"என் மாமா பெரிய போலிஸ் அதிகாரி தெரியுமா?" "என் சித்தப்பா பிரபல வக்கீல் தெரியுமா" என்பது போன்று தங்கள் சொந்த பந்தகளின் பலம் பற்றி பெருமை பாராட்டுவதும்
பலர்.
"எங்களுக்கு சொந்த வீடு இருகிறது தெரியுமுல்ல" "கிராமத்தில் ஏழு ஏக்கர் நிலை இருக்கு தெரியுமுல்ல" என்று தங்கள் சொத்துக்களை குறித்து பெருமை பாராட்டுவதுண்டு.
சிலர்
"நான் ரெயில்வேயில் இருக்கிறேன்/ வங்கியில் வேலை செய்கிறேன் என்று தங்கள் வேலை குறித்து பெருமை பாராட்டலாம்.
சிலர்
நான் BE படித்திருக்கிறேன், CA படித்திருக்கிறேன் என்று தங்கள் படிப்பை குறித்தும் மேன்மை பாராடுகின்றனர்.
சிலர் தங்கள் வசீகர தோற்றத்தை குறித்தோ அல்லது தங்களின் அறிவார்ந்த பேச்சு திறமை குறித்தும் மேன்மை பாராட்டுகின்றனர்.
சிலர்
நான் ஏழு சபை வைத்திருக்கிறேன் இதுவரை ஏழுமுறை வெளிநாடு சென்று வந்திருக்கிறேன் என்று தங்கள் ஊழியம் குறித்து பெருமை பேசுகின்றனர்.
சிலர்
நான் ஜெபித்து கையை வைத்தால் எந்த நோயும் குணமாகிவிடும் என்றும் எந்த அசுத்த ஆவியும் ஓடிவிடும் என்று தங்கள் ஆவிக்குரிய நிலை பற்றியும் பெருமை பாராட்டுகிறார்கள்.
ஆனால் தேவன் என்ன சொல்கிறார்? எதை குறித்து மட்டும் மேன்மை பாராட்ட சொல்கிறார்?
எரேமியா 9:24மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
ஆம் ! தேவனை அறியாத அனேக ஜனங்கள் உள்ள இந்த உலகத்தில் சர்வவல்ல தேவனை அறிந்திருப்பதைவிட மேலானது வேறு எதுவுமே இல்லை. எனவே அவரை அறிந்திருக்கிறோம் எனபது குறித்து மட்டுமே நாம் மேன்மை பாராட்டகடவோம்.
சங்கீதம் 20:7சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடையநாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்
காரணம் இந்த் உலகத்தில் நமக்கு எந்த திறமை இருந்தாலும் எவ்வளவு மேன்மை இருந்தாலும் அவை அனைத்தும் மரணத்தோடு முடிந்து போகும் ஆனால் நித்தியத்தில் நம்மோடு இருப்பவர் நம் தேவன் மட்டுமே.
-- Edited by SUNDAR on Friday 24th of July 2015 12:32:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)