7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தார் எல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
விளக்கம்:-
மேகங்கள் மேல் எடுத்துக் கொள்ளப்பட்ட கர்த்தர் அப்படியே மறுபடியும் வருவார் (அப் 1:9-11)
அப்போஸ்தலர் 1 அதிகாரம்
9. இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
10. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:
11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறிக்கிறது.
கண்கள் யாவும் கானும்:-
உலக மக்கள் யாவரும் அவரை காண்பது நடக்க கூடியதல்ல என்று பலர் கூறினர். கடந்த நூற்றாண்டில் தொலைகாட்சிப் பெட்டி கண்டுபிடிக்கும் முன்பாக உலக மக்கள் யாவரும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை காண்பது கூடாத காரியமாய் இருந்தது.
உலகின் ஒரு பகுதியில் நடக்கும் போர், விளையாட்டு, விழா ஆகியவற்றை அச்சமயமே உலகெங்கும் தொலைகாட்சியில் காணும் காலம் இது.
கிறிஸ்துவின் வருவதை தொலைகாட்சியில் காட்டவேண்டும் என்று சில குழுக்கள் ஆயத்தமாக இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்.
எனவே, உலகின் எல்லா பகுதி மக்களும் நேரில் அல்லது தொலைகாட்சியில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை காணப்போகிறார்கள். கண்டு புலம்ப போகிறார்கள்.
குத்தினவர்களும் காண்பார்கள்:-
குத்தினவர்கள் என்பது குத்தினவர்களின் பின் சந்ததினரையும் பாவத்தில் இருப்பவர்களையும் குறிக்கும் (சகரி 12:10)
சகரியா 12 அதிகாரம்
10. நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
மேலும்,
குத்தினவர்கள் என்ற வார்த்தை கிறிஸ்துவர்களை துன்பப் படுத்துகிறவர்களையும் கிறிஸ்துவ ஊழியர்களுக்கு எதிராக செயல் படுகிறவர்களையும் குறிக்கும்.
எப்படி என்றால்,
அப் 9:5 வசனங்களை வாசிக்கும் போது
அப்போஸ்தலர் 9 அதிகாரம்
1. சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;
2. இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.
3. அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;
4. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
5. அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
இந்த வேத பகுதியில் சவுல் கிறிஸ்துவை அல்ல, கிறிஸ்துவர்களை தான் துண்பபடுத்தினான் ஆனால், இயேசு கூறிம் போது "நீ துண்பப்படுத்துகிற கிறிஸ்து நானே" என்றார்.
இந்த வசனங்களின் அடிப்படையில் "குத்தினவர்கள்" என்பதை கிறிஸ்தவர்களை எதிர்கிறவர்கள், துண்பப் படுத்துகிறவர்கள், கொலை செய்கிறவர்கள் போன்றை குறிக்கும் என கருதலாம்.