நம் ஆண்டவராகிய இயேசு மரணத்தை ஜெயித்து, சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறார்!
வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்;
ஆம்! அவர் ஜெயித்ததொடு மட்டுமல்லாமல் நமக்கும் நித்திரையடையாமல் மரணத்தை ஜெயிக்கும் வழியை உண்டாக்கி கொடுத்துள்ளார்.
I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்
வசனம் சொல்லும் இந்த வார்த்தைகளை நாம் உறுதியாக விசுவாசிக்கிறோமா?
மாற்கு 9:23 . நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
மத்தேயு 8:13 பின்பு இயேசு........................... நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார்
-- Edited by SUNDAR on Tuesday 9th of June 2015 08:09:58 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அங்கே "இரண்டாம் மரணம்" என்று வசனம் சொல்லாதவரை நாம் ஏன் "இரண்டாம்" என்ற வார்த்தைகயை சேர்க்க வேண்டும்?
வேத புத்தகம் இரண்டு சாவுகளை (மரணங்களை) பற்றியும் அதற்க்கு இணையாக இரண்டு பிழைத்தல்கள் பற்றியும் விளக்கமளிக்கிறது. இதுவே நமது வேத புத்தகத்தின் மகிமை என்று சொன்னால் அது மிகையாகாது. எந்த வேதங்களிலும் சொல்லப்படாத கருத்தாகிய இரண்டு மரணங்களையும் அவற்றை ஜெயிக்கமுடியும் என்ற கருத்தையும் நமது வேதாகமம் மட்டுமே சொல்வதோடு அதற்க்கான வழியையும் சொல்கிறது. அவற்றை குறித்து அறிய இங்கே சொடுக்கவும்.
///Elango Gopal அடுத்து நம் ஒருவருடையவிசுவாசத்தின் மூலம் இயேசுகிறிஸ்துவின் வருகையை சமிபமாகுமா? அல்லது அநேகரது மனந்திரும்பதலுக்காக அவரது வருகையைதாமதம் செயு///
ஒரே ஒரு ஆதாம் என்ற மனுஷன் செய்த பாவத்தால்தானே நாம் அத்தனைபேரும் பாவத்துக்குள் இருக்கிறோம். அதை ஏற்கும் நாம், ஒரே ஒரு மனுஷனின் விசுவாசம் இயேசுவின் வருகைக்கு அடித்தளமாக அமையமுடியும் என்பதை எப்படி மறுக்க முடியும்?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Elango Gopal ///யோ வான் 11:26 இந்த வாசனத்தை நாமும் விசுவாசிக்கவேண்டும். ஆதி அப்போஸ்தலர்கள் யாரும் இந்த யோவான் 11:26 வசனத்தை விசுவாசியாமல் இருந்ததுதான் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருகை அப்போஸ்தலர்களின் காலத்தில் நடைபெறவில்லை என்று அர்த்தபடுமா அண்ணா? ////
ஆண்டவராகிய இயேசு மறித்து உயிரித்த அன்றே பிசாசுக்கு மரணத்தின் மேலுள்ள அதிகாரம் பிடுங்கபட்டு மரணத்தை ஜெயிக்கும் வழி உண்டாகிவிட்டது. பவுல்கூட அவர் நாட்களில் இயேசுவின் வருகையை எதிர்பார்த்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அப்போஸ்த்தலர்கள் வசனத்தை விசுவாசித்தார்களா இல்லையா என்பதை தேவனே தீர்மானிக்கட்டும். ஆனால் என்னை பொருத்தவரை யோவான் 11:26 விசுவாசத்தை பற்றி கூறுகிறதுபோல " யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்"
அந்த விசுவாசத்தோடு அதை முழுமையாக்கும் வசனமாகிய கீழ்கண்ட கிரியையும் இணைத்து செயல்பட வேண்டும்.
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அதாவது
உயிரோடிருப்பவன் இயேசுவையும் அவர் சொன்ன வார்த்தையோடு மரணத்தை ஜெயிக்க முடியும் என்பதையும் உறுதியாக விசுவாசிக்க வேண்டும்
அத்தோடு
இயேசு சொன்ன வார்த்தைகளை தன் நடைமுறை வாழ்வில் கைகொண்டு நடக்க வேண்டும்.
