நீ கிறிஸ்துவானஇடுக்கமான வழியில் செல்ல உனக்கு முதலில் தடையாய் இருப்பது உன் உலக சினேகம்,உல்லாசமானவாழ்கை,ஆடம்பரமான செலவுசெய்யும் மனநிலைகள் ,இவ்வுலகத்தின் மேன்மை புகழ்,சிற்றின்பம்,களியாட்டுகள்(சினிமா,கச்சேரி,நாடகம்,நடனம்,பாப் இசை) ஆனால் உன் ஆவியில் தேவனுக்கு பிரியமாய் வாழ ஆசை ஆனால்இந்த உலகில் உன் மாம்சத்தின்படியே நீ வாழ்ந்ததால் ஆவிக்குரிய வாஞ்ச இருந்தும் உன்னால்இடுக்கமான வழியை தெரிந்திருந்தும் அதற்குள் பிரவேசிக்கமுடியாமல் உன் இருதயம் கடினமாகிறது.ஆனால் 1பேதுரு 1:4ன்படிஅவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். தேவனுடைய வசனத்தை நம்பினாலும் அதை விசுவாசித்து உன்னால் நடக்கமுடியவில்லை
அதிக உணர்ச்சிவசப்படுவதாலும்,இளகிய மனப்பாண்மைஇருந்தாலும் நெருக்கமானப்பாதையில் செல்லமுடியாது:---- மற்றும் சிலர் தேவனுடைய சிலுவைப்பாடுகளைக் கேட்டவுடன்இளகியமனதுடன் உணர்ச்சிவசப்பட்டு நானும் தேவனுக்காய் வாழுவேன் அனுதினமும் சிலுவையை சுமப்பேன்என்று தீர்மாணத்தை எடுத்து வசனத்தின்படி வாழ முயற்சிப்பார்கள் ஆனால் சில நேரங்களில்வரும் சூழ்நிலைகள் இப்படிப்பட்டவர்களை அனுகும் போது நன்மைக்கு பதில் தீமை வரும்போதுகாரணமில்லாத குற்றச்சாட்டுகளில் தன்னைத்தான் நியாயப்படுத்தி நான் நிரபராதி என்று வாதம்செய்து அமைதியையும்,சமாதானத்தையும் இழந்ததுமட்டுமல்லாமல் தன்னுடைய சாந்த குணத்தை இழந்துவிடுவார்கள்.எத்தனைப்பரிதாபம்!!! ஒருவன் சுய நீதியின் அஸ்திபாரத்தில் இருந்தால் கிறிச்துவுக்குள் கட்டியெழுப்பமுடியாதுஅவன் இடுக்கமான வழியின் அர்ப்பணிப்பை சுயபெலத்தின் மூலமாக முயற்சிக்க தெரிந்துக்கொண்டதின்விளைவாய் அதற்குள் அவனால் பிரவேசிக்கமுடியாது.மற்றும் அநேக சந்தேகங்களுக்குள்ளாய் அவன்சிக்குண்டு தேவனிடத்தில் பாரத்தோடு நியாயத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பான் . அநேகர்இந்த இடுக்கமான வழியில் செல்கிறவர்கள் பக்கத்தில் ஆங்காங்கே வரும் சுயபெலனான பக்கவழியில்இழுக்கப்பட்டு இடுக்கமான வழியை விட்டுவிடுகிறார்கள்.முக்கியக்காரனம் இவர்களின் அவிசுவாசமும்இதற்கு காரனமாய் அமைந்துவிடுகிறது.
அநேகர் இடுக்கமான வாசலை அடைந்தாலும் அங்கு வரும்நெருக்கமான வழியை விட்டு பக்கவழியான குருட்டுவழியைதெரிந்துக்கொள்வார்கள் இது வழியில் இருக்கும் நெருக்கத்தில் எப்படிப்போகவேண்டும் என்பதைஅறியாமல் சுய பெலத்தின்படி தன்னைத்தான் சரீரத்தை ஒடுக்கினால் போய்விடலாம் என்று தப்புக்கணக்குப்போட்டவர்கள் முடிவில் சோர்ந்துப்போய் மற்றவர்களுக்கு இடறலாய் நியாயப்பிரமானப் போதகர்கள்போல் தான் சொல்லுவது என்னவெண்பதை அறியாதுப் பேசிக்கொண்டு இதை செய் அதை செயாதே என்றுகுருட்டுவழியை பின்பற்றச் சொல்லுவார்கள் ,முடிவில் இந்தவழியில் செல்லுகிறவர்கள் தான்நெருக்கமான வழியில் செல்லுவதாக தன்னைத்தான் வஞ்சித்துக் கொள்வார்கள் என்றைக்கும் தேவனுடையவழி நெருக்கம் நிறைந்ததுதான் ஆனால் அந்த வழியில் சமாதானமும்,ஜீவனில் வளர்ச்சியையும்உணரமுடியும் இதை உணராத அனைத்தும் பக்கவழியே!
தேவனிடத்தில் சந்தேகப்படுகிறவன்இவ்வழியில் செல்ல அதற்கான பெலனைப் பெறமுடியாது ஆனால் சிலர் கூறுவர் நான் தேவனிடத்தில்விசுவாசமாய்தானே இருக்கிறேன் என்பார்கள் ஆனால் அவர்கள் உணரவில்லை சந்தேகம் நாம் கிறிஸ்துவுக்குள்சந்தோசம்மாய் இருக்கும்போது சந்தேகம் வருவது இல்லை.ஆனால் பாடுகள் நிறைந்துக்கானப்படும்போதுசில நேரங்களில் தேவனுடைய பிரசன்னத்தை உணராமல் இருக்கும்போதும்,தேவனுடைய மெல்லியக் குரலைக்கேட்கமுடியாதப்போதும்,ஆவியின் உள் உணர்வை அடையாதப்போதும் நம்மில் இருக்கும் விசுவாசம்அப்போதுதான் சோதிக்கப்படும் அந்த நேரத்தில் ஒருவன் சுயமாய் சிந்திக்கும் மனப்பக்குவத்துக்குதள்ளப்படுவான் அந்த நேரம் தேவன் தனக்கு கூறின வார்த்தைகள்,பூர்வகாலத்தில் தேவன் நடத்தினவிதங்கள் சிந்தனை செய்து தேவசித்தத்தின்படி நடக்கட்டும் என்ற நீடிய பொறுமையை இழந்து,கடும் பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட சுயமாய் அநேக மனித ஞானத்துக்குள் மூழ்கி சுயதெரிந்தெடுப்புகளைநிறைவேற்றி பாடுகளில் இருந்து விடுதலை அடைவான் ஆனால் அப்போது அவன் விடுதலை அடைந்தாலும்முற்றிலுமாய் விசுவாசத்தை இழந்து சமாதானத்தை உணரமாட்டான்,கூடவே சந்தேகம் அவனை நெருக்கமானவழியை விட்டு பின்னுக்கு தள்ளி பின்வாங்க்கிப் போகச்செய்யும்.
நெருக்கமான வழியில்சில நேரம் அனுப்பப்ப்டும் கொடியப் பாடுகள் உன்னை விசுவாசத்தில் வளரவே வருகிறது என்பதைஉணர்ந்து தேவன் கையில் நம்மை ஒப்புக்கொடுத்து நாம் சும்மா இருக்கவேண்டும் அந்த நேரத்தில்நாம் கிரியை செய்து தப்புவிக்க முற்படுவோமானால் பொண்ணான விசுவாசத்தை நஸ்டப்படுத்திவிடுவோம்! சில உலக ஞானம்இப்படிக் கூறும் “ஆபத்தில் உனக்கு கிடைக்கும் சில கற்களும்,மன்னும்,உனக்கு ஆபத்தில்இருந்து விடுவிக்கும்” என்பதே! ஆனால் தேவ ஞானம் இப்படிக்கூறும் “நீ இதில் இருந்து விடுவிக்கப்படஉன் சுயமுயற்சியின் உதவியை நாடாதே! முந்தியப் பாடுகள் போல இதுவும் ஒன்றே! அப்போது தேவன்உன்னைத் தப்புவித்து விசுவாசப்படியில் ஏற உதவினாரே!” என்று கூறும். இந்த நெருக்கமானவழியில் பொறுமையோடு ஓடாமல் அவசரமாய் ஓடுவது மிக ஆபத்து இது எதைக் காட்டுகிறது என்றால்சத்தியத்தின்படி நடப்பதாக உறுதியான நம்பிக்கையில் இருக்கும் அநேகர் தேவசித்தத்தை அறியதேவனுடைய சமுகத்தில் இருக்காமல் சத்தியத்தைப் போதிப்பதில் கண்டிப்புடனும்,வசனத்தின்படிநடப்பதில் அதீக நாட்டம் எடுப்பதுப்போல் இருப்பார்கள் ஆனால் அவர்கள் தேவனுடைய உறவை தொலைத்தவர்களாய்ஓடுவார்கள். ஊழியம், நற்கிரியைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள் ஆனால் தேவனிடத்தில்ஐக்கியம் இல்லாததால் அவர்கள் ஓட்டம் கொஞ்சகாலத்தில் கிருபையின் பெலனை இழந்து இந்த நெருக்கமானவழியை விட்டு விலகி சிற்றின்ப சேற்றினில் வழுகி விழுவார்கள்.அவர்கள் தன்னை நியாயப்படுத்தமுடியாதபடிதன்னைத்தான் குற்றப்படுத்திக்கொண்டு இதற்கு காரனத்தை அறியாமல் தடுமாறுவார்கள் அவர்கள்தன் தவறை உணரவெகுகாலம் பிடிக்கும், அதற்குள் சாத்தான் அப்படிப்பட்டவர்கள் கழுத்தில்நுகத்தை வைத்து அடிமைப்படுத்திவிடுவான்.
சகோதரனே நீ நினைப்பதுப்போல இந்த நெருக்கமான வழி இலகுவானதுஅல்ல ஆனால் நீ சீஷன் என்கிற தகுதியில் கிறிஸ்துவின் அஸ்திபாரமான...தன்மைகளாவன:- பாடுகள்மற்றும் உபத்திரவத்திலும் கிறிஸ்துவின் மாதிரியை( அடிச்சுவடியை) பின்பற்றுதல்,மற்றும்கிறிச்துவின் சுபாவத்தை வெளிப்படித்தி அவருடைய அச்சுஅடையாளத்தை தன் சரீரத்தில் தரித்துக்கொள்ளுதலைப்பந்தையப்பொருளாய் தீர்மானித்தல், மற்றும் நித்திய ஜீவனுக்கேற்ற உணர்வைப் பெற்று இவ்வுலகத்தின்அழிந்துப்போகும் பொருட்கள் மேலும், உறவுகள் மேலும் மாயையான வழிமுறைகள் மேலும் மாம்சீகஉணர்வுக்குள் நிலைகொள்ளாதபடி தன் இருதயத்தை நித்திய குடியிருப்புமேல் வைத்து நடப்பதும்,சரீரமாகிய சபையில் இசைவாய் தலையான கிறிஸ்துவுக்கு கீழ்படியும் அங்கமாய் நடப்பதும்,பிரதிபலன்பாராது தேவசித்தம் செய்வதும் (கிறிஸ்துவுக்குள் கட்டுண்ட அனுபவம் அதாவது நம்மை நாம்நடத்தாமல் அவரே நமக்குள் சிந்தையை உருவாக்கி விருப்பத்தையும் கொடுத்து நம்மை செயல்படச்செய்வது ,இதில் நம்முடைய சுயத்துக்கு எவ்வளவேனும் பங்கு இல்லை). இன்றய நாளில் நெருக்கமான வழியில் அநேகர் அவசரப்பட்டப்போதுசந்தேகத்துக்குள் விழும்படியான சோதனைகளுக்குள் விழுகிறார்கள் ஆனால் அப்போது உடனே தன்தவறை உணர தேவன் சில அடையாளங்களைக் கொடுத்து உணர்த்துவார் அப்போது ஒருவேளை அவர்கள் உணரவேண்டுமானால்அதிகமான விலைக்கிரயம் கொடுக்கவேண்டியதுவரும் அதில் மிக முக்கியமானது தன்னுடைய நல்லப்பெயரை இழக்கத்தக்கதாக தன்னை தாழ்த்தவேண்டியது வரும்,மற்றும் பொருள் இழப்புகளில் தாராளமாய்விட்டுக்கொடுக்கவேண்டியது வரும் இதை அவர்கள் மனமுகந்து ஒப்புக்கொள்ளும்போது சந்தேகத்தின்பள்ளத்தாக்கில் இருந்து உடனே விடுபடுவார்கள் அல்லேலூயா!!!..........இதை எழுதும் நானும்இப்படியான பள்ளத்தாக்கில் விழுந்து அதிக விலைக்கிரயம் கொடுத்திருக்கேன் ஆனால் அதைக்கொடுத்தது நான் அல்ல என்னில் இருக்கும் கிருபையே அப்படிச் செய்தது,அல்லேலூயா! தொடரும்................................
-- Edited by johnsondurai on Wednesday 27th of May 2015 06:07:55 PM