத்தம் செய்வான்.
மற்றவர்கள் எல்லாமே டம்மிகள்! வஞ்சிக்கும் கூட்டங்கள்!
அதாவது ஒருபக்கம் மட்டும் உருவம் தெரியும் நாணயம் செல்லாது! அதுபோல் ஒரு புறமான செய்திகளை போதித்து மறுபுறத்தை மறைப்பவர்கள் போலிகள்! பாஸ்டர்கள் / பிரசங்கிகள் / ரெவரண்ட்கள் என்ற உயர்த்த ஸ்தானத்தில் இருந்து உலக இன்பங்களை அனுபவிக்கும் அவர்கள் மாறுபாடான சந்ததியார் எனபதும் சத்துருக்கு நன்றாக தெரியும். எனவே அவர்களோடு யுத்தம் செய்து சத்துரு தன் நேரத்தை வீணடிப்பதில்லை!
எனவே அன்பானவர்களே, வஞ்சிக்கும் கூட்டத்தாரின் வஞ்சனையில் வீழ்ந்து விடாமல், இயேசுவின் சாட்சியோடு தேவனின் வார்த்தைகள கைகொண்டு வாழ்ந்து சத்துருவை ஜெயம்கொள்ளுங்கள். .
-- Edited by SUNDAR on Wednesday 3rd of September 2014 10:52:44 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)