இரண்டு வருடமாக ஒரு தெரு நாய்க்கு நான் சோறு போட்டு வளர்த்தேன். இரவு பதினோரு மணியானாலும் அதற்க்கு சாப்பாடு போடாமல் என்னால் தூங்க முடியாது.
மிகவும் அப்பாவியான அந்த நாய் எதற்கும் முந்திக்கொண்டு நிற்காது. யாரோடும் போட்டி போட்டு திங்க வராது. பிற நாயின் குட்டியோடு கூட தன குட்டிபோல விளையாடும். எல்லோரையும் நண்பனாகவே பாவிக்கும். எந்த பிற நாயிடமும் சண்டைக்கு போக முற்படாது.
அந்த ஏரியாவில் உள்ள ஒரு ஸ்கூல் பிள்ளையை எதோ ஒரு நாய் கடித்துவிட்டதாக புகார் அனுப்பபட்டு, நாய் பிடிக்க வந்த நகராட்சி நாய் பிடிப்பவர்கள் வந்தவுடன் எனக்கு மிகவும் பிடித்த குணாதிசயங்கள் கொண்ட அந்த நாயை நேற்று சுலபமாக பிடித்து கொண்டு போய்விட்டார்களாம். ஆனால் அங்கே அலையும் அனேக கட்டுமிராண்டி நாய்களோ. இந்த நாயை பிடிக்கும்போது போட்ட சப்தத்தில் உஷாராக ஓடி ஒளிந்து கொண்டுவிட்டன.
ஒரு நல்ல நாயை கூட விட்டு வைக்காத உலகம் இது. ஆனால் துஷ்ட நாய்களோ சுலபமாக தப்பிவிடும் எங்காவது ஓடி ஒழிந்துவிடும்.
ஒருவேளை அந்த நாய் எங்கள் வீட்டுக்குள் இருக்கும் இடத்தில் படுத்து கிடந்திருந்தால் அது பிடிபட்டிருக்காது.
மனுஷர்களுக்கும் இதேபோல்தான்
இந்த பாவ உலகத்தில் தேவனின் துணையின்றி நல்லவனாக இருக்க முயன்றால் அவர் அதிகமாக எமாற்றப்படலாம் அநேகரால் வஞ்சிக்கபடலாம் பல்வேறு பழி சுமத்தப்படலாம் ஆனால் வஞ்சகரும் லஞ்சகர்களும், ஏமாற்றுபவரும் உஷார் பேர்வழிகளும் இங்கு உல்லாசமாக வாழலாம்.
ஏனென்றால் இந்த உலகம் முழுவதும் சத்துருவின் பிடியில் பொல்லாங்குக்குள் கிடக்கிறது.
I யோவான் 5:19 உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
எனவே அன்பானவர்களே நீங்கள் நல்லவராக வாழ விரும்பினால் நமக்காக ஜீவனை கொடுத்த ஆண்டவரை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்
மத்தேயு 28:20இதோ, உலகத்தின்முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
இவ்வாறு வாக்குகொடுத்துள்ளர்.
அவர் பிள்ளையாக நீங்கள் இருக்கும்போது சத்துரு உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது
I யோவான் 4:4ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
மற்றபடி ஆண்டவர் துணையின்றி நல்லவனாக வாழ விரும்பும் எவரையும் இந்த உலகம் விடுவதில்லை அனேக துன்பத்துக்குள் கொண்டுவந்து அலைக்கழிக்கும்.
"நான் அவனுக்கு நல்லதையே செய்யபோனேன் ஆனால் எனக்கு இத்தனை துன்பங்கள் வந்தது இனி நான் ஏன் நல்லது செய்ய வேண்டும்" என்று புலம்பும் அநேகரை நாம் பார்த்திருக்கிறோம்
ஆண்டவரின் பாதுகாப்பில் இல்லாத எந்த ஒரு நல்லவனையும் இந்த உலகம் ஓர்நாளில் கெட்டவனாக மாற்றியே தீரும்! அல்லது தெரு நாயை பிடித்து கொடுண்டுபோய் அழிப்பதுபோல் அழித்துவிடும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)