எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
முதலில் இந்த வசனத்துக்கு இணை வசனம் எங்காவது இருக்கிறதா ?
அடுத்து
ஒரேதரம் மரிப்பது மனுஷனுக்கு நியமிக்கபட்டிருக்கிறது என்று சொல்லும் எபிரெயர் புத்தகமே
எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்
என்றும் சொல்கிறது.
ஏனோக்கும் ஒரு மனுஷந்தானே அவனுக்கு ஏன் அந்த நியமனம் பொருந்தவில்லை?
அல்லது
"விசுவாசத்தால் எல்லாம் கூடும்" என்ற வசனத்தின் அடிப்படையில் நியமிக்க பட்டிருந்த மரணத்தைக்கூட ஏனோக்கின் விசுவாசம் வென்றது என்று எடுத்துகோள்ளலாமா?
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)