இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதியாகமம் 1:1 ன் விளக்கம் என்ன?


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
ஆதியாகமம் 1:1 ன் விளக்கம் என்ன?
Permalink  
 


வேதாகம விளக்கங்கள் - (Pr.Charles MSK)

ஆதியாகமம் 1:1

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

விளக்கம் :-

1). பேரண்டத்திற்க்கு ஆரம்பம் (ஆதி) இல்லை என்று அறிவியல் வல்லுநர்கள் நீண்ட காலமாக கூறி வேதம் கூறி "ஆதியிலே" என்ற ஒன்று இல்லவே இல்லை எனவே இது உண்மை அல்ல கதை என சாதித்து வந்தனர்.

ஆனால் "பெரும் வெடிக் கோட்பாடு" (Big bang Theory) கண்டுபிடிக்கப்பட்ட பின்பு பேரண்டத்திற்க்கு ஆரம்பம் (ஆதி) உண்டு என்பதை இன்றை அறிவியல் வல்லுநர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.

2). யோவா 1:1 இல் ஆதியிலே வார்த்தை இருந்தது என்று எழுதப்பட்டிருப்பதால் இந்த ஆரம்பத்திற்க்கு முன்பே "வார்த்தை" இருந்தார் என்பது தெளிவு.

3). ஆதி என்ற சொல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை குறிப்பிடாமல் வானத்தை படைக்க தொடங்கியது முதல் மனிதனை படைத்து முடித்தது வரையுள்ள கால இடைவெளியைக் குறிக்கிறது.

இது எத்தனை ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது எப்பொழுது முடிவடைந்தது என குறிப்பிடப்படவில்லை.

ஆனால் பூமி உருவாக்கப்படும் பொழுது விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) இருந்தன என்று யோபு 38:4-7 வசனங்கள் கூறுகிறது.

யோபு
38 அதிகாரம்

4. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

5. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

6. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?

7. அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

எனவே விண்மீன்களை படைத்த பின்பு தான் தேவன் பூமியை படைத்தார் என்பது தெளிவாகிறது.

சூரியனும் ஒரு விண்மீன் என்பதால் அதுவும் பூமி படைப்பதற்க்கு முன்பே படைக்கப்பட்டது.

(அது எப்படி நாளாம் நாள் தானே தேவன் சூரியனை உண்டாக்கினார் என்று ஆதி 1:14-19 வசங்கள் கூறுகிறது? என்ற உங்க கேள்வி நியாயமானது தான் அதற்கான விளக்கத்தை ஆதி 1:2 வசனங்களை பார்க்கும் போது தெளிவு படுத்துகிறேன்.)

பூமி படைக்கப்படும் போது விண்மீன்கள் இருந்தன என்பதால் பூமியை படைப்பதற்க்கு முன்பே ஒளி இருந்தது என்பதும் தெளிவாகிறது.

4). "தேவன்" இருக்கிறார் என்ற அடிப்படை உண்மையை வேதம் ஆதாரமாக கொண்டுள்ளது.

"தேவன்" என்று இவ்வசனத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள "ஏலோஹீம்" (Elohim) என்ற எபிரெய சொல் ஒருமையாகவும் பன்மையாகவும் பயன்படுத்தக் கூடியது.

அநேக வேத வல்லுனர்கள் இந்த வசனத்தில் உள்ள தேவன் என்பதற்கான எபிரெய பதமான ஏலோஹீம் என்பது பன்மையில் பயன்படுத்தபடுகின்றது என்கின்றனர்.

ஆரம்பம் பன்மை என்றாலும் முடியும் போது ஒரு மையில் முடிகிறது.

இந்த வசனம் எபிரெய மொழியிலுள்ள வடிவத்தை கீழே தருகிறேன்

"ஆதியிலே ஏலோஹீம் (பன்மை: தேவர்கள்) வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்".

இங்கே தேவர்கள் என்று ஆரம்பித்து "சிருஷ்டித்தார்" என ஒருமையில் முடிகிறது.

படைப்பில் திரித்து தேவனின் செயல்பாட்டை இது தெளிவுப்படுத்துகிறது.
5). மூன்று வானங்களை குறித்து வேதம் கூறுகிறது (2 கொரி 12:2).

II கொரிந்தியர்
12 அதிகாரம்

2. கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

பவுல் தன் அனுபவத்தை பதிவு செய்யும் போது மூன்றாம் வானத்தை குறித்து கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் மேகமண்டலம் வரையுள்ள ஆகாய மண்டலம் முதலாம் வானம் என கருதப்படுகிறது.

எல்லா விண்மீன்களையும் உள்ளடக்கிய பேரண்டம் இரண்டாம் வானம் என்கின்றனர்.

பிதாவாகிய தேவன் சிங்காசனத்தின் மீது அமர்ந்து இருக்கும் தொழுகை (ஆராதனை) இடம் மூன்றாம் வானம் என்று கூறுகின்றனர்.

மூன்றாம் வானம் வட திசையில் துருவ விண்மீனுக்கு அருகிலுள்ள ஒரு கோள் (உலகை போன்ற இடம்) என்று கருதப்படுகிறது.

6). நாம் வாழும் பூமியானது சூரியன் என்று நாம் அழைக்கும் ஒரு நடுத்தர அளவான விண்மீனை சுற்றிவரும் கோள்களில் ஒன்று.

சூரியனும் பல கோடி விண்மீன்களும் அடங்கிய நம் குழுமம் (பால்வழி குடும்பம் - Milky way galaxy) மணிக்கு சுமார் 8,00,000 கி.மீ. வேகத்தில் சுழன்ற போதிலும் சுமார் 20 கோடி ஆண்டுகளில் தான் ஒரு சுழற்ச்சியை முடிக்கும்.

சிறிதும் பெரிதுமான கோடான கோடி குழுமங்கள் பேரண்டத்தில் இருக்கின்றன.

மேலும் அநேக ஒன்மீன் படலங்களும் (Nebula), கருந்துவாரங்களும் (Balck holes) எண்ணற்ற கோள்களும் நாம் அறியாத இன்னும் பல பொருட்களும் பேரண்டத்தில் உண்டு.

இவையாவும் ஆச்சர்யப்படதக்க விதமான ஒழுங்கோடும் சிறப்போடும் இயங்கி வருகின்றன.

பேரண்டத்தை படைப்பதற்க்கு முன்பே இருக்கிற தேவன் தொடர்ந்து உயிரோடு இருப்பதுடன் தனது படைப்புகளிலிருந்து வேறுபட்டவர். ஆமென்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard