வெறி நாய் கடித்து உடம்பு முழுவதும் விஷம் ஏறியவன், விஷம் முற்றிய பிறகு நாய்போல் குறைத்து யாரை கடித்தாலும் அவனுக்கும் விஷம் ஏறிவிடும். எனவே விஷம் தலைக்கேறிய ஒருவரை காப்பாற்ற முடியாது என்று நிச்சயமாக தெரிந்தால் அநேகர் துன்பபடுவதை தடுக்க அவனை கொன்றுவிடுவது சிறந்தது.
அதேபோல்தான் பாவ விஷத்துக்கு கிறிஸ்த்துவின் பலியில்லாத பழைய ஏற்பாட்டு காலத்தில் அதிக பாவம் செய்து விஷத்தால் நிறைந்திருந்த கானானியர், ஏத்தியர், எமோரியர் போன்றவர்களை தேவன் முற்றிலும் அழிக்க வேண்டிய நிலை உண்டானது.
அதிக பாவ விஷம் தலைக்கு ஏறியிருந்த அவர்கள் யாருடன் தங்கினாலும் அவர்கள் விஷம் அடுத்தவரை தொற்றிக்கொள்ளும் எனவே தேவன் வேறு வழியில்லாமல் அவர்களை அழித்தொழித்தார்.
ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு சர்வலோக பாவத்துக்கு மரித்தபின்னரோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
ஆம்! பாவம் என்னும் கொடிய விஷத்துக்கு கிறிஸ்த்துவின் இரத்தம் என்ற விசேஷ மருந்து அருளப்பட்டது. அதன் பிறகு என்ன கொடிய
பாவம் செய்தவனுக்கும் மன்னிப்பு அருளும் நிலை உருவானது.
21. அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். 22. அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)