இன்று நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது அவற்றில் சிலவைகள் நம் சுயத்தை மகிழவைக்கும் செயல்கள் ஆனால் ஆவியின் சிந்தைக்கு அவைகள் விரும்படத் தகாததும் உள்ளான சமாதானத்துக்கு எதிரானதுமானவைகள்.
சபையில் என்ன நடக்கிறது:-
மாம்ச சிந்தை:- நம் மாம்சசிந்தையில் நம்முடைய ஆவிக்குரிய நல்ல வார்த்தைக்கு செவி சாய்ப்பவர்களை நாம் சந்தோசமாய் ஏற்றுக்கொள்கிறோம் அதேசமயம் செவிசாய்க்காதவர்களைக் நம்முடைய வார்த்தை எவ்வளவு உண்மையுள்ளது இவர்கள் நம்மை அசட்டை செய்கிறார்கள்.இவர்களுக்கு நாம் சரியாய் உணர்த்தவேண்டும் என்று சுயத்தில் பெருமைகொண்டு நினைக்கிறது.
ஆவியின் சிந்தை:- நம்முடைய ஆவிக்குரிய நல்ல வார்த்தையை அசட்டை செய்யும் மனிதர்களைக்கானும் போது .இவர்கள்தான் நம்மை கிறிஸ்துவுக்குள் உருவாக்கும் கருவிகள்.அவர்கள் நம்மை அசட்டை செய்வதினால் நமக்குள் இருக்கும் பெருமையை காணச்செய்ய உதவியவர்கள்.ஆகையால் இவர்கள் நம்மை விமர்சிக்கவேண்டும் நாம் கோபப்படாமல் அவற்றைச் சகித்து நம்மை நியாயப்படுத்தாமல் அப்போதைக்கு நாம் ஒதுங்கி போகச்செய்யும் சிந்தனை.நாம் அவர்களில் மாம்ச சிந்தையின் உணர்வுகளுக்கு எப்போதுமே செவி கொடுப்பதில்லை மாறாக அவற்றுக்கு உண்மையில் நாம் எதிராகத்தான் இருக்கிறோம் ஆனால் நாமோ அதை நம்முடைய மாம்சத்தின் சிந்தையின்படி எதிர் கொள்ளாமல் ஆவியின் சிந்தையான நீடியபொறுமை,தாழ்மை, அன்பு,இவற்றைக்கொண்டு நாம் எதிர் கொள்ளும் போது.நமக்கு அந்த நேரத்தில் மாம்சத்தின்படி தோல்வியும்,ஆவியின் ஆவியின்படி வெற்றியும் உண்டாகிறது.
இன்று அநேகர் மற்றவர்களுக்கு விரோதமாய் தூசிப்பதும்,பரிகசிப்பது,அவர்கள் சுயத்தை யாரும் வென்றுவிடக்கூடாது என்ற நோக்கமே! மற்றவர்களுக்கு மற்றவர்களுக்கு விரோதமாய் போராடுவது உண்மையில் மாம்ச சிந்தையே!
சத்தியத்தின் நிமித்தம் ஆவிக்குரியவன் போராடுவதுவித்தியாசமானது.இங்கே இவன் தன் சுயத்தை நிலைநாட்ட போராடவில்லை முழுக்க சத்தியத்தை தவறாய் விளங்கிக்கொள்ளுகிறதை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டு வஞ்சிக்கப்படுவதை ஆவியில் அறிந்து பக்திவைராக்கியம் கொண்டு வஞ்சிக்கப்படும் ஜனத்தின் மேல் உள்ள அன்பினாலும் அக்கரையினாலும் எப்படியாவது இவர்களை வஞ்சகத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதே .
கிறிஸ்து பாவிகள் மேல் மனதுருகினார் அதேசமயம் நீதிமான் போல நடித்து மாய்மாலம் பண்ணின அன்றய ஊழியர்களை(வேதபாரர்கள் ,பரிசேயர்கள்) சாடினார்.
அதற்காய் சத்தியத்தைக் கொண்டு விவாதிக்கும் போது பொய்யும்,தந்திரமும் பொய்த்துவிடும் வஞ்சகத்தில் இருக்கும் நபர் தன் மனக் கண்களைத்திறந்து ஆர்வத்தோடு சத்தியத்தினை அறிந்து,வஞ்சகத்தில் இருந்து விடுபடுவர்.
இங்கே!நம்மை நாமே வஞ்சித்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் வருவதுண்டு அது சாத்தான் நம் மாம்சத்தை தூண்டுவிதமாய் மற்றவர்கள் நம்மை ஏளனம் செய்வதும்,பரியாசம் செய்வது நடக்கும் அப்போது பதிலுக்கு நாம் தூசியாமல் தங்கள் புரிதலுக்கு நன்றி என்றுக்கூறி சத்தியத்தையே வலியுறுத்துவது நல்லது ஒரு போதும் தன்னிலையில் பேசாமல் சத்தியத்தின்படி பேசினால் நாம் ஆவிக்குரிய சிந்தையில் நடக்கிறோம்.
-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 11:06:14 PM