நாங்கள் சில சகோதரர்கள் சேர்ந்து வாரத்த்தில் ஓரிருமுறை எங்கள் அலுவலகத்தில் கூடி ஜெபித்து வேத வசனத்தை தியானிப்பது வழக்கம்.
எங்கள் ஜெபத்தில் சத்தம் வெளியில் சாலையில் கேட்டதாக யாரோ அட்டோ டிரைவர் எங்கள் டைரக்டரிடம் போட்டு கொடுக்க, பயந்துபோன அவர் என்னிடம் "அலுவலகத்துள்ளே ஜெபம் செய்ய கூடாது" என்று கட்டளை போட்டுவிட்டார்.
இப்படி "ஜெபிக்க வேண்டாம் என்று சொல்கிறாரே ஆண்டவரே" என்று மன கஷ்டத்தோடு அதைப்பற்றி யோசித்துக்கொண்டு அவருக்கு எந்த தீங்கும் நேர்ந்துவிட கூடாது என்ற வேண்டுதலோடு அவருக்காகவும் அவர் குடும்பத்துக்காகவும் ஜெபித்துகொண்டே அலுவலகம் விட்டு போய்கொண்டு இருந்தேன். அந்நேரம் ஆண்டவர் இடைபட்டு இதற்காக வருத்தப்பட ஒன்றுமில்லை அவர் ஒருவேளை உள்ளே இருந்து ஜெபிக்க கூடாது என்று கடினமாக சொன்னால் கூட நான் வெளியில் ரோட்டில் நின்று உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் ஜெபிப்பேன் என்று சொல். என்று கட்டளையிட்டார்.
என் கண்களில் அப்படியே நீர் பொங்கி வந்தது!
தேவனின் செயல்பாடானது இப்படி தன்னை பிறருக்காக முழுவதும் அர்ப்பணிக்க சொல்லும் ஒரு நிலையில் இருக்கும் பட்சத்தில்.
சர்ச் கட்டுவதற்கு தடங்கலாக இருக்கும் குடும்பம் இடத்தை காலி செய்துவிட்டு ஓட வேண்டும், பயித்தியம் பிடித்து அலைய வேண்டும் தனக்கும் தன குடும்பத்துக்காகவும் இடைஞ்சலாக இருப்பவன் நிர்மூலமாகி போகவேண்டும் என்றெல்லாம் ஜெபிக்கும் ஜெபம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)