——————————— ஆதாம் ———————————— உலகின் முதல் மனிதராக, தேவனால், மண்ணை பயன்படுத்தி படைக்கப்பட்டவர் தான் இந்த ஆதாம் ஆவார். ஆதாம் என்ற பெயருக்கு"செம்மண்"என்று அர்த்தமாகும்.
இவர் குழந்தை பருவத்தை அறியாதவர்,
=>தாய், தந்தை, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் பாசத்தை அனுபவிக்காதவர்,
=>அனால், தேவன் தாமே இவரோடு நேரடியாக பழகி இவருக்கு துணைவராயிருந்தார்.
தேவன் ஏவாளை படைத்து இவரிடம் கொண்டு வந்து இவருக்கு ஏற்ற துணையாக அளித்தார்.
ஆதாமோ தனக்கு யாவையும் அளித்த தேவனை நேசிப்பதைவிட தேவன் அளித்த தனது மனைவியை அதிகமாக நேசித்ததால், மனைவி தந்த கனியை பெற்றுக்கொண்டு, அதை உண்பது தவறு என்று அறிந்திருந்த போதும் துனிகரமாக அதை உண்டார். (குறிப்பு):- இன்றும் மனிதர்கள் தேவனை அல்ல, அவர் அளித்துள்ள மனைவி, பிள்ளைகள், ஆஸ்தி, அந்தஸ்து, பட்டம், பதவி....., ஆகியவற்ற தான் அதிகமாக நேசிக்கின்றனர். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.... சிந்தித்து பாருங்கள். ஆதாமின் நற்பண்புகள்:- * தேவனுடைய சாயலாகவும் ரூபத்தின் படியும் சிருஷ்டிக்கப்பட்டவர். * விலங்குகளுக்கு பெயர் அளித்தார் இது அவர் அறிவில் சிறந்தவர் என்பதை காட்டுகிறது. * தேவனோடு நெருங்கி உறவு கொண்டிருந்தவர். * ஏதேனிலிருந்து துரத்தப்பட்டபின் தேவனை விசுவாசித்து தனது மனைவிக்கும் பெயரிட்டார். (ஆதி 3:)20) * ஏதேனிலிருந்து வெளியேறிய பின் மனந்திரும்பினார். (ஆதி4:)1-4,25) ஆதாமின் பெலவீனங்கள்:- * ஏவாளின் வேண்டுகோளுக்கு இனங்கி பாவம் செய்தது. * தான் செய்தது தவறு என்று அறிந்திருந்தும் அதை ஒப்புக்கொள்ளாமல் மற்றவர்களை குற்றம் சாட்டுதல். ஆதாம் வாழ்ந்த இடங்கள்:- ஏதேன் தோட்டமும், அதற்க்கு வெளியிலும். குடும்ப விவரம்:- மனைவி: ஏவாள், பிள்ளைகள்: காயீன், ஆபேல், சேத், அநேக மகன்களும், மகள்களும். மேலும் ஆதாமை குறித்து படிக்க வாசியுங்கள்: ஆதி1:26-5:5; உபா32:8; 1நாள1:1; யோபு31:33; லூக்கா3:38; ரோமர்5:14; 1கொரி5:22,45-49; 1தீமோ2:13-14; யூதா14.
————————— ஏவாள் ——————— =>தேவனுடை கடைசி படைப்பாக படைக்கப்பட்டவர் தான் இந்த ஏவாள். =>ஏவாள் தான் உலகின் முதல் பெண் ஆவார். =>மனுகுலத்திற்க்கு தாயும் இவரே ஆவார். =>குழந்தை பருவம், தாய், தந்தை, உறவினர் இல்லாதவர். =>உருவாக்கப்பட்ட உடனே திருமணம் செய்யப்பட்டவர். =>எளிதில் ஏமாந்து போனவர். =>தேவன் தடை வித்தித்திருந்த கனியை புசிக்க விரும்பினவர். =>தன் கனவனையும் பாவம் செய்ய தூண்டினவர். நற்பண்புகள்:- * மனிதனுக்கு இனையாகவும் துணையாகவும் படைக்கப்பட்டவர். * கணவனுடன் சேர்ந்து தேவனுடன் உலாவினவர். * ஏதேனிலிருந்து துரத்தப்பட்டபின் வேதனையுடன் பிள்ளை பெற்ற போதிலும் தனது பிள்ளைகளை தேவன் தந்த ஈவுகளாக ஏற்றுக்கொண்டவர் (ஆதி4:1,25). * ஏதேனிலிருந்து துரத்தப்பட்டபின் மனம் திரும்பினவர் (ஆதி3:20;4:1-4,25). பெலவீனங்கள்:- * பாம்பின் சொற்க்களை நம்பியது. * தேவனுடைய கட்டளையை மீறியது. * தான் பாவம் செய்ததோடு அல்லாமல் தன் கணவனையும் பாவம் செய்ய தூண்டியது. * தனது தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் பாம்பை பழித்தது. வாழ்ந்த இடங்கள்:- ஏதேன்தோட்டம், ஏதேனுக்கு வெளியே. குடும்ப விவரம்:- கணவன்: ஆதாம், பிள்ளைகள்: காயீன், ஆபேல், சேத், அநேக மகன்கள், அநேக மகள்கள். குறிப்பு:- * ஏவாளின் மரணம் குறித்து வேதத்தில் எந்த குறிப்பும் குறிப்பிடவில்லை. ஏவாளை குறித்து மேலும் அறிய வாசியுங்கள்: ஆதி 2:19-4:26; 2கொரி 11:3; 1தீமோ 2:13-14.