இன்று காலை நான் ஒரு சாலையை குறுக்காக கடந்து வந்த போது வேகமாக வந்த பைக்காரர் ஒருவர் "ஏய் நாயே" என்று திட்டிவிட்டு போகிறார். நான் திரும்பி பார்க்கும் முன்னர் அவர் நீண்ட தூரம் போய்விட்டார்.
நான் சுலபமாக சரியாகத்தான் சாலையை கடந்தேன் அவர் என்ன நினைத்து திட்டினான் என்பது தெரியவில்லை. எனக்கு கொஞ்சம் மன கஷ்டமாக இருந்தாலும், அவர் எனது நன்மைக்குதான் சொல்கிறார் இனி இன்னும் நிதானமாக கொஞ்சம் நிற்று சாலையை கடக்க வேண்டும் என்று எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.
என்னை திட்டிவிட்டு சென்றவரின் நிலைமையை சற்று யோசித்தால் அவர் என்னை எச்சரிக்க : "ஹலோ பார்த்து போ" "ஏய் பார்த்து ரோட்டை கிராஸ் பண்ணு" "ஏய் நிதானமா போப்பா" "பிரதர் பார்த்து போங்க" "சார் பார்த்து கிராஸ் பண்ணுங்க"
போன்ற எத்தனையோ வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க முடியும் ஆனால அவை எல்லாவற்றையும் விட்டு விட்டு "நாயே" என்றொரு வார்த்தையை தேர்வு செய்ய காரணம் என்ன? தெரியவில்லை. ஒருவேளை அவர் கண்ணுக்கு நான் நாலுகால் நாயாக தெரிந்தேனோ என்னவோ!
ஆனால் முக்கியமாக, வேகமாக செல்லும் அவரை நான் ஓடிபோய் பிடித்து ஏனென்று கேட்க முடியாது, அவரை யார் என்று என்னால் அடையாளம் காணவும் முடியாது என்ற குருட்டு தைரியம் நிச்சயம் ஒரு காரணம்தான்.
இப்படி தன்னை யாரும் அடையாளம் காண முடியாது என்று எண்ணி தாகாத காரியங்களை துணிந்து செய்யும் இவர்கள் போன்றவர்கள் தேவன் தன்னைவிட பாஸ்டாக வந்து ஒரு நொடியில் தன்னை சாய்த்துவிட முடியும் என்பதையும் தேவன் எல்லா நேரங்களிலும் தம்மை கண்ணோக்குகிறார் என்பதையும் மறந்தே போகிறார்கள்.
எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
இப்படி அடுத்தவரை சுலபமாக காயப்படுத்தும் இவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனைகள் வரும்போது எல்லோரிடமும் சென்று புலம்பி இரக்கத்தை தேட நினைக்கிறார்கள் ஆனாலும் இவர்களுக்கு சகாயம் எப்படி கிடைக்கும்?
இவற்றை யோசித்த நான் "ஆண்டவரே அவனுக்கு எந்த துன்பமும் நேரிடக்கூடாது என்று பாரத்தோடு ஜெபித்துவிட்டு" கடந்து வந்தேன்.
"வாய் இருக்கிறது" "வார்த்தை இருக்கிறது" "பெலன் இருக்கிறது" என்பதற்காக அதை எல்லோர் மேலும் பிரயோகித்துவிட கூடாது. பிறர் மனதை நோகடிக்கும்போது ஒருவேளை அவர் தேவனுக்கேற்ற நல்லவராக இருந்தால் அவருக்காக தேவன் அங்கே வழக்காட வந்து நிற்ப்பார் என்பதை ஒருநாளும் மறந்துபோக கூடாது.
ஏனெனில் "உன்னோடுவழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி" என்று தேவன் சொல்கிறார்.
நாமெல்லாம் அனேக நேரங்களில் தவறுகிறோம். நாம் எல்லா நேரங்களிலும் எல்லா செயல்களிலும் சரியாக செயல்பட்டுவிட முடியாது. நாமும் என்றாவது ஒருநாள் தவறுவோம். அப்பொழுது நாம் வீசிய வார்த்தை பத்து மடங்கு பலத்துடன் ஒருநாள் நம்மை நோக்கி திரும்ப வரும் அப்பொழுது நாம் யாரிடம் சகாயம் தேடினாலும் கிடைக்கவே கிடைக்காது என்பதை மறந்துபோக வேண்டாம்.
எனவே எல்லோரிடமும் அன்பாய் இருப்போம்! அடுத்தவர் மனதை நோகடிக்காமல் செயல்படுவோம்!