முதலில் இயேசுவின் வார்த்தையை அசட்டை பண்ணாமல் கைகொண்டால் அடுத்து விசுவாசம் தானாகவே வரும்! அதுவே மலைகளை பெயர்க்கிற விசுவாசம். இதுவே மரணத்தை காணாதிருக்கும் வழி!
இவ்வளவு தெளிவாக இயேசு சொன்ன பிறகு நாம் எந்த தீர்மானத்துக்கு வரமுடியும்? தேவன் தன் வாயாலேயே சொன்ன வார்த்தைகள் பொய்த்து போக வாய்ப்பே இல்லை. அவர் இரண்டாம் மரணம் என்று எங்கும் சொல்லவும் இல்லை.
ஆனால் மனுஷர்கள் தவறியிருக்க அனேக வாய்ப்புகள் இருக்கலாமே.
அவர் வார்த்தைகளை சரியாக கைகொண்டு நடக்க முடியாததால் போதிய விசுவாசமில்லாமல் உலக நடப்பை பார்த்து வசனத்துக்கு வேறு வியாக்கீனம் கொடுக்கிறார்கள். அதனால்தான் மனுஷர்கள் மரிக்கிறார்களேயன்றி கைகொண்டு நடந்தால் நிச்சயம் மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆகமுடியும்!
நீதிமொழிகள் 12:28 நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
இயேசு போதித்துள்ள அந்த நீதியில் பாதையில் எந்த மரணமும் இல்லவே இல்லை! அதை திட்டவட்டமாக நான் அறிவேன்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Elango Gopalஅண்ணா Sundararaj Paulraj, உங்கள் விசுவாசம் பெரிது... ஆனாலும் அது சத்தியத்தினால் பரிசோதித்து ஆராயப்படவேண்டும்...
தனிப்பட்ட ஒரு நபரின் விசுவாசத்தின்படியோ ( யோவான் 11:26 ) , ஒரு நபர் கற்பனைகளை கைக்கொண்டதின்படியோ ( யோவான் 8:51 ) ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருகை அமைவதில்லை, தீர்மானிக்கப்படுவமில்லை.
ஆண்டவரின் வருகையை நாம் வசனங்களின் மூலம் தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்.
<< அவரின் இரண்டாம் வருகையின் தாமதம் என்பது நாம் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.>>
<< சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்.>>
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருகை ஒரு நபரின் விசுவாசத்தின் பொருத்தோ, அல்லது ஒருவர் கற்பனையை கைக்கொள்வதை பொருத்தோ தீர்மானிக்கப்படுவதில்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
// ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை // இந்த மரணம் மனிதனின் சரிர மரணத்தைக்குறிக்கிறதாஅல்லது ஆவிக்குறிய மரணத்தைக்குறிக்கிறதா?/////
யோவான் 11:25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
இந்த வசனம் எந்த மரணத்தை குறிக்கிறதோ அதே மரணத்தைத்தான் 11:26ம் குறிக்கிறது .
என்னை பொருத்தவரை இயேசு "மரணம்" என்று பொதுவாக சொல்வதால் அது எத்தனை விதமான மரணம் இருந்தாலும் அத்தனை மரணத்துக்கும் நிச்சயம் பொருந்தும்.
மாற்கு 9:23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான், கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம், உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 17 :
அப்போஸ்தலர்களுக்கு இந்த விசுவாசம் இல்லையா அப்போஸ்தலர்கள் இதை செய்யவில்லை என்பதால்
இயேசு சொன்னது பொய் ஆகுமா ? பிரதர்
அப்போஸ்தலர்களுக்கும் அந்த அளவுக்கு விசுவாசம் இருக்க இல்லை என்பது தான்உண்மை
உங்களுக்கு வேனுமென்றால் அப்போஸ்தலர்கள் முன்உதாரணமாயிருக்கரலாம் எங்களுக்கு இயேசு தான் முன் உதாரணம்
நாளை அப்போஸ்தலருடைய வார்த்தை நியாயம் தீர்க்காது
இயேசுவின் வார்த்தையை நம்மை நியாயம் தீர்க்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்
// Gnana Piragasam அண்ணா, உங்களின் கருத்து என்ன இதைப்பற்றி -->> // ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை // இந்த மரணம் மனிதனின் சரிர மரணத்தைக்குறிக்கிறதாஅல்லது ஆவிக்குறிய மரணத்தைக்குறிக்கிறதா?//
ஆவிக்குரிய மரணம் எனும் ஒன்றை வேதாகமம் கூறுவதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒன்றை வேதாகமம் கூறியிருந்தால், அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
இல்லாவிடில், ஆவிக்குரிய மரணம் என்றால் என்னவென்பதை எனக்குச் சொல்லுங்கள். (மன்னிக்கவும், ஒருவேளை இதைக் குறித்து ஏற்கனவே நீங்கள் எழுதியிருக்கலாம்; ஆனாலும் எனக்காக மீண்டும் ஒருமுறை எழுதுங்கள்)
மரணம், மரித்தல் பற்றின வேதவசனங்களின் அடிப்படையில் இங்கு விவாதம் நடப்பதால், நானும் எனது பங்கிற்கு இது சம்பந்தமான ஒரு வசனத்தைப் பதிக்கிறேன்.
மத்தேயு 8:22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
இவ்வசனத்தில் இயேசு கூறுகிற 2 “மரித்தோரும்” ஒரேவிதமான மரித்தோர் அல்ல என்பது தெள்ளத்தெளிவு. இவர்களில் 2-வது மரித்தோர் என்பது, நிச்சயம் சரீரத்தில் மரித்தோர் என்பதும் தெள்ளத்தெளிவு; ஏனெனில், சரீரத்தில் மரித்தோரைத்தான் அடக்கம்பண்ண அவசியம்.
அவ்வாறே 1-வது மரித்தோர் என்பது, சரீரத்தில் மரிக்காதவர் என்பதும் தெள்ளத்தெளிவு; ஏனெனில் சரீரத்தில் மரித்தோரால் மற்றவர்களை அடக்கம்பண்ணுவது சாத்தியமல்ல.
இந்த 2 விதமான மரித்தோரில், 1-வது மரித்தோரை ஆவிக்குரியவகையில் மரித்தோர் என நீங்கள் சொல்ல விரும்பினால், அப்படியே சொல்லலாம்; அதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்களைப் பற்றிய புரிந்துகொள்தல் என்னவெனில்:
பாவத்தைக் குறித்த உணர்வின்றி, உணர்வற்ற ஜடமாக, பின்வரும் வசனத்தில் கூறப்பட்டபடி வாழுவோர் என எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு விதவையானவள், மரித்துப்போன தன் கணவனை நினையாமல், பாவத்தைக் குறித்த உணர்வும் இல்லாமல், சுகபோகமாய் வாழ்ந்தால், அவளை உயிரோடே செத்தவள் என்கிறார் பவுல்
இவளைப் போன்று பாவத்தைக் குறித்த உணர்வில்லாத மனிதர்களைத்தான் ”மரித்தோர்” என மத்தேயு 8:22-ல் இயேசு கூறுவதாக நான் கருதுகிறேன்.
தொடர்கிறது ,..
Gnana Piragasamபாவத்தைக் குறித்த உணர்வின்றி மனம்போல் வாழ்வதென்பதும் ஒருவிதத்தில் “மரித்த நிலைதான்” எனக் கடந்த பதிவில் பார்த்தோம்.
அப்படிப்பட்ட மரித்தல் தான் விலக்கப்பட்ட கனியை ஆதாம் புசித்தபோது அவருக்கு நேர்ந்திருக்க வேண்டும். ஆக, “அக்கனியைப் புசிக்கிற நாளில் சாகவே சாவாய்” என ஆதாமிடம் சொன்னது, அவர் கனியைப் புசித்த அதே நாளில் அப்படியே நடந்தது.
ஆனாலும் இதனால் மனிதனுக்கு என்ன நஷ்டம்? அதாவது அதே நிலையில் ஆதாம் நித்திய நித்தியமாக வாழ்ந்துகொண்டிருந்தால் அவருக்கு என்ன நஷ்டம்?
பாவத்தைக் குறித்த உணர்வில்லாமல், சுகபோகமாய் ஒருவன் நித்திய நித்தியமாக வாழமுடிந்தால், அதை அவன் சந்தோஷமாகச் செய்வானே! அவன் ஏன் பாவத்தைக் குறித்து உணரவேண்டும், வருந்தவேண்டும்?
இப்படியே தொடர்ந்து ஒருவன் ஜீவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமெனில், அவனுக்கு நித்திய வாழ்வு மறுக்கப்படவேண்டும்; அதாவது அவனுக்கு சரீர மரணம் நேரவேண்டும்.
இந்த சரீர மரணம் நேர்ந்தால்தான், தேவவார்த்தையை மீறின ஆதாமுக்கு தேவன் கொடுத்த தண்டனை முழுமை பெற்றதாக இருக்கும். அதாவது “சாகவே சாவாய்” எனும் தேவதண்டனை முழுமை பெறும்.
சற்று கற்பனை செய்துபாருங்கள்: கனியைப் புசித்த ஆதாம் சரீரத்தில் சாகாமல் நித்தியநித்தியமாக வாழ்ந்துகொண்டிருந்தால், அவருக்குப் பிரச்சனை எதுவும் இருக்காதே! தேவதண்டனை ஒரு பொருட்டாக இருக்காதே!
எனவே சரீர மரணமும் நேர்ந்தால்தான் தேவதண்டனை முழுமை பெறும். அந்த மரணம் ஆதாமுக்கு அவரது 930 வயதில் நேர்ந்தது.
தேவனைப் பொறுத்தவரை அவருக்கு 1000 வருஷம் 1 நாளைப் போன்றது என்பதால், கனியைப் புசித்த அதே :”நாளில்” ஆதாம் மரித்தார் எனச் சொல்லலாம்.
அடுத்த பதிவில், யோவான் 8:51-ல் இயேசு கூறுகிற மரணம் எதுவென்பதைப் பார்ப்போம்.
தொடர்கிறது ...
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Gnana Piragasam வேதத்தில் மறைபொருள்கள் உண்டு என்பதை மறுக்கமுடியாது. ஆனால் நம் கருத்துக்கு இசைவில்லாத எல்லாவற்றையும் மறைபொருளுடையது என நினைப்பது சரியல்ல.ஒரு வார்த்தையை மறைபொருளில் எடுக்கவேண்டுமெனில், அதற்கான முகாந்தரம் இருக்கவேண்டும்.உதாரணமாக பின்வரும் வசனங்களைப் படித்துப் பாருங்கள்.யோவான் 2:19 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். 20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.ஓர் ஆலயத்தை ஒரே ஆளாக 3 நாட்களுக்குள் கட்டுவதென்பது, அற்புதத்தாலன்றி சாத்தியமல்ல. இயேசு தமது அற்புத வல்லமைக்கு ஒரு சவாலாக அப்படிக்கூறவில்லை என்பதும் நிச்சயம். எனவே இயேசுவின் அவ்வாசகத்தில் மறைபொருள் உள்ளது எனக் கருத முகாந்தரம் உள்ளது; 21-ம் வசனம் அதை உறுதிப்படுத்தவும் செய்கிறது.ஆனால், யோவான் 8:51-ஐப் பொறுத்தவரை அதில் “மரணம்” எனும் வார்த்தை மறைபொருளுடையது எனக் கருத எந்த முகாந்தரமும் இல்லை.யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஒருவன் (சரீர)மரணத்தைக் காணாதிருப்பது சாத்தியமற்றது எனச் சொல்லமுடியாது. சரீரத்தில் மரித்தவன் உயிரோடெழுவது சாத்தியமெனில், அவன் மரிக்காமல் இருப்பதும் சாத்தியம்தானே?பின்வரும் வசனங்களையும் படிப்போம்.யோவான் 11:25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.”உயிரோடிருந்து” எனும் வார்த்தையை இயேசு பயன்படுத்தியுள்ளதால், “மரித்தாலும் பிழைப்பான்” எனும் வார்த்தைகள் சரீர மரணத்தையும் அதிலிருந்து பிழைத்தலையும் (அதாவது உயிர்த்தெழுவதையும்) குறிக்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.இதன் தொடர்ச்சியாக வசனம் 26-ல் ”உயிரோடிருந்து” எனக் கூறுவதால், இந்த “உயிரோடிருந்து” எனும் வார்த்தை, சரீரத்தில் மரிக்காமல் உயிரோடிருப்பதையே குறிக்கிறது என்றும் திட்டமாகச் சொல்லலாம்.இதன் தொடர்ச்சியாக “என்றென்றைக்கும் மரியாமல்” எனக் கூறுவதால், இந்த “மரியாமல்” என்பதும் சரீரத்தில் மரிக்காதிருப்பதையே குறிப்பதாகத் திட்டமாகச் சொல்லலாம்.இயேசுவின் இவ்வசனங்கள் எந்த ஒளிவும் மறைவுமின்றி நேரடியாகவே உள்ளன. இவற்றில் ஏதேனும் உட்பொருள் இருக்கக்கூடும் எனக் கருத எந்த முகாந்தரமும் இல்லை. எனவே யோவான் 8:51 மற்றும் 11:26-ல் சொல்லப்பட்ட நிபந்தைகளின்படி ஒருவன் வாழ்ந்தால், அவனைச் சரீர மரணம் நெருங்காது எந்த அர்த்தத்தில்தான் இயேசு அப்படிக் கூறியுள்ளார் என்பதே என் கருத்து. தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும் https://www.facebook.com/sundararaj.p
-- Edited by SUNDAR on Wednesday 10th of June 2015 09:00:56 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Elango Gopal ///தேவன் சொன்ன மாதிரியே, ஆதாம் கனியை புசித்த நாளில் செத்தார் ( கனியை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்)ஆனாலும்<<ஆதாம் கனியை புசித்த அதே நாளில் சரிரபிரகாரமாக சாகவில்லை.>,அவர் பலவருடங்கள் வாழ்ந்த பிறகே சரிரபிரகாரமாக மரித்தார்>> புரிதல் சரிதானே அண்ணா? ///
சரியான புரிதல்தான் அதேபோலவே இயேசு சொல்லியிருக்கும் என்றென்றும் மரியாமல் இருக்கும் நிலையம். அது சரீர பிரகாரமாக உடனே நிகழ்வது விடுவது இல்லை. அவர் வரும்போது மறுரூபம் ஆகி மரிக்காத நிலையை அடையும்.
எல்லோரும் அதற்குதான் காத்திருக்கிறோம் என்று சொல்லும் உங்களால் அதை ஏன் விசுவாசிக்க முடியவில்லை?
பாவத்தினாலும்/சாபத்தினாலும் அதாமுக்குள் மரிக்கும் நாம் கிறிஸ்த்துவுக்குள் உயிர்ப்பிக்கபடுகிறோம் அவ்வாறு உயிர்பிக்கபட்டு "உயிரோடும் இருக்கும் ஒருவன் என்றென்றும் மரியாமல் இருப்பான்" என்று இயேசு சொல்கிறார். அதாவது கிறிஸ்துவுக்குள் உயிர்பிக்கபட்ட பிறகு வேறொரு மரணம் இல்லை.
இயேசு மரியாமல் இருப்பான் என்று சொன்ன பிறகு வேறொரு சரீர மரணம் வந்தால் அங்கு விசுவாசம் இல்லை என்றுதான் பொருளாகும்.
இது கடைசி காலம்தானே "இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று சொல்லி சென்ற இயேசு உங்கள் நாட்களில் வர முடியும் என்ற விசுவாசம் ஏன் இல்லாமல் இருக்கிறீர்கள். உங்களை குழப்புபவர் யார்?
என் நாட்களில் இயேசுவின் வருகை நிச்சயம் இருக்கும் என்று நான் விசுவாசிப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை. பவுல் நாட்களில் வராத இயேசு, என் நாட்களில் வரமாட்டேன் என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? அவர் எந்த நிமிடமும் வர சாத்தியமே.
"தேவனால் எல்லாம் கூடும்" என்று வசனம் சொல்லும்போது இயேசுவின் வார்த்தைகள் மீது இவ்வளவு அவிசுவாசம் ஏன் சகோதரரே?
பவுலின் விசுவாசத்தை விட என் விசுவாசம் பெரிதுதான் எப்படியெனில் "பவுல் இயேசுவை பேரொளியாக கண்டு /பேசி விசுவாசித்தான், நான் காணாமல் விசுவாசிக்கிறேன்"
யோவான் 20:29 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
அப்படியென்றால் அப்போஸ்தலர்களான பேதுரு, யோவான், பேதுரு............. மற்றும் கர்த்தருடைய சீஷர்கள், தேவனுடைய வார்த்தைகளை சரியாக கைகொண்டு நடக்க முடியாததாலும், போதிய விசுவாசமில்லாமலும் தான் அவர்கள் சரீரபிரகாரமாக மரித்தார்கள் என்று சுந்தர் அண்ணா சொல்வது சரியாகுமா அண்ணா? //
இயேசுவின் வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றைக் கைக்கொள்வதில் அவர்கள் ஏன் தவறியிருக்கக்கூடாது?
உதாரணமாக, பேதுருவைப் பற்றி பவுல் சொல்வதைப் படியுங்கள்.
கலாத்தியர் 2:11 பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். 12 எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். 13 மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். 14 இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: ...
பேதுருவிடம் குற்றம் இருந்ததாம்; அவர் மாயம் பண்ணினாராம்; பர்னபாவும் அப்படித்தானாம்; அவர்கள் சத்தியத்தின்படி நடக்கவில்லையாம்.
பேதுருவிடம் குற்றம் இருந்ததைப்போல் பவுலிடமும் மற்ற சீஷர்களிடமும் ஏன் குற்றம் இருந்திருக்கக்கூடாது?
இவ்விஷயத்தில் பேதுருவையோ பவுலையோ மற்ற சீஷரையோ நாம் பார்க்கவேண்டியதில்லை. நமக்கு வேதம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நாம் பார்க்கவேண்டும்.
இயேசுவின் வார்த்தைகளைக் கைக்கொண்டால் மரணம் இல்லை என வேதம் சொன்னால், அதன்படி நமக்கு நடக்க முயல்வதை மட்டுமே நாம் பார்க்கவேண்டும். ஒருவேளை அதில் உங்களுக்கு விசுவாசம் இல்லையெனில், உங்கள் விசுவாசத்தின்படி நீங்கள் நடந்துகொள்ளுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Elango Gopalகருத்துக்கு நன்றி அண்ணா Gnana Piragasam
// இயேசுவின் வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றைக் கைக்கொள்வதில் அவர்கள் (இயேசுவானவரின் சீஷர்கள் ) ஏன் தவறியிருக்கக்கூடாது? //
இயேசுவானவரின் வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றைக் கைக்கொள்வதில் நீங்களும் இதுவரை தவறவேயில்லை என்று சொல்லவருகிறிர்களா? அல்லது இனிமேல் ஒரு கற்பனையைக்கூட கடைப்பிடிக்க தவறவேமாட்டோம் என்று சொல்லவருகிறிர்களா அண்ணா?
மேலும் அண்ணா பேதுரு அப்படி பண்ணினது மரணத்திற்க்கு ஏதுவான பாவந்தானா அண்ணா?
Sundararaj Paulrajசகோதரர் இளங்கோ கோபால் அவர்களே சகோதரர் அன்பு வேதத்தில் எழுதப்பட்ட ஒரே ஒரு உதாரணம் சொல்லி அதுபோல் வேறெதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லையா என்று விளக்கியிருக்கிறார்.
ஒரு மனுஷனின் அந்தரங்க விசுவாசம் தேவனையற்றி யாருக்கும் தெரியாது ஆகினும் வேதத்தில் இருந்தே ஒரு சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.
I கொரிந்தியர் 15:51 நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
மறுரூபம் ஆகமுடியும் என்ற ரகசியத்தை அறிந்து "நாமெல்லாம்" என்று இரண்டு முறை தன்னையும் சேர்த்து விசுவாசத்தில் பேசிய பவுல்
ரோமர் 7:24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
என்று சொல்லி சற்று தடுமாறுவதை பார்க்க முடிகிறது.
அதேபோல் மறுரூபம் ஆகமுடியும் என்ற ரகசியத்தை அறிந்து "நாமெல்லாம்" என்று இரண்டு முறை தன்னையும் சேர்த்து விசுவாசத்தில் பேசிய பவுல்"
II கொரிந்தியர் 1:9 மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.
என்று சொல்கிறார். இது ஒரு விசுவாச தடுமாற்றமாக தங்களுக்கு தெரியவில்லையா?
"மறுரூபம் ஆவோம்" என்பதை நிச்சயிக்க வேண்டும் அல்லது "மரணம் வரும்" என்பதை நிச்சயிக்க வேண்டும்.
அதாவது கிறிஸ்த்துவை பற்றிய விசுவாசத்தில் அவரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இந்த மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆகுதல் என்பது குறித்த விசுவாசத்தில் அவர் தடுமாற்றம் உள்ளவராகவே இருந்தார் என்பதை அறிய முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)