தாகம் எடுக்கின்றபோது தான், தண்ணீரோட அருமை தெரியும் என்பார்கள், அதேபோல தான், இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கையும்.
பண கஷ்டம், பிரச்சனைகள், துன்பங்கள் வரும்போது தான் கர்த்தரோட" அருமை பலருக்கு தெரிகின்றது.
பசி எடுக்கின்றவனுக்கு, எது கொடுத்தாலும் சாப்பிடுவான்,
சாப்பிட்டு திருப்தியாய் இருக்கின்றவனுக்கு வடை, பாயாசத்தோடு சாப்பாடு கொடுத்தாலும், அதை விரும்பமாட்டான், காரணம் ? அவன் திருப்தியாய் இருக்கின்றான்.
திருப்தியடைந்தவன் தேன் கூட்டையும் மிதிப்பான்: பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.
நீதி 27 :7
அதேபோல தான், இன்றைய பல கிறிஸ்தவர்களும்"
கவலை, பணம் கஷ்டம் என்றால் ஜெபம் என்ன, வேத வாசிப்பு என்ன, எங்க கூட்டம் நடந்தாலும், அல்லேலுயா, ஸ்தோத்திரம், ஆமேன் தான்.
வாழ்க்கையில், எந்த பிரச்சனைகளும் இல்லாமல், திருப்தியாக இருந்தால்
கர்த்தர், வேதம், ஜெபம் எல்லாம் பெருசாக தெரியாது, ஏன் கர்த்தர் ஞாபகம் கூட வராது.
அதினால் தான், நம் தேவனாகிய கர்த்தர்" எந்த ஒரு மனிதன் தன் மேல் தாகமாய், பசியாய், வாஞ்சையாய் இருக்கின்றானோ, தேடுகின்றானோ, அவனை நான் நிரப்புவேன், திருப்தியாக்குவேன் என்று சொல்கின்றார்.
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
உங்களை நீங்களே நிரப்பி கொண்டு, நான் பைபில் கிளாஸ் முடிச்சிட்டேன், எனக்கு எல்லாம் தெரியும், மற்றவர்கள் ஆராய்ச்சி பண்ணி எழுதினதை படிச்சிட்டு, நான் கத்துக்கிட்டேன், தேரிட்டேன், இது தான் உண்மை என்றால்.
கர்த்தர் எப்படி ஐயா, உங்களை நிரப்ப முடியும் ? தெரியப்படுத்த முடியும் ?
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல்.
பிலி 3 :12
ஆராய்ச்சி பண்ணி, தேவனை ஒருக்காலமும், கண்டுபிடிக்க
முடியாது !
ஆவியானவராலே! தேவனையும், அவர் வார்த்தையும், கண்டுபிடிக்கலாம்"
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
1கொரி 2 :10
என்ற சத்தியத்தை, தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)