சில நல்ல ஆவிக்குரிய கிறிஸ்த்தவர்கள் கூட சில காரியங்களில் போதுமான உணர்வில்லாமல் உலக பிரகாரமாக சிந்தித்து தன்னை துன்புறுத்தியவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணி வெறியோடு நகர்வதை பார்த்தது மனது நோகிறது.
எங்கள் வீட்டின் பக்கத்தில் வசித்த அனேக கூட்டங்களில் பங்கெடுக்கும் ஆவிக்குரிய ஒரு பெண்மணி, தன பக்கத்து வீட்டு பெண்ணோடு சிறிய தகராறு ஏற்ப்பட்ட பொது "நான் இப்பொழுதே உனக்கு தண்டனை கொடுக்கும்படி கர்த்தரிடம் ஜெபிக்க போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு வீட்டின் உள்ளேபோய் முழங்காலிட்டு "அந்த பெண்ணை அப்படி பண்ணும்/ இப்படி தண்டியும்" என்று சொல்லி ஜெபித்தாகளாம்.
ஆனால் நம் ஆண்டவரிடம் அவரின் சீஷர்கள் வானத்தில் இருந்து அக்கினி இறங்க பண்ணலாமா என்று கேட்டபோது ஆண்டவர் சொன்ன பதில் என்ன?
லூக்கா 9:53. அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
54. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55. அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி
56. மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்.
ஆம! நம் ஆண்டவர் யாரையும் தண்டிக்க வரவில்லை பாவியை கூட இரட்சிக்கவே வந்தார். அவருடைய சாயலை தரித்திருக்கும் நாம் எப்படி பிறரை தண்டிக்கவோ அல்லது தண்டனை வாங்கி கொடுக்கவோ முயலலாம்?
அடுத்து தண்டனை பெறுவதால் ஒரு தவறானவன் திருந்திவிடுவானா?
கர்த்தர் விலக்கிய கனியை புசித்த ஆதாம்/ஏவாள் கர்த்தரால் பட்டபோது எங்குமே தான் செய்தது தவறு என்று சொல்லி கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை.
அதேபோல்,
ஆதி சகோதரர்களாகிய ஆபேலை கொன்ற காயீன்.
கர்த்தரால் சபிக்கப்படும்போது அவன் தான் செய்த தவறை சற்றும் உணராமல் தனக்கு அளிக்கபட்ட தணடனையை மட்டுமே குறைக்க சொல்லி தேவனிடம் வேண்டுவதை பார்க்கலாம்.
இப்படி பழைய ஏற்பாடு முழுவத்துமே தப்பு செய்தவனுக்கு தண்டனை
லேவியராகமம் 24:20 நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும். உபாகமம் 19:21உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
என்று கடும் தண்டனை கொடுத்தும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. முடிவு என்ன?
சங்கீதம் 14:3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
சங்கீதம் 53:3அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
எனவேதான் அந்த பிரயோசனமற்ற வழியை புறம்பே தள்ளி, கர்த்தரே இறங்கி வந்து நமக்காக மரித்தார். தன வாக்கை தானே மாற்றினார்.
மத் 5: 38.கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்;
ஆனால் நாமோ தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடுமையான நிலையில்/ தவறான ஒரு நிலையில் இன்னும் இருந்துகொண்டு நானும் பரலோக பிதாவின் புத்திரர் என்று சொல்லிக்கொண்டால் அது எப்படி ஏற்புடையதாகும்?
எனவே அன்பானவர்களே உணர்வடையுங்கள் கசப்பையும், பகையையும் வைராக்கியத்தையும் முற்றிலும் அழியுங்கள்!
எபேசியர் 4:31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)