இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனிதனின் முடிவு - பாகம் 1


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
மனிதனின் முடிவு - பாகம் 1
Permalink  
 


மனிதனின் முடிவு
(தொடர் கட்டுரை சார்லஸ் M.சதீஷ்குமார்)

பாகம்-I

I. கர்த்தருக்குள் இல்லாதோர் (துண்மார்க்கர்) முடிவு:-

இந்த உலகத்தில் பிறந்த முதல் மனிதன் ஆதாம் தொடங்கி இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை உள்ள மனிதர்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்ச்சகராக ஏற்று கொள்ளாமல் இரட்ச்சிப்பை பெறாமல் மரணமடையும் மனிதர்களின் முடிவை குறித்து வேதம் கூறுகிறது.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் துண்மார்கமாய் வாழ்ந்து மரணமடைவோரின் உள்ளான மனிதன் பாதாளத்தில் சேர்க்கப்படுகிறான் என்று லூக்கா 16:19-31 வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

லூக்கா 16:19-31

19. ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.

20. லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,

21. அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.

23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.

25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.

27. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,

28. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.

30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.

31. அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.

மேலே வாசித்த வசனங்களுக்கு இப்பொழுது விளக்கங்களை காண்போம்.

லூக்கா 16:19-31 இந்த பகுதியில் விவரிக்கப்படும் லாசரு ஐஸ்வரியவான் சம்பவம் உவமையாக கூறப்பட்டவை அல்ல. அது ஒரு உண்மையான நிகழ்ச்சி என்று பெருவாரியான வேத வல்லுனர்கள் நம்புகின்றனர். பாதாளம், பரதீசு (ஆபிரகாமின் மடி) என்பவற்றை குறித்த பல குறிப்புகள் இப்பகுதியில் உள்ளன.

அ. 16:19-22- இதில் உலகில் ஆடம்பரமாக, மிகவும் வசதியாக வாழ்ந்த இந்த செல்வந்தர் மரணமடைந்தபின், மறு உலகில் அவரைச் சந்திப்பதற்க்குத் தேவதூதர்கள் வரவில்லை.

ஆனால் ஏழையாகவும் பசியுள்ளவனாகவும் நோயுற்றவனாகவும் இருந்த லாசரு மரணமடைந்ததும் தேவதூதர்களால் ஆபிரகாமின் மடிக்கு அழைத்து செல்வதை காண்கிறோம்.

இருவரின் நிலையும் தலைகீழாக மாறியதை கவனியுங்கள்.

அநேகருடைய நிலை இவ்விதமாக மாறப்போகிறது. பெரிய பதவியில் இருந்தவர்கள், செல்வந்தர்கள், செல்வாக்குடையவர்கள், புகழ் பெற்றவர்கள் ஆகியோர் ஒரு சொட்டு தண்ணீருக்காக கெஞ்சும் காலம் வரபோகிறது. இந்த நிலை நமக்கு வராமலிருக்க கவனமாய் இருப்போமாக.

ஆ. 16:22-31 இதில் பாதாளத்தில் இருப்பவர்களுக்கு (உள்ளான மனிதனுக்கு) கண், வாய், நாக்கு, கைவிரல்கள், ஞாபகசக்தி, உணர்ச்சிகள், குரல், அறிவு ஆகியவை கொண்ட ஆவியான அமைப்பு உண்டு. உள்ளான மனிதன் அழியாமையை கொண்டவன் என்பதை தெளிவு படுத்துகிறது.

இ. 16:22-23 இங்கு கூறப்படும் ஆபிரகாமின் மடியில் இருப்பது என்றால் ஆபிரகாமுடன் நெருங்கிய உறவுடனிருத்தல், அவரது அருகாமையில் இருத்தல் என்று பொருள் ஆகும்.

ஈ. 16:22 இந்த வசனம் கூறுவது என்னவென்றால், மரணமடைந்தவர்களின் உடலின் பாகங்கள் மட்டுமே அழிந்து போகும்.

ஆவி, ஆத்துமாவான உள்ளான மனிதன் மரணமடைவதில்லை.

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்பட்ட பரதீசிற்க்கு தேவதூதரால் கொண்டுபோகப்பட்டு அங்கு மகிழ்ச்சியாக இளைப்பாறும்படி வைக்கப்பட்டனர்.

உள்ளான மனிதன் தேவதூதரால் கொண்டு செல்லப்படக்கூடிய ஒரு நபர் என்பதை கவனியுங்கள்.

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட மனம்திரும்பிய கள்ளன் இயேசுவோடு இங்கு தான் சென்றான். (லூக் 23:43)

லூக்கா 23:43
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

புதிய ஏற்பாட்டின் காலத்தில் (இயேசு உயிர்த்தெழுந்த பின்னர்) கர்த்தருடைய பிள்ளை மரணமடையும் போது அவரது உடல் அடக்கம் பன்னப்படுகிறது. உள்ளான மனிதராகிய அவர் பிதாவாகிய தேவனும் கிறிஸ்துவும் இருக்கும் இடத்திற்க்கு நேரடியாக செல்கின்றனர். (அப்7:56-59; 2கொரி5:8; பிலி1:21-24; எபி12:22-24; வெளி6:9-11.)

பரதீசு இப்பொழுது காலியாக உள்ளது. (மத்27:52-53; லூக்23:43)

மேலே உள்ள வசனங்களை எழுத இந்த பாகத்தில் இடம் இல்லை தயவாய் படித்து பாருங்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard