இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் யாரெல்லாம் இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்பவர்கள்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
யார் யாரெல்லாம் இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்பவர்கள்?
Permalink  
 


1. உழியம் செய்தாலும் / உலக வேலை செய்தாலும் தேவனுக்கு பயப்படும் பயத்தோடு செய்யாமல் பொய்/ பித்தலாட்டம்/ ஏமாற்று வேலை/ லஞ்சம்/ பொய் கணக்கு /  வருமான வரி ஏய்ப்பு போன்ற காரியகளை செய்து பணம் ஈட்டுபவர்கள் உலக பொருளுக்கு ஊழியம் செய்பவர்களே. 

 

2. . உண்மையாக நேர்மையாக உழைத்து சம்பாதித்தாலும் பணம் பணம் என்று திருப்தியில்லாமல் அலைந்து சம்பாதிப்பதிலே குறியாக  இருப்போர்கள் அதாவது சில என்னதான் வசதி இருந்தாலும் வெளிநாடுபோய் பணம் அல்ல நினைக்கிறார்கள் அவர்களும்  உலக பொருளுக்கு ஊழியம் செய்பவர்களே. 

 
3. நேர்மையாய்  சம்பாதித்து சேர்த்த பணத்தைகூட அவசர  தேவையில் இருக்கும் கொடுக்க தகுந்தோருக்கு  கொடுத்து உதவி செய்யாமல், தனக்கென்று பிடித்து வைத்து கொள்வோரும் உலக பொருளுக்கு முதலிடம் கொடுப்போர்களே.
 
4. இவ்வுலகத்தில் தனக்கு இருக்கும் பொருள் சொத்து சுகம் எதையும் எந்நேரமும் தேவனுக்காக மனதார இழக்க துணியாதவர்களும் உலக பொருளுக்கு முதலிடம் கொடுப்பவர்களே. 
 
5. தேவன்பேரில் தன முழு நம்பிக்கையை வைக்காமல் உலகத்தில் தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் பொருட்கள் மேல் நம்பிக்கை வைப்பவர்களும் உலக பொருளுக்கு முதலிடம் கொடுப்பவர்களே.
 
உலகத்தில் நாம் வைத்திருக்கும் எந்த பொருளுமே இந்த உலகத்தினால் உண்டானது. அதில் எந்த பொருளின் மேலும் நம் நம்பிக்கை வைக்கவோ அல்லது "இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது" என்ற நிலையிலோ நாம் இருக்கவே கூடாது. அவ்வாறு இருந்தால் நாம் உலக பொருளால் பிடிக்கபட்டுள்ளோம் என்று பொருள் படும்.
 
 I யோவான் 2:15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
  
 


-- Edited by SUNDAR on Wednesday 1st of October 2014 12:12:10 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard