இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முதன்மையாய் இருக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!!


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
முதன்மையாய் இருக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!!
Permalink  
 


கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டவாதாக..! 

இன்றைக்கு நம்மில் அநேகர் முதன்மையாய் இருக்கவே விரும்புகிறார்கள் அவரவர்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றபடி, வாழும் தன்மைக்கு ஏற்றபடி தங்களை காண்பிக்கவும் மாற்றிக்கொள்ளவும் விரும்புகிறார்கள் ஆனால் உண்மையில் அதனுடைய உண்மை தன்மையை அறியாமல் இருப்பது ஆபத்தானதே என்பதையே தெளிவுபடுத்த விரும்புகிறேன். வேதத்தில் நடந்த சம்பவத்தை இங்கு எழுத விரும்புகிறேன்.

கர்த்தர்தாமே உதவி செய்வாராக !

1 சாமுவேல் 15 : 3 ல் கர்த்தர் சவுல் செய்யும்படி கூறினது.

இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

1 சாமுவேல் 15 ; 8 , 9 ல் சவுல் செய்தது.

அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம் பண்ணினான்.

9   சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்.

நமக்கு தெரிந்து ஒரு அலுவலகத்திலோ அல்லது ஒரு சபையிலோ அல்லது ஒரு வீட்டிலோ எந்த ஒரு இடமாய் இருந்தாலும் அங்கு முதன்மையாய் இரூக்கிரவர்கலிடதிலெ முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படும். அப்படிதான் சவுலுக்கும் கர்த்தரால் மிக முக்கியமான ஒரு காரியத்தை செய்யும்படி சாமுவேல் மூலமாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த வார்த்தையை முழுவதுமாய் நிறைவற்றாமல் போன சவுலுடைய நிலைமையை நாம் அனைவரும் அறிந்ததே...!

23 ஆம் வசனத்தின்படி 

நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

ஓவ்வொரு மனிதனுக்கும் அவனவனுடைய  தகுதிற்கு ஏற்றபடி தேவனால் பொறுப்புகள் கொடுக்கபடுகிறது ஆனால் இன்றைக்கு நம்போன்ற சக மனிதர்கள் பெரிய தகுதியையும் மேன்மையையும் விரும்புகிறார்களே தவிர அதற்கு ஏற்றபடி தனக்கு நியமிக்கபடுகிற காரியங்களை நிறைவேற்றமால் போவதினால் வரக்கூடிய ஆபத்தை அறிய மறந்து விடுகிறார்கள்;

அதுமட்டுமல்லாமல் தான் செய்கிறதை தன்னுடைய பார்வையில் நியாயமாய் இருக்கிறதை கர்த்தரும் ஏற்று கொள்வார் என்று நினைத்து காரணங்களை சொல்ல முயலுகிறார்கள்.

13 சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

14  அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.

15  அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.

நாம் கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் படித்து அதின்படி நடவாமல் நம்முடிய மனதின்படி நடந்து விட்டு எவ்வளவு பெரிய காரணங்களையும் சாக்குபோக்கு சொன்னாலும் அதை கர்த்தர் எற்பவறல்ல...

22.  அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். 

 



-- Edited by Stephen on Thursday 6th of August 2015 01:24:42 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard