நான் அன்றாடம் ஜெபிக்கின்றேன், வேதத்தை வாசிக்கின்றேன், ஆனாலும் தேவனையும், வேதத்தில் உள்ள இரகசியங்களையும், ஒருநாளும் என்னால் புரிந்த கொள்ள முடியவில்லை, என் வாழ்க்கையில் எந்த தரிசனமும் இல்லை வெளிப்பாடும் இல்லை.....
ஏன், என்னால் தேவனையும் வேதத்தில் உள்ள இரகசியங்களை புரிந்து கொள்ளமுடியவில்லை?
ஏன், எனக்கு எந்த வெளிப்பாடும், தரிசனமும் இல்லை ?
தேவனோடு பேசவும், வேதாகமத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளவும், தரிசனம் காணவும், நான் என்ன செய்ய
வேண்டும் ???
என்ற ஆவல் உள்ளவர்களே !!!
"""""""இதோ அந்த வழி """""""
உலக வாழ்கையானாலும் சரி
ஆன்மீக வாழ்கையானாலும் சரி
இரண்டு குணம் நமக்குள் இருந்தால் போதும், எதை வேண்டுமானாலும் செய்யலாம் சாதிக்கலாம்,
ஆம், அது தான்.....!!
#தாகம் #வாஞ்சை
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்,
ஏசா 44 :3
நாம் ஜெபிக்கும் பொழுதும், வேதாகமத்தை படிக்கும் பொழுதும், "ஆவியானவரே" உம்மோடு பேசவும், வேதத்தின்" இரகசியத்தை புரிந்துகொள்ளவும், உனர்ந்துகொள்ளவும் என் கண்களையும், இருதயத்தையும் திறங்கள் என்று முழு தாகத்தோடும்" வாஞ்சையோடும்" ஜெபிக்க வேண்டும்.
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
சங் 119 :18
மிகுந்த வாஞ்சையோடு, தாகத்தோடு கேட்கின்ற யாவருக்கும், தேவன் கிருபை செய்வார் !!!
ஜெபத்தையும், வேதாகமத்தையும், ஏதோ பண்ண வேண்டும், படிக்க வேண்டும் என்று செய்யாமல் முழு தாகத்தோடும், வாஞ்சையோடும் செய்து பாருங்கள்.......!
ஆவியானவர்" உங்களோடு பேசுவார் !!
வேதாகமம்" உங்களோடு பேசும் !!
தரிசனமும், வெளிப்பாடும் உங்கள் இருதயத்திலே தோன்றும் !!
இன்று, அநேக கிறிஸ்தவர்களுடைய தாகமும், வாஞ்சையும் வேறொரு பக்கம் இருக்கின்றது, அதாவது பணம், பொருள் மீது தான் உள்ளது, அதினால் தான், அவர்களால் தேவனோடு பேசவும், வேதத்தை புரிந்துகொள்ளவும் முடியாமல் போகின்றது.
இன்று அநேகர் தேவனையும்" வேதாகமத்தையும் சரியாக புரிந்துகொள்ளாமல், தான் பிடித்த முயலுக்கு மூனு கால்கள் என்று வாதிடுகின்றார்கள். வாக்குவாதமும் பன்னுகின்றார்கள்........
கிறிஸ்தவர்களே, தாகமும், வாஞ்சையும் உன்னில் தான் உள்ளது
அதை தூண்டி விடுங்கள்.......
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)