இன்று தேவ ஜனங்களை பூமிக்குரிய சிந்தையுள்ளவர்களாய் மாற்றும்படி அவர்கள் மேல் சாத்தான் பிரயோகிக்கும் பயங்கரமான வசீகர சக்திகளில் பிதானமானது பூமிக்குரிய ஐசுவரியங்களே!.
இதை அவர்கள் பற்றிக்கொள்ளும்போது அது அவர்களுடைய மனதையும் இருதயத்தையும் பாதித்து அவர்கள் தேவனை விட்டு விலகி,பரலோகத்திற்கு தங்கள் முதுகைக் காட்டும்படி செய்கிறது.பூமிக்குரிய ஐசுவரியங்கள் அவர்கள் வீடுகளில் நூழையும்போதுஅவர்கள் பரலோகத்தை மறந்து,பரலோக ஐசுவரியத்தையும் ,சுதந்திரத்தையும் அசட்டைபண்ணி,இனி வரும் உலகத்தின் பலன்களை அவமதித்து ,தங்களுக்காகவும் தங்கள் இரட்சிப்புக்காகவும் கல்வாரியில் மரிக்கும்படியாக தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பிய தேவனுக்கு அந்நியராய் மாறிவிடுகின்றனர்.
அவர்கள் பூமிக்குரிய சிற்றின்பங்களைக் காட்டிலும் மேன்மையானது ஒன்றுமில்லை என்றும் ,இவ்வுலக வாழ்கைக்கு அப்பால் வேற எதுவும் இல்லை என்று தங்கள் கிரியைகள் மூலமாய் வெளிப்படுத்துவார்கள் .மற்றும் சபைக்கூடுகை வரும்போது பரலோகத்திற்காய் வாழவில்லையே என்கிற சிறு உணர்த்துதல்கூட இருதயத்தில் இல்லாது உலக காரியத்தினுக்காய் தன்னுடைய சிந்தனைகளை மனதில் நிறப்பி வைத்திருப்பார்கள்.இவ்விதமாய் இவர்கள் வஞ்சிக்கப்பட்டு இருப்பதை அவர்கள் உணர்வற்றிருப்பார்கள்.
சிலர் இதை அனுபவிக்கிற விசயத்தில் சலுகையாக அநேக நூதான காரியங்களை விவரிப்பார்கள். தேவன் தான் என்னை ஆசிர்வதித்தார் இன்று நான் அதிக பணக்காரர்கள் வரிசையில் இருப்பதற்கு அவரே காரனம் என்று நன்றி கூறுவதை நாம் பார்க்கலாம் ஆனால் எல்லாவற்றிற்கும் நாம் கணக்கு கொடுக்கவேண்டுமே என்பதை மறந்தவர்களாய் இருப்பார்கள் .உண்மையில் தேவன் தரும் உலக ஐசுவரியம் மற்ற சிறுமைப்பட்டவர்களுக்கு பயன் படவேண்டும் அதற்காகவே தேவன் சிலருக்கு நல்ல பதவியும் ,செல்வத்தையும் கொடுக்கிரார் .ஆனால் சிலர் அந்த பணத்தை தன்னுடையதுப்போல் என்னிக்கொண்டு ஜீவனம் பண்ணுவார்கள் மற்றும் இவர்கள் பணம் சேர்ப்பதிலும்,சொத்து வாங்குவதிலும்,பொண் அபரணங்களை வாங்குவதிலும் ஆவலோடு அதில் இச்சையுள்ளவர்களாய் இருப்பார்கள்.
பூமிக்குரிய ஐசுவரியத்தைப் பற்றிக்கொள்ளும் ஜனங்களுக்கு வரும் தீமைகள்:-
1)இது இருதயத்தின் கலங்கமற்றத் தன்மையை அழித்துவிடும்(நீதி28:20)
2)நித்திய பிரதிபலனைக் கொள்ளையிடுகிறது (லூக்6:24;16:25)
3)ஆழமான ஒரு அர்பணிப்பு ஜீவித்திலும்,ஊழியத்திலும் பிரவேசிக்க அது தடை செய்கிறது.(லூக்18:23)
4)சோதனையிலும் கண்ணியிலும் மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளில் விழச் செய்கிறது.(1தீமோ6:9)
5) அது கேட்டிலும் அழிவிலும் மூழ்கடித்துவிடுகிறது.(1தீமோ6:9)
6)பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.1தீமோ6:10)
7) அது தேவ அன்பிலிருந்தும் விசுவாசத்திலிருந்தும் தேவன் மேலுள்ள நம்பிக்கையிலிருந்தும் துண்டித்துவிடுகிறது.(மத்13:22;1தீமோ6:10;சங்52:7)
8)ஐசுவரியம் பெருகினால் வேதனைப் பெருகும்(1தீமோ6:10)
9)இறுமாப்புள்ள சிந்தையுள்ளவர்களாகவும் மேட்டிமையுள்ள இருதயமுடையவர்களாகவும்,சுயத்தின் மேல் சார்ந்திருக்கிறவர்களாகவும் மாற்றுகிறது.(1தீமோ6:17;எசே28:5)
10)தங்கள் ஆழமான அறிவை இழக்கும்படிச் செய்து மற்றும் தங்களுடையப் பார்வையிலே ஞானவான்களாக்குகிறது.(நீதி18:11)
11)இது சமாதானம் ,இளைப்பாறுதல்,தூக்கம் போன்ற யாவற்றையும் அபகரித்துக்கொண்டு,ஆவிக்குரியக் காரியங்களில் ஒருமிக்கக் கருத்தைச் செலுத்தமுடியாதப்படிக்கு சிந்தையைக் கலக்கி விடுகிறது.இருதயத்தில் அன்பு,நம்பிக்கை,மகிமை ஆகியவற்றை அற்றுப்போகச் செய்கிறது.(பிர5:12,13)
12)மற்றவர்கள் மேல் அதிகாரம் அல்லது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற அடங்கா ஆசையை இது உண்டாக்குகிறது.(நீதி:22:7)
13)இது கடினமுள்ளவர்களாகவும் கர்வம் நிறைந்தவர்களாகவும் இருக்கத் தூண்டுகிறது.(நீதி18:23)
14)இது கொடுமையால் நிறைந்தவர்களாக்குகிறது(மீகா6:12)
15)இது தேவனுடைய ராஜ்யத்திற்கு அந்நியாக்கிவிடுகிறது.ஐசுவரியவான்கள் பரலோகத்தில் பிரவேசிப்பது அரிதென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறினார்.(மத்19:23)
16) மனதுருக்கத்தின் ஆவிக்குப் பதிலாக மற்றவர்களை ஒடுக்குகிற ஆவியுடையவர்களாவதற்கு இது தூண்டிவிடுகிறது.(லூக்16:21;யாக் 2:6)
17) இது அவரவர் தங்கள் ஜீவியத்தில் எவ்வித நோக்கமற்றவர்களாயிருந்து தங்கள் வழிகளில் வாடிப் போகும்படி செய்கிறது.(யாக்1:11)
18)பரிசுத்தவான்களைக் குறித்துத் தீதாய்ப் பேசவும்,நீதிமான்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து அவர்களைக் கொலை செய்யவும் இது துணிகரங்கொள்ளும்படி செய்கிறது (யாக்:5:6)
19) இது உல்லாசமாய் வாழ்வதற்கு தூண்டி தேவனுடைய ஜனத்தோடு துன்பத்தை அனுபவிக்கும் தனி சிலாக்கியத்தை வாஞ்சிக்காதப்படி அசட்டைசெய்யவைக்கிறது (யாக்5:5;எபி.11:25)
20) அழகை மிகுதிப்படுத்துவதற்காக விலையுயர்ந்ததும், மற்றவர்களைக் கவரத்தக்கதும்,மிக மெல்லியதும்,மயக்கத்தக்கதுமான வஸ்திரங்களை அணிந்துக்கொள்ள வேண்டும் என்ற மனதைத் தூண்டும்படி செய்து சோதனைகளுக்குள் சிக்கவைக்கிறது (லூக்16:19)
21) இது ஏழைகள் மீதும் பசியாயிருக்கிறவர்கள் மீதும் உள்ள மனதுருக்கத்தை எடுத்துப்போட்டு போஜனப்பிரியராக்கிவிடுகிறது.(லூக்16:21)
22) பாதுகாப்புக்காகத் தேவனுடைய வல்லமையில் சார்ந்துக்கொள்வதற்குப் பதிலாக அது தீவினையைச் சார்ந்துக்கொள்ளத் தூண்டுகிறது.(சங் 52:7)
23)இது மாயையை நோக்கி நம்மை ஓடும்படி செய்கிற ஒரு பேய்த்தனமான சக்தியாகும்.இது ஒருவனை எவ்வித குறிக்கோளும் நோக்கமும் அற்றவனாக,இளைப்படையாமல் பிரயாசப்பட்டு உழைக்கச் செய்கிறது.(பிர 4:8)
24) இது அவபக்தியை அல்லது துன்மார்க்கத்தைப் பெருகச்செய்கிறது(சங் 73:12)
25) மரணத்திற்குப் பின் இது தொடர்ந்து வருவதில்லை (பிர 4:8)
26)இது நிச்சயமாகவே ஏதாவது ஒருநாள் தேவனை விட்டு வழுவி விழுந்து போகும்படிச் செய்யும் (நீதி 11:28)
27) இது தேவனுக்கு விரோதமாய்க் கலகம் பண்னச் செய்கிறது (நெகே9:25,26)
28) ஐயுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாக்கும்படி சேகரித்து வைக்கப்படுகிறது.(பிர 5:13)
29)இந்த உலக ஜீவியத்தின் முடிவில் நரகத்தில் அவியாத அக்கினியின் வேதனைக்குள் இது எறிந்துப்போடும் (லூக்16:24)
30) இது மிகப்பெரிய வஞ்சனையுள்ளதாகும் “ கழுகைப்போலச் சிரகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு,ஆகாயமார்க்கமாய்ப் பறந்துப்போம்” (நீதி23:5),இது ஒருபோதும் திருப்தியாக்குகிறதில்லை (பிர5:10).