இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்த பூமியிலே, மிக சிறந்தது, உயர்ந்தது என்ன ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
இந்த பூமியிலே, மிக சிறந்தது, உயர்ந்தது என்ன ?
Permalink  
 


பணக்காரன், என்ற பட்டமா ?

தீர்க்கதரிசி, என்ற பட்டமா ?

பாஸ்டர், என்ற பட்டமா ?

ஞானி, அறிவாளி என்ற பட்டமா?

படித்தவன், என்ற பட்டமா ?

பேய்கள், பிசாசுகளை, துரத்துகின்றவன் என்ற பட்டமா ?

அற்புதம், அதிசயம், செய்கின்றவன் என்ற பட்டமா ? 

 

இவைகள், எதுவும் இந்த பூமியில் சிறந்ததும் அல்ல, உயர்ந்ததும் அல்ல ? 

 

அப்போ, எது தான் இந்த பூமியில்  சிறந்தது, உயர்ந்தது ?

 

நற்பெயர், ஆம் நற்பெயரே ! எல்லாவற்றையும் விட சிறந்ததும், உயர்ந்ததும் ஆகும், நான் சொல்லும் நற்பெயர் மனிதர்களிடம் அல்ல சர்வ வல்லமையுள்ள தேவனிடத்தில் வாங்க சொல்லும் நற்பெயர் ஆகும்.

 

எடுத்துகாட்டாக !

 

யோபு !

ஊத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

யோபு 1 :8 

 

மோசே !

என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்.

எண் 12 :7 

 

தாவீது !

தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; 

அப் 13 :22 

 

தானியேல் ! 

நீ மிகவும் பிரியமானவன். 

தானி 9 :23 

 

இப்பொழுது சொல்லுங்கள், சர்வ வல்லையுள்ள தேவனிடத்தில் இருந்து வாங்கும், நற்பெயர்க்கு முன்பாக இந்த பூமியில் எதாவது சிறந்ததும், உயர்ந்ததும் உண்டா ?

 

தேவனிடம் நற்பெயர் எடுக்க நம்மால் முடியுமா ? என்று நம்மை, நாமே ஒடுக்கிகொள்ளாமல்"

 

"விசுவாசிக்கின்றவனுக்கு" எல்லாம் கூடும்,  என்று தேவனின் அம்சம் (இயேசு) சொன்னதை நாம்  விசுவாசித்து."

 

தேவனுடைய வார்த்தைக்கும், சித்தத்திற்கும், முழுமையாக நம்மை ஒப்புகொடுப்போம் !

கீழ்ப்படிவோம் !

நடப்போம் !

தேவனிடத்தில் நற்பெயரை 

எடுப்போம் !  

 

சேனைகளின் கர்த்தராகிய தேவனே! நாங்கள் முயற்சிக்கிறோம், உம்முடைய ஆவியானவரே எங்களை வெற்றிசிறக்க பண்ண வேண்டும்.................



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard