தேவனே நீர் மனதுருக்கம் உடையவர்,காலங்கள் எல்லாம் கடந்துப்போனாலும் நீரோ மாறாதவர். என் தந்தையே உம்முடைய காருண்யத்தின்படி என்னை நினைத்தருளும்,ஒவ்வொரு சூழ்நிலையும் எனக்கு விரோதமாய் இருக்கும் வேலையில் நீரே எனக்கு சகாயராய் இருந்தீர்.
நான் இப்போது மிகுந்த நெருக்கத்தில் இருக்கிறேன் மனிதர்களால் எவ்வித உதவியும் எனக்கு செய்யமுடியாது என்பதை நான் அறிவேன்,உம்முடைய இருதயத்தையே என் மனது நோக்கிக்கொண்டிருக்கிறது.
என் தந்தையே உம்முடைய பதில் ஒன்றே எனக்கு இவ்வளவு நாளும் என்னை தைரியப்படுத்தி உம்முடைய வழியில் செல்ல உதவியது ஆனால் இன்று உம்முடைய பதிலை கேட்கமுடியாதபடி என் துக்கம் என் காதுகளை அடைத்துக்கொண்டது.
நான் உம்முடைய பதிலை அறியாமுடியாவிட்டாலும் நீங்க என் தந்தை என்பதால் என்னை நீங்க பாதுகாப்பீங்க! ஆகிலும் என் வாழ்கையின் தீபம் உம்முடைய கரத்தில் இருப்பதால் அதை எப்போது அணைத்தாலும் நான் அதை மனநிறைவுடம் ஏற்றுக்கொள்கிறேன்.
என் தந்தையே! உம்முடைய ஆலோசனை என்னை எத்தனையோ கடுமையான சூழ்நிலையிலும் உம் வழியில் நடக்கும்படி வழிவகுத்தது. அதை நான் மிகுந்த நம்பிக்கையுடன் சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டு நடந்தேன் ஆனால் இன்று உம்மை மறைத்துக்கொண்டீர் என் விசுவாசம் ஒழிந்துப்போகாதபடிக்கு வேண்டிக்கொள்கிறேன்.
நான் இருளின் பள்ளத்தாக்கில் நடந்துக்கொண்டிருக்கிறேன் ஒளியான என் தந்தையே உம் வார்த்தையை விசுவாசித்து நடக்கிறேன். எல்லா சம்பவங்களையும் ஒருபோதும் உம்மை நான் முறுமுறுக்கவில்லை! காரணம் எல்லா சம்பங்களுக்கும் நானே பொறுப்பாளி! என் பாவங்களின் பிரதிகளே நான் அனுபவிக்கும் துண்பத்துக்கு காரணம்.
நீர் என்றும் நல்லவர்! நான் இப்போது உம்முடைய பாதத்தில் சரணடைகிறேன். என் வாழ்கை உம்முடைய கரத்தில் இருப்பதால் அதை நீ எப்படி வேண்டுமானாலும் திருப்பும்! இன்னும் அநேக துன்பங்களை சகிக்க பெலன் தாரும்!
எதை நான் இழந்தாலும் தேவனே உம்மையும்,உம்மை சார்ந்திருப்பதையும்,உம் கிருபையும்,துன்பங்களை சகிக்க பெலனையும்,நீர் தந்த சமாதானத்தையும்,பரிசுத்த ஆவியையும் நான் இழக்க விரும்பவில்லை அவைகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ளாதீரும்!
என்னுடைய வாழ்கை ஒரு மாயையைப் போல் மறைந்துப்போகும்! உம்முடைய நீதி என்றும் மாறாதது! அது எல்லோருக்கும் பொதுவானதே! என் தந்தையே என்னை அனைத்துக்கொள்ளும் வேலையில் நான் சந்தோசப்பட்டேன் ,இப்போது நான் தனியாக நிற்பதாக உணருகிறேன் ஆனாலும் நீர் என் அருகில் இருக்கிறீர் என்பதை அறிவேன்.
நான் தைரியமாய் இருப்பதற்கு காரனம் நீர் ஜீவனுள்ள என் தந்தை என்பதே! எது நடந்தாலும் உங்க கரத்தில் இருந்துப் பெற ஆவலாய் இருக்கிறேன் மரணமானாலும்,ஜீவண்னாலாலும் எதையும் பெற்றுக்கொள்ள மனநிறைவோடு இருக்கிறேன். உம்முடைய செயலே என் வாஞ்சை! நீர் எப்போதும் போல என் வாழ்கையில் செயல்படும் ஆமேன்!