இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேத ஆராய்ச்சி - ஆதி 1:2


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
வேத ஆராய்ச்சி - ஆதி 1:2
Permalink  
 


வேத ஆராய்ச்சி - (Pr.Charles MSK)

ஆதியாகமம் 1:2

2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.

1). ஆதி 1:1 இற்கும் ஆதி 1:2 இற்கும் இடையில் பல நிகழ்ச்சிகள் நடை பெற்றன அவைகளை கவணிப்போம்.

தேவன் பூமியை படைக்கும் பொழுது விண்மீன்கள் பாடியதையும் தேவ புத்திரர் (தேவதூதர்) ஆர்ப்பரித்ததையும் (யோபு 38:4-7) கவணித்தால் அதை வெறுமையாக படைக்காமல் நன்றாகவே படைத்தார் என்று அறியலாம் (ஏசா 45:18) (யோபு 38:4-7 ன் சம்பவங்களை படிக்க ஆதி 1:1 ஆராய்ச்சியை படியுங்கள் https://m.facebook.com/story.php?story_fbid=627218637420825&id=548639085278781&refid=17)

ஏசாயா
45 அதிகாரம்

18. வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகியகர்த்தர்சொல்லுகிறதாவது: நானேகர்த்தர், வேறொருவர் இல்லை.

தேவன் எதையும் நல்லது என காணும்படி படைக்கிறவர். பூமியை படைத்த தேவன் அதை தேவதூதர்களில் ஒரு பகுதியினரின் பொறுப்பில் விட்டு வைத்திருந்தார்.

பூமியில் இருந்த பிரதான தூதனான லூசிபர் தன்னுடன் பல தேவதூதர்களை சேர்த்துக்கொண்டு தேவனுக்கு விரோதமாக புரட்சி செய்து தோற்கடிக்கப்பட்டான் (ஏசா 14:12-14; எசே 28:11-17).

ஏசாயா
14 அதிகாரம்

12. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

எசேக்கியேல்
28 அதிகாரம்

11. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

12. மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி:கர்த்தராகியஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

13. நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

14. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

15. நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.

16. உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.

17. உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

அப்பொழுது தேவன் அளித்த தன்டனையின் ஒரு விளைவாக பூமியின் மீது ஒளிப்படுவது தடை செய்யப்பட்டது (யோபு 38:9; ஆதி 1:2).

யோபு
38 அதிகாரம்

9. மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,

இவ்வாறு ஒளியை தடை செய்வது தேவனுடைய தன்டனைகளில் ஒன்று என்பதை (யாத் 10;21; எரே 4:23; யோவே 2:31; வெளி 6:12; 8:12; 9:2; 16:10) ஆகிய பகுதிகளில் காணலாம்.

பூமியின் மீது ஒளி தடை செய்யப்பட்டதால் இருள் மட்டுமின்றி வெப்ப குறைவும் ஏற்பட்டு உலகெங்கும் பனிபடர்ந்து பனிகட்டி காலம் (Ice age) ஏற்பட்டது.

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பனிகட்டி காலம் இருந்தது என்று அறிவியல் கோட்பாடு கூறுகிறது.

அப்போது இருந்த தாவரங்கள், விலங்கினங்கள் (டைனாசர் போன்றவை) யாவும் அழிந்தன. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிற்று.

இந்த அழிவிற்க்கு முன் பல ஆண்டுகள் பூமி இருந்திருக்க கூடும். பனிகட்டி காலம் எவ்வளவு ஆண்டுகள் நீடித்தன என்பதும் நமக்கு தெரியவில்லை. பூமி படைக்கப்பட்டு பல இலட்சம் (கோடி) ஆண்டுகள் ஆயின என்று அறிவியல் கூறுகின்றது.

II). ஒளி தடை செய்யப்பட்டிருந்த போது வச.2ன் படி இருளில் இருந்த பூமியை சீரமைக்கும் பணியில் ஆவியானவர் செயல்பட்டார். இயேசு கிறிஸ்துவும் படைப்பில் ஈடுபட்டதை (யோவா 1:3; கொலோ 1:16) பகுதியில் காண்கிறோம.

யோவான்
1 அதிகாரம்

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

கொலோசெயர்
1 அதிகாரம்

16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப் படுகிறவைகளும் காணப் படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத் துவங்களானாலும், துரைத் தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

III). ஆவியானவர் பூமியின் மீது அசைவாடியது வெளிச்சம் உண்டாவதற்கு முன்பு நடந்தது. எனவே, முதலாம் நாளாயிற்று என்று கூறப்பட்டிருப்பது இந்த யுகத்தின் முதலாம் நாளையே குறிக்கிறது. ஆவியானவர் பூமியின் மீது அசைவாடிய காலமும் பூமி படைக்கப்பட்ட காலமும் இந்த முதலாம் நாளுக்கு முந்தையவை ஆகும். இதை ஆதி 1:5 வசனத்தை ஆராயும் போது தெளிவாக விவரிக்கிறேன்.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அன்பான சகோதரர் அவர்களே தங்கள் வேத ஆராச்சி அருமையாக உள்ளது . தங்களுக்கு இவ்வளவு ஆழ்ந்த ஞானத்தை கொடுத்த தேவனை துதிக்கிறேன். 
 
ஒரு கேள்வி,
 
சாத்தானின் வீழ்ச்சி எப்பொழுது நடந்திருக்கும் என்று தாங்கள் அனுமானிக்கிறீர்கள்?  ஏதாவது வசன ஆதாரத்தோடு தாருங்கள்.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

அண்ணா இது இவருடைய சொந்த கட்டுரையல்ல. Dr.ஆல்ஃபிரட் தேவதாசன் ஐயா எழுதிய வாழ்வியல் விளக்க வேதாகமத்தில் உள்ள கட்டுரை. இவர்  பதிவு செய்துள்ள பல கட்டுரைகள் அங்கிருந்து பெறப்பட்டவையே. 

இப்படி மற்றவர்களின் புலமைச் சொத்தை களவாடுதல் தண்டணைக்குரிய குற்றம். நாம் பல வேளைகளில் உலகத்தவர்களை விட மேசமாக நடந்து கொள்கிறோம்.no  இவர் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் தன்னுடைய சொந்த பெயரையும் போட்டு தன்னுடைய புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். அட்லீஸ்ட் இதை எங்கிருந்து பெற்றேன் என்றாவது போட்டிருக்கலாம். இணையத்திலிருந்து பெற்றிருந்தால் அதையாவது தெரிவித்திருக்கலாம். 



__________________

.................................................. எப்போதும் நான் ஒரு வேதாகம மாணவனே  ...............................................



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

அப்படியா பிரதர். நீங்கள் சொன்னபின்னர்தான் தெரிகிறது.

"படித்து ரசித்த பயனுள்ள செய்திகள்" பகுதியில் போட்டிருக்கலாம் அல்லது தொடக்கத்தில் அல்லது இறுதியில் எழுதியவர் பெயரை குறிப்பிட்டிருக்கலாம்

anyway, leave it நமக்கு சில நல்ல செய்திகள் கிடைத்தது.

நான் விளக்கம் அறிய கேட்ட ஒரு சிறு கேள்விக்கும் அவர் பதில் தராதது வருத்தமே.

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

நாம் தியானித்து எழுதிய ஆக்கங்களாக இருந்தால் கேள்விகளுக்கு பதில் கொடுக்க கூடியதாக இருக்கும். இன்னொருவரின் கருத்துக்களை பதிவதால் மாற்றுக் கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போய் விடுகிறது. நானும் இந்த தவறை செய்து மாட்டி திருந்தியிருக்கிறேன்..



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard