1. தேவனின் திட்டம் என்ன? அவர் மனுஷனிடம் என்ன எதிர்பார்க்கிறார்? சரியான சத்தியம் எது என்பது குறித்து........
அனேக கிறிஸ்த்தவர்களுக்கு தெரியாது! தனக்கு தெரியாது என்பதே அவர்களுக்கே தெரியாது.
இப்படிபட்டவர்களிடம் விவாதிப்பது வீண். இவர்களுக்கு என்னதான் எடுத்து சொன்னாலும் அவர்களுக்கு தெரியாது என்பதை அவர்கள் ஒத்துகொள்ள போவது இல்லை. ஏனெனில் இவர்களுக்கு தெரியாது என்பதே இவர்களுக்கு தெரியாது எனவே இப்படிப்பட்ட புத்தியற்ற விசுவாசிகளிடம் விவாதிப்பதில் இருந்து விலகி இருப்பது நல்லது.
2. தேவனின் திட்டம் என்ன? அவர் மனுஷனிடம் என்ன எதிர்பார்க்கிறார்? சரியான சத்தியம் எது? என்பது குறித்து........
அனேக கிறிஸ்த்தவர்களுக்கு தெரியாது! தங்களுக்கு தெரியாது என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் அவர்கள் உண்மையை அறியவேண்டும் என்ற வாஞ்சை எதுவும் இல்லாமல் ஏனோ தானோ என்றொரு கிறிஸ்த்தவ வாழ்க்கை வாழ்பவர்கள்.
இப்படிபட்டவர்களை வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியாது வேண்டும் என்று சேர்த்துகொள்ளவும் முடியாது. முடிந்தவரை புத்தி சொல்லி சரியான சத்தியத்தை அறிந்து கொள்வதன அவசியத்தை அவர்களுக்கு புரியவைப்பது அவசியம்.
3. தேவனின் திட்டம் என்ன? அவர் மனுஷனிடம் என்ன எதிர்பார்க்கிறார்? சரியான சத்தியம் எது? என்பது குறித்து........
அனேக கிறிஸ்த்தவர்களுக்கு தெரியாது! தங்களுக்கு தெரியாது என்பது அவர்களுக்கே தெரியும். எனவே சரியான உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற வாஞ்சையுடன் தேவனை தேடுபவர்கள். தேவ மனுஷர்களை நாடுபவர்கள்.
இவர்களுக்கு சரியான சத்தியத்தை வசன ஆதாரத்தோடு எடுத்து சொல்ல வேண்டியது மிக மிக அவசியம்.
4. தேவனின் திட்டம் என்ன? அவர் மனுஷனிடம் என்ன எதிர்பார்க்கிறார்? சரியான சத்தியம் எது? என்பது குறித்து.....
சில கிறிஸ்த்தவர்களுக்கு சரியாக தெரியும்! ஆனால் தெரியும் என்பது அவர்களுக்கு தெரியாது. அப்படிப்பட்ட கிறிஸ்த்தவர்களை ஊக்குவித்து அவர்கள் அறிந்துள்ள சத்தியம் சரிதான் என்பதை வேத வசனத்தின் அடிப்படையில் விளக்கி சத்தியத்தின் பாதையில் தடையின்றி நடக்க நாம் அவர்களுக்கு உதவி செய்தல் அவசியம்.
5. தேவனின் திட்டம் என்ன? அவர் மனுஷனிடம் என்ன எதிர்பார்க்கிறார்? சரியான சத்தியம் எது? என்பது குறித்து.....
.
ஒரு சில கிறிஸ்த்தவர்களுக்கு மிக சரியாக தெரியும். தெரியும் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அதை பிரயாசம் எடுத்து செய்ய விருப்பமீதும் இல்லாமல் உலகத்தோடு ஒத்து ஓடிக்கொண்டு இருப்பவர்கள்.
இவர்களையும் நாம் ஒன்றும் செய்ய முடியாது! இவர்கள் சரியான சத்தியத்தை அறிந்தும் அதை பின்பற்ற மனதில்லாதவர்கள். ஓரிருமுறை எச்சரித்துவிட்டு அவர்களை விட்டு விலகுவதே சிறந்தது.
6. தேவனின் திட்டம் என்ன? அவர் மனுஷனிடம் என்ன எதிர்பார்க்கிறார்? சரியான சத்தியம் எது? என்பது குறித்து.....
ஒரு சில கிறிஸ்த்தவர்களுக்கு மிக சரியாக தெரியும். தெரியும் என்பது அவர்களுக்கும் தெரியும். எனவே உலகத்தின் பின்னுக்கு தள்ளிவிட்டு தாங்கள் அறிந்துள்ள சத்தியத்தின்படி வாழ அனுதினம் பிரயாசம் எடுப்பவர்கள்.
இவர்கள் கனியின் மூலம் அவர்களை நாம் அறிய முடியும். அப்படிபட்ட கிறிஸ்த்தவர்களை ஆராய்ந்து கண்டறிந்து அவர்கள் வழிகாட்டல்களை நாமும் பின்பற்றுதல் அவசியம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)