அப்பா என்னை சீர்படுத்த நீங்க படுகிற கஷ்டத்தை நான் உருகிறேன். எனக்கும் உங்களுக்கு பிரியமா இருக்கனும் என்று அதிக விருப்பம்தான் ஆனால் நான் இதை மறந்துவிடுகிறேன் .சூழ்நிலைக்கு ஏதுவாக நான் சுயமாக யோசித்து என் இஸ்டம்போல் நான் நடக்கிறேன் அதுக்கு பிறகு ஆபத்து வருகிறதாக தெரியும் போது அதில் இருந்து தப்பித்துக்கொள்ள உபாய தந்திரமாக பொய் பேசிவிடுகிறேன் .பிறகு உணர்வு வரும்போது பொய் பேசிவிட்டேனே என்று கவலையாக இருக்குது.
எனக்கு தெரியலப்பா நான் என்ன செய்யனும் எதை எப்படி அனுகனும் என்று எனக்கு ஞானம் இல்லப்பா ! சிலர் என்ன ஏமாத்தி அவங்க காரித்துக்காக என்னை பயன்படுத்துகிறாங்க ! அதுக்காக உலக பொருட்களால் என்னை திருப்தியாக்கி அவர்கள் வார்த்தைக்கு நான் தலையாட்டுகிற ஒரு அடிமைப்போல இருக்கிறேனே!
நான் மோசம்போனது பிற்பாடுதான் தெரிகிறது .எனக்கு ஞானம் போதலப்பா ! உங்ககிட்ட ஆதி நாட்களில் கேட்டு கேட்டு நடக்கும் போது எத்தகைய கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் நான் ஒன்றுக்கும் கவலைப்படாமல் நீங்கள் கூறினபடியே நடப்பேன் அந்த நாளில் நான் அதிக சந்தோசமாக இருந்தேன் .என்னை ஏமாற்றவருகிறவர்கள் யார் என்பதை முன்கூடியே தெரியப்படுத்தி அவங்ககிட்ட எப்படி நடக்கனும் என்று சொல்லிக்கொடுப்பீங்க! ஆனால் இப்போது நான் உங்ககிட்ட கேட்டாலும் எனக்கு ஏதும் சொல்லமாட்டிக்கீங்க !
எனக்கு எதுவும் புரியலப்பா! என்னை குறித்து உங்க திட்டம் எது என்றும் புரியல அது தெரிந்தாலாவது அந்த குறிக்கோளை நோக்கி ஓடுவேனே!
இப்பம் எல்லா இடத்துக்கும் அலைந்து திரிகிறேன் ஒவ்வொரு ஏழை ஜனங்க படுகிற கஷ்டத்தைப் பார்க்கும் போது என்னால் ஏதும் செய்ய முடியாதவனாக அவங்க படுகிற வேதனையை அணு அணுவாக மனதில் உணர்ந்து அதன் மூலமாக தாங்கமுடியாத வேதனை அடைகிறேன்.
என்னோட அப்பா அம்மாவை நல்லா கவனிக்கக் கூட முடியாமல் நான் தடுமாறுகிறேன் .அவங்க நான் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி அவங்களுக்கு வரும் கஸ்டங்களை என்னிடம் சொல்லமாட்டுக்காங்க பிற்பாடு நான் அவைகளை அறியும்போது என் தாய் தகப்பனை சரியாக பராமரிக்கமுடியாதவனாக இருக்கிறேனே என்று உன் உள்ளம் மிகவும் வேதனைப்படுகிறது.
அப்பா நான் சுயமாய் நடப்பதால் இத்தனை போராட்டங்கள் வருகிறது.எனக்கு இப்படி நடக்க ஆசையில்லை அந்த நாளில் ஒவ்வொரு நிமிஷமும் எதை எப்படி செய்யனும் என்று சொல்லுவீங்களோ அப்படியே இந்த நாட்களிலும் என்னை வழிநடத்துங்க !
நான் ஒரு பேதை ,சுய விருப்பத்தின்படி நடக்கிற ஒரு கோவேறு கழுதையின் குணம் உடையவன் என்னை நீங்க கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு செல்லூங்க!
நான் இவ்வளவு நாள் உங்களுக்கு மிகுந்த கஷ்டம் கொடுத்திருக்கிறேன் .அப்பாவின் மனதை அறிந்தும் அதன்படி நடக்காத மகனாக இருந்திருக்கிறேன் .உங்கக்கூட நடக்கும் போது கிடைத்த சந்தோசம் இப்போது இல்லை! இந்த மாயையான உலகத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லும் ஓடம் போல அது இஸ்டத்துக்கு என்னை இழுத்துச்சென்று பாறையிலும் குழியிலும் செங்குத்தாக விழுந்தும் ஓடமாகிய நான் காயப்படுகிறேன் .
இப்படிப்பட்ட ஒரு வாழ்கை வேண்டாம் ,என்னோட மனதை அடக்கமுடியாத ஒரு சுயாதீனம் வேண்டாம் ,உங்க சொல் கேட்டு நடக்கத்தக்க உங்க இருதயத்தையும் ,மனசையும்,உங்க விருப்பமும் எனக்குள் வரட்டும்.எப்போதும் உங்க செல்லப்பிள்ளையாக நான் இருக்கனும்.சொல் கேட்காத துஷ்டனாக இருக்கக்கூடாது.
அப்பா நீங்க இமைப்பொழுது என்னோடு பேசனும்,மற்றவங்க படுகிற வேதனையை அறிந்து இரவு நேரத்தில் அந்த நாளில் நாம் இருவருமாய் சேர்ந்து ஜெபித்தது போல இந்த நாளும் ஜெபிக்கனும் .உங்களை விட்டு என் இஸ்டம்போல நான் அலைந்து திரிகிறதை அறிந்து மிக வேதனையாக இருக்கிறது.
என்னிடம் உங்க விருப்பத்தை தெரிவிக்காத காரணம் எனக்குப் புரிகிறது நான் அந்த நாள் கேட்காமல் மீறி நடந்த அந்த சம்பவமே காரணம் என்பதை அறிவேன் .ஆகையால் என்னை மறுபடியும் குழந்தையாக்கும் இனி மீறி நடக்காதபடி என் இருதயத்தை உங்க இருதயத்தோடு ஒன்றாக்கிவிடுங்க ! அதில் எனக்கு இருந்த ஆறுதல் எங்கேயும் கிடைக்காது.
அநேக உண்மைகள் எனக்கு உங்க மூலமாக தெரிந்தாலும் சில உண்மைகளின் நடமுறைகள் மிகுந்த வேதனையளிக்கிறது காரணம் எனக்கு ஞானம் போதவில்லை என்பதையே உணர்கிறேன் .
அப்பா என்னோட இந்த விருப்பத்தை நிறைவேற்ற உங்கள் நடைமுறைகள் ஒத்துக்கொள்ளுமா என்பது எனக்கு தெரியல ஆனாலும் என்னோட ஆசை இதுதான் .