2. இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
3. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
4. யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
விளக்கம்:-
1-4. இந்த புத்தகத்தின் வெளிப்பாடு தேவனிடமிருந்து இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புவிக்கப்பட்டு அவருடைய தூதன் வழியாக யோவானுக்கு கொடுக்கப்பட்டு அவர் வாயிலாக ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டு தேவனுடைய ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டது.
முதலாவதாக இது ஆசியாவிலிருந்த ஏழு சபைகளுக்கு எழுதி அனுப்பப்பட்டது.
இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஆசியா என்பது சின்ன ஆசியா (ஆசியா மைனர்) என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இப்பொழுதுள்ள துருக்கியின் ஒரு பகுதியாகும்.
வசனம் 4:
ஏழு ஆவிகள்:-
பரிசுத்த ஆவியானவர் ஒருவரே (எபே 4:4).
எபேசியர் 4 அதிகாரம்
4. உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு;
ஏழு என்ற எண் முழுமையை குறிக்கும் எண் என்றதால் முழுமையுள்ளவராகவும் குறைவற்றவராகவும் ஆற்றல் நிறைந்தவராகவும் காணப்படும் ஆவியானவர் "ஏழு ஆவிகள்" என்று குறிக்கப்பட்டுள்ளார் என கருதலாம்.
இதற்க்கு மாறாக ஏழு ஆவிகள் என்பது தேவனுடைய சிங்காசனத்திற்க்கு முன் மிகவும் அருகாமையில் நிற்க்க வைக்கப்பட்டுள்ள ஏழு சிறப்பான தேவதூதர்கள் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.
ஆனால் அவ்வாறு இருந்தால் அந்த தேவ தூதர்களிடமிருந்து கிருபையும் சமாதானமும் உண்டாவதாக என்று வசனம் 5ல் கூறப்பட்டிருக்காது.