ஏதொன்றை காரணம் காட்டியும் எந்த சாக்குபோக்கை தேவனின் வார்த்தைகள் நிராகரிக்கப்படுவதை / உதாசீனப்படுத்தபடுவதை தேவன் ஒருநாளும் விரும்புவதில்லை.
தேவனோ/ தேவ குமாரனோ எங்குமே தான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளை கட்டளைகளை கற்பனைகளை கைகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறவில்லை
அதற்க்கு மாறாக
மத்தேயு 5:18வானமும்பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 21:33வானமும்பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
என்றே சொல்லபட்டிருக்கிறது. அத்தோடு கடைசி பகுதிவரை "அவர் கற்பனைகளின் படி செய்கிறவன் பாக்கியவான்" என்றே வேதம் சொல்கிறது.
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
அத்தோடு வெளிப்படுத்தின விசேஷத்தில் ஒவ்வொரு சபைக்கு கொடுக்கப்படும் செய்தியிலும் "உன் கிரியையை அறிந்திருக்கிறேன்" என்று சொல்ல ஆவியானவர் தவறவில்லை.
வெளி 2:19உன்கிரியைகளையும் உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்தகிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
வெளி 3:1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன்கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்
வெளி 3:15உன்கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
இப்படி ஒவ்வொருவருடைய கிரியையையும் தேவன் கண்காணிக்கும் பட்சத்தில், கிரியை அவசியமே இல்லை, நாம் தேவ வார்த்தைகளை கைகொள்ள
வேண்டிய அவசியம் இல்லை என்ற போதனைகள் எல்லாமே கொஞ்சமாவது நன்னெறியுடன் வாழமுற்படும் ஜனங்களை கெடுக்க சாத்தான் நடத்தும் சதி என்றே நான் கூறுவேன்.
"உம்மேல் அன்பாயிருக்கிறோம்" என்று சொல்பவர்களுக்கு அவர் விதிக்கும் கட்டளை
ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,
என்பதே!
எனவே வேதத்தில் எங்குமே மாயாஜாலம் சொல்லபட வில்லை கட்டாயம் அவர் வார்த்தைகளை கைகொள்ள பிரயாசம் எடுக்க வேண்டும்.
சத்தியத்தின்படி நடக்க விருப்பம் இல்லாத மாய்மாலக்காரர்களே இயேசுவை நினைத்தால் எல்லாம் மாயாஜாலம் போல் நடக்கும் என்று மாய்மால கருத்துக்களை கூறுகிறார்கள். நாங்கள் இயேசுமேல் அன்பாயிருக்கிறோம் ஆனால் அவர் வார்த்தையை கைகொள்ள பிரயாசம் எடுக்க மாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள்.
நேரடியாக சொல்லபட்டுள்ள வசனங்களை ஒதுக்கிவிட்டு சுற்றி வளைத்து பொருள் எடுத்து "அங்கே இப்படி சொல்கிறது இங்கே இப்படி சொல்கிறது எனவே நாம் இயேசுவை விசுவாசித்தால மட்டும் போதும் அவர் கற்பனைகளை கைகொண்டு நடக்க பிரயாசம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று சொல்வோரை பார்த்து தேவன் கடிந்துகொள்ளும் வார்த்தை இதோ :
மல்கியா 2:9நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
அவர்களின் வார்த்தைகளால் யாரும் ஏமாந்து போகாதீர்கள்!
தேவன் நமக்கென்று பாதுகாத்து தந்திருக்கும் பொக்கிஷமாகிய வேத வார்த்தைகள் ஒவ்வொன்றுமே தனி தனி வல்லமையுள்ளவை. அவற்றை கைகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லும் அநேக மாய்மாலர்கள் கிறிஸ்த்தவத்தில் ஊடுருவி இருப்பது கண்டு என் மனது அதிக வேதனை அடைகிறது. அப்படிபட்ட கூட்டங்களுக்கு என்னத்தை எழுதுவது என்று புரியாமல் விலகியிருக்க விரும்புகிறேன்.
ஆகினும் இவ்வாறு ஜனங்களை தடம் புரள செய்யும் மனுஷரே